IPL 2026: போக்சோ வழக்கில் சிக்கிய வீரர்.. விரைவில் கைதா..? ஆர்சிபி அணிக்கு ரூ. 5 கோடி நஷ்டமா?
RCB player Yash Dayal: யாஷ் தயாள் சிறைக்குச் செல்வதற்கான வாய்ப்புகள் குறைவாகவே கருதப்படுகின்றன. ஏனெனில் அவருக்கு உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் வாய்ப்பு இன்னும் உள்ளது. இருப்பினும், கடுமையான பாலியல் வன்கொடுமை வழக்கில் அவரது பெயர் சிக்கியுள்ளதால், யாஷ் தயாள் சிறிது காலமாக ஐபிஎல் உள்பட கிரிக்கெட் களத்திலிருந்து விலகி இருக்கலாம்.
ஐபிஎல்லில் (IPL) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக (Royal Challengers Bengaluru) விளையாடி வரும் யாஷ் தயாள் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் கடந்த சில மாதங்களாக சுமத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில். ஜெய்ப்பூர் பெருநகர முதல்நிலை போக்சோ நீதிமன்றம் எண். 3 நேற்று அதாவது 2025 டிசம்பர் 24ம் தேதி யாஷ் தயாள் மீதான முன்ஜாமீன் மனுவை நிராகரித்தது. யாஷ் தயாள் காதலிப்பதாக பொய் கூறி மைனர் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதன்கீழ் இவர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து, யாஷ் தயாள் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கூறப்படுகிறது.
ALSO READ: உள்நாட்டு கிரிக்கெட்டிலும் உயர்ந்த சம்பளம்.. மகிழ்ச்சியில் மகளிர் வீராங்கனைகள்.. அசத்தும் பிசிசிஐ!




நீதிமன்றம் கூறியது என்ன..?
வழக்கை விசாரணையில் தற்போது கிடைத்துள்ள ஆதாரங்கள் மற்றும் இதுவரையிலான விசாரணையின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்டவர் பொய்யாக குற்றம் சாட்டப்பட்டதாகத் தெரியவில்லை என்று நீதிமன்ற நீதிபதி அல்கா பன்சால் தனது தீர்ப்பில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். அதில், பாதிக்கப்பட்டவரிடம் குற்றம் சாட்டப்பட்டவரின் சில செயல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுதொடர்பான விசாரணை இன்னும் நிலுவையில் உள்ளதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, யாஷ் தயாள் கைது செய்யப்படுவார் என்ற சூழல் நிலவுகிறது.
தற்போது, யாஷ் தயாள் சிறைக்குச் செல்வதற்கான வாய்ப்புகள் குறைவாகவே கருதப்படுகின்றன. ஏனெனில் அவருக்கு உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் வாய்ப்பு இன்னும் உள்ளது. இருப்பினும், கடுமையான பாலியல் வன்கொடுமை வழக்கில் அவரது பெயர் சிக்கியுள்ளதால், யாஷ் தயாள் சிறிது காலமாக ஐபிஎல் உள்பட கிரிக்கெட் களத்திலிருந்து விலகி இருக்கலாம்.
வழக்குப்பதிவு செய்யப்பட்டது எப்போது..?
𝗖𝗹𝗶𝗺𝗮𝘅 𝗶𝗻 𝗬𝗮𝘀𝗵 𝗗𝗮𝘆𝗮𝗹 𝗥𝗮𝗽𝗲 𝗖𝗮𝘀𝗲: Multiple & repeated sexual assault allegations
The Jaipur POCSO Court has rejected the anticipatory bail plea of Indian cricketer Yash Dayal. The court observed that: “𝘐𝘵 𝘥𝘰𝘦𝘴 𝘯𝘰𝘵 𝘢𝘱𝘱𝘦𝘢𝘳 𝘵𝘩𝘢𝘵 𝘵𝘩𝘦… pic.twitter.com/JNqRZ4YD8D
— Jara (@JARA_Memer) December 25, 2025
ஜெய்ப்பூரில் உள்ள சங்கனேர் சதார் காவல் நிலையத்தில் 19 வயது பெண் ஒருவர் கடந்த 2025 ஜூலை 23ம் தேதி யாஷ் தயாள் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்திருந்தார். அந்த புகாரில் 2023 ஆம் ஆண்டு, 17 வயதில் யாஷ் தயாளைச் சந்தித்தேன். அப்போது, தனது கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடர உதவுவதாக உறுதியளித்து, யாஷ் தயாள் தன்னை உணர்ச்சி ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தினார். எங்களிடையேயான முதல் முதல் சம்பவம் 2023 ஆம் ஆண்டு ஜெய்ப்பூரில் உள்ள சீதாபுரா பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் நடந்ததாகவும், அங்கு யாஷ் தயாள் பாலியல் வன்கொடுமை செய்தார். இதன்பிறகு, தொடர்ச்சியாக யாஷ் தயாள் தன்னை 2 ஆண்டுகள் பயன்படுத்தி கொண்டதாக தெரிவித்தார்.
ALSO READ: இந்தியா முதல் இலங்கை வரை.. 2026 டி20 உலகக் கோப்பையில் பங்கேற்கும் அணிகளின் விவரம்!
ஐபிஎல் 2026ல் விளையாடுவாரா யாஷ் தயாள்..?
யாஷ் தயாள் மீது இவ்வளவு பெரிய குற்றச்சாட்டு எழுந்தபோதிலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அவர் மீது நம்பிக்கையில் தக்க வைத்துக் கொண்டுள்ளது. ஐபிஎல் 2024க்கு முன்பு ஆர்சிபி யாஷ் தயாளை தங்கள் அணியில் சேர்த்திருந்தது. அந்த நேரத்தில், அவர் ரூ. 5 கோடி விலைக்கு அணியில் சேர்க்கப்பட்டார். 2025ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை வெல்ல யாஷ் தயாள் முக்கிய பங்கு வகித்தார்.
தன் காரணமாக ஐபிஎல் 2026க்கும் அவரை தக்க வைத்துக் கொள்ள ஆர்சிபி முடிவு செய்துள்ளது. இருப்பினும், நடந்து வரும் சட்ட வழக்கு காரணமாக ஐபிஎல் 2026 சீசனில் யாஷ் தயாள் விளையாடுவாரா..? அவரது எதிர்காலம் என்ன என்பது கேள்விகுறியாகியுள்ளது.