AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026 Auction: கேமரூன் க்ரீனுக்கு பக்கா குறி.. ரூ. 25.20 கோடிக்கு தூக்கிய கொல்கத்தா அணி!

Kolkata Knight Riders: ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் வீரர் கேமரூன் க்ரீனை ரூ.25.20 கோடிக்கு கொல்கத்தா அணி ஏலம் எடுத்தது. முன்னதாக, ஐபிஎல் 2026 மினி ஏலத்தில் முதல் ஆளாக களமிறங்கிய ஆஸ்திரேலிய வீரரை மெக்குர்க்கை எந்த அணியும் ஏலத்தில் வாங்கவில்லை.

IPL 2026 Auction: கேமரூன் க்ரீனுக்கு பக்கா குறி.. ரூ. 25.20 கோடிக்கு தூக்கிய கொல்கத்தா அணி!
கேமரூன் க்ரீன்Image Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 16 Dec 2025 15:20 PM IST

ஐபிஎல் 2026 மினி ஏலத்தில் (IPL 2026 Mini Auction) ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் வீரர் கேமரூன் க்ரீனை (Cameron Green) ரூ.25.20 கோடிக்கு கொல்கத்தா அணி ஏலம் எடுத்தது. முன்னதாக, முதல் ஆளாக களமிறங்கிய ஆஸ்திரேலிய மெக்குர்க்கை எந்த அணியும் ஏலத்தில் வாங்கவில்லை. அதேநேரத்தில், தென்னாப்பிரிக்கா அணியின் அதிரடி வீரர் டேவிட் மில்லரை ரூ. 2 கோடிக்கு டெல்லி கேபிடல்ஸ் ஏலம் எடுத்தது. ரூ. 16.5 கோடியை மட்டும் வைத்திருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 13.20 கோடி வரை கேமரூன் க்ரீனுக்காக பந்தயம் கட்டியது குறிப்பிடத்தக்கது. மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் கடைசி வரை போராடி ரூ.25.20 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வாங்கியது.

ALSO READ: புதிதாக 19 வீரர்கள்.. பட்டியலை நீட்டித்த பிசிசிஐ.. எதிர்பார்ப்பை தூண்டும் ஐபிஎல் 2026 மினி ஏலம்!

கேமரூன் க்ரீன் எப்போது, ​​எந்த அணிக்காக ஐபிஎல்லில் விளையாடினார்?


2026 ம் ஆண்டு ஐபிஎல்லில் கேமரூன் க்ரீன் விளையாடும்போது ஐபிஎல் வரலாற்றில் அவரதுநான்காவது சீசனாக இருக்கும். முன்னதாக, கேமரூன் க்ரீன் கடந்த 2023ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியுடன் ஐபிஎல்லில் அறிமுகமானார். பின்னர், ஐபிஎல் 2024 மற்றும் 2025 சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடினார். இருப்பினும், ஐபிஎல் 2026 மினி ஏலத்திற்கு முன்பே ஆர்சிபி அவரை விடுவித்தது. இதன்காரணமாக, அதிக தொகைக்கு ஏலம் எடுத்ததன் அடிப்படையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக கேமரூன் க்ரீன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ALSO READ: சிஎஸ்கே அணிக்கு இந்த வரிசையில் சிக்கல்.. ஐபிஎல் மினி ஏலத்தில் யாரை குறிவைக்கும்..?

ஐபிஎல்லில் கேமரூன் க்ரீனின் சாதனை:


ஐபிஎல்லில் கேமரூன் க்ரீன் இதுவரை ஐபிஎல்லில் 29 போட்டிகளில் 28 இன்னிங்ஸ்களில் 707 ரன்கள் எடுத்துள்ளார். பந்து வீச்சில் 16 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவற்றில், க்ரீன் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 16 போட்டிகளில் விளையாடி 452 ரன்களுடன் 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். அதேநேரத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடிய இரண்டு சீசன்களில், கேமரூன் கிரீன் மொத்தம் 13 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் க்ரீன் 255 ரன்கள் எடுத்து 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஐபிஎல்லில் கேமரூன் கிரீன் ஒரு சதத்தையும் அடித்துள்ளார். இந்த சதமானது மும்பை இந்தியன்ஸ் அணிக்காக வந்தது.

Follow Us