ஐபிஎல் ஏலம்
உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் லீக், ஐபிஎல் அல்லது இந்தியன் பிரீமியர் லீக், 2008 முதல் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. பிசிசிஐ-ஆதரவு பெற்ற இந்தப் போட்டியில் ஐபிஎல் ஏலமும் அடங்கும், இதில் 10 அணிகள் நூற்றுக்கணக்கான வீரர்களை ஏலம் எடுக்கின்றன. ஏலத்தில், வீரர்களை ஏலம் எடுக்கும் அணிகள் அவர்களை வாங்க பணத்தை டெபாசிட் செய்கின்றன, மேலும் வீரர் அதிக ஏலம் எடுக்கும் அணிக்காக விளையாடுவார். ஐபிஎல் ஏலம் மிகவும் சிறப்பு வாய்ந்தது, ஏனெனில் வீரர்கள் வியக்கத்தக்க அளவில் பணம் சம்பாதிக்க முடியும். கிரிக்கெட் ரசிகர்களுக்குத் தெரியாத பல சிறிய வீரர்களும் இந்த ஏலத்தில் கோடிக்கணக்கான ரூபாய்களை சம்பாதிக்கிறார்கள். ஐபிஎல் ஏல வரலாற்றில் மிகவும் விலையுயர்ந்த வீரர் இங்கிலாந்தின் சாம் கரன் ஆவார், அவரை 2023 ஆம் ஆண்டில் பஞ்சாப் கிங்ஸ் ₹18.50 கோடிக்கு வாங்கியது. அவருக்குப் பிறகு கேமரூன் கிரீனை மும்பை இந்தியன்ஸ் ₹17.50 கோடிக்கு வாங்கியது. ஐபிஎல்லில் மிகவும் விலையுயர்ந்த இந்திய வீரர் யுவராஜ் சிங் ஆவார், அவர் 2015 ஆம் ஆண்டில் டெல்லி டேர்டெவில்ஸால் ₹16 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். சர்வதேச வீரர்கள் மட்டுமல்ல, ஒரு சர்வதேச போட்டியில் கூட விளையாடாதவர்களும் கூட ஏலத்தில் வியக்கத்தக்க தொகைகளைப் பெற்றுள்ளனர்.
ஐபிஎல் 2027.. இந்த 5 வீரர்களை வெளியேற்ற திட்டம்.. ஷாக் கொடுக்குமா அணிகள்?
IPL 2027 Retention : ஐபிஎல் 2027 மினி ஏலத்திற்கு முன்னதாக, ஃபிரான்சைஸ்கள் தங்கள் அணிகளில் முக்கிய மாற்றங்களைச் செய்யத் தயாராகி வருகின்றன. பத்து அணிகள் நவம்பர் 17 அன்று, தக்கவைக்கப்பட வேண்டிய மற்றும் விடுவிக்கப்பட வேண்டிய வீரர்களின் பட்டியலை வெளியிட உள்ளன.
- C Murugadoss
- Updated on: Nov 17, 2026
- 10:46 am IST
IPL 2027 Retention : ஐபிஎல் 2027.. வெளியேறும் வீரர்கள் யார் யார்? எங்கே மற்றும் எப்படி நேரலையில் பார்க்கலாம்?
IPL 2027 Retention Today LIVE Streaming : ஐபிஎல் 2027க்கான முன்னேற்பாடுகள் தொடங்கிவிட்டன. வரும் ஐபிஎல்க்கான வீரர்களைத் தக்கவைப்பதற்கான கடைசி நாள் இன்று. தக்கவைப்புப் பட்டியலை எங்கே பார்க்கலாம்? எத்தனை மணிக்கு ஒளிபரப்பாகும் உள்ளிட்ட கேள்விகள் அனைத்திற்கும் பதில்களைத் தெரிந்துகொள்ளுங்கள்.
- C Murugadoss
- Updated on: Nov 17, 2026
- 09:46 am IST
டிமாண்ட் அதிகம்.. ரூ.40 கோடி பிளான்.. இந்திய வீரர்களின் ஐபிஎல் பட்ஜெட் திட்டம்..
இந்தியன் பிரீமியர் லீக்கின் அடுத்த சீசனுக்கு முன்னதாக, ஃபிரான்சைஸ்கள் ஒரு பெரும் சவாலை எதிர்கொள்கின்றன. அதிலிருந்து மீள்வது மிகவும் கடினமாகத் தோன்றும் அளவுக்கு ஒரு மிகப்பெரிய நெருக்கடி அது. வீரர்கள் தங்களது டிமாண்டுக்கு ஏற்ப ஒரு குறிப்பிட்ட தொகையை நிர்ணயம் செய்வதாக தகவல். இதனால் ஐபிஎல் அணிகள் கலக்கத்தில் உள்ளன
- C Murugadoss
- Updated on: Nov 6, 2026
- 11:10 am IST
IPL 2027: சீக்ரெட்டாக வெளியான ஐபிஎல் 2027 மினி ஏல தேதி.. பிசிசிஐ திட்டம் இதுதான்!
IPL 2027 Auction Date: ஐபிஎல் 2027 ஏலம் டிசம்பர் 16, 2026 அன்று கோவாவில் உள்ள ஐடிசி கிராண்டில் நடைபெறும் என கிரிக்பஸ் தகவல் தெரிவித்துள்ளது. பிசிசிஐ தளவாடக் குழுவின் வாட்ஸ்அப் செய்தி மூலம் இத்தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் ஏலம் மீண்டும் இந்தியாவில் நடைபெறுவதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
- Mukesh Kannan
- Updated on: Oct 17, 2026
- 21:33 pm IST
IPL 2027: ஐபிஎல் 2027க்காக முக்கிய முடிவு.. அணிகள் விடுவிக்கப்போகும் வீரர்கள் பட்டியல்!
IPL 2027 Auction: ஐபிஎல் 2027க்கான ஆயத்தப் பணிகள் தொடங்கியுள்ளன. நவம்பர்/டிசம்பர் 2026 இல் நடைபெறவுள்ள ஏலத்திற்கு முன், அணிகள் தங்கள் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும். ராகுல் தெவாட்டியா, சூர்யகுமார் யாதவ், பிரித்வி ஷா, சர்பராஸ் கான் போன்ற முன்னணி வீரர்கள் மோசமான செயல்திறன் காரணமாக விடுவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
- Mukesh Kannan
- Updated on: Oct 16, 2026
- 21:23 pm IST
பும்ராவை கணிக்காத ஆர்சிபி.. 2014 ஐபிஎல் ஏலத்தில் நடந்த சம்பவம்.. பார்த்திவ் படேல் சொன்ன விஷயம்!
Jasprit Bumrah : 2013-ல் விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்தி ஐபிஎல்-லில் அறிமுகமான இளம் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, 2014 மெகா ஏலப் பட்டியலில் இடம்பெற்றபோது, பல அணிகளுக்கு அவரது உண்மையான மதிப்பும் திறமையும் தெரியவில்லை. அதனால்தான் ஆர்சிபி அவரை மிகவும் எளிதாக நிராகரித்தது என பார்த்திவ் படேல் குறிப்பிட்டுள்ளார்
- C Murugadoss
- Updated on: Oct 12, 2026
- 08:22 am IST
IPL 2027: கோவாவில் ஐபிஎல் 2027 ஏலம்.. இதுவே எங்கள் வியூகம்.. ட்விஸ்டை உடைத்த பிசிசிஐ!
IPL 2027 Auction: கடந்த மூன்று ஆண்டுகளாக சவுதி அரேபியா, துபாய் மற்றும் அபுதாபி போன்ற மூன்று சர்வதேச இடங்களில் ஐபிஎல் ஏலத்தை நடத்திய பிறகு, இந்த ஆண்டும் கோவாவில் ஏலம் நடைபெறும் என பிசிசிஐ செயலாளர் தேவாஜித் சாய்கியா கூறியுள்ளார்.
- Mukesh Kannan
- Updated on: Sep 23, 2026
- 20:23 pm IST
ஐபிஎல் 2027 ஏலம் எப்போது? இந்தியாவில் இந்த முறை.. நடக்கப்போவது என்ன?
IPL 2027 Auction : ஐபிஎல் 2027 ஏலத்துடன், ஐபிஎல் 2028 மெகா ஏலம் குறித்தும் ஒரு முக்கியத் தகவல் வெளியாகியுள்ளது. செப்டம்பர் 15ஆம் தேதி நடைபெற்ற ஐபிஎல் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த முறை ஐபிஎல் ஏலத்தில் நடக்கப்போகும் மாற்றங்கள் என்ன என்பதை பார்க்கலாம்
- C Murugadoss
- Updated on: Sep 16, 2026
- 14:47 pm IST
Hardik Pandya: முதலில் சிஎஸ்கே, இப்போது மும்பை.. தடுமாறும் ஹர்திக்.. அணிகள் தவிர்ப்பது ஏன்?
IPL Players Trade: ஐபிஎல் 2026 சீசன் முடிந்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், வீரர் பரிமாற்றம் குறித்த பிரச்சினை தற்போது எழுந்துள்ளது. ரிஷப் பந்த் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் முறையே லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளால் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும், மும்பை இந்தியன்ஸ் அணியுடனான ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தான் மிகப்பெரிய விவாதப் பொருளாக உள்ளார்.
- C Murugadoss
- Updated on: Aug 3, 2026
- 07:38 am IST
ஐபிஎல் ஏலத்துல யாரும் கண்டுக்கல.. இப்போ டாப் பவுலர்.. சாதித்த பிளெஸ்ஸிங் முசராபானி!
Blessing Muzarabani : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 226 ரன்கள் என்ற பிரம்மாண்டமான ஸ்கோரை பதிவு செய்தது. இருப்பினும், இந்த இன்னிங்ஸின் போது, கேகேஆர் அணியின் ஒரு பந்துவீச்சாளர் முக்கிய பேட்ஸ்மேன்களை ஆட்டமிழக்கச் செய்து, மிகச் சிறப்பாகச் செயல்பட்டார்.
- C Murugadoss
- Updated on: Apr 3, 2026
- 11:49 am IST
IPL 2026: மிரட்டப்போகும் ஐபிஎல் 2026.. தயாரான கேப்டன்கள்.. அனைத்து அணிகளின் முழு விவரங்கள்!
IPL 2026 All Teams Players List: 2025 டிசம்பர் 16ம் தேதியான நேற்று அபுதாபியில் நடைபெற்ற ஏலத்தில் ரூ. 215.45 கோடிக்கு மொத்தம் 77 வீரர்களை 10 அணிகள் ஏலம் எடுத்தனர். இந்த மினி-ஏலத்தில் கேமரூன் க்ரீன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ. 25.20 கோடிக்கு வாங்கியது.
- Mukesh Kannan
- Updated on: Dec 17, 2025
- 12:54 pm IST
CSK Full Squad 2026: அனுபவம் முதல் இளம் படை வரை.. ஐபிஎல் 2026ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முழு அணி விவரம்!
Chennai Super Kings Full Squad: ஐபிஎல் 2026 ஏலத்திற்கு முன்னதாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ரூ. 18 கோடி கொடுத்து சஞ்சு சாம்சனை வர்த்தகம் மூலம் தங்கள் அணியில் சேர்த்தது. இந்தநிலையில், ஐபிஎல் 2026 சீசனுக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முழு விவரத்தை இங்கே தெரிந்து கொள்வோம்.
- Mukesh Kannan
- Updated on: Dec 17, 2025
- 12:22 pm IST
IPL Auction 2026: ஐபிஎல் 2026 ஏலத்தில் எதிர்பார்க்காத ட்விஸ்ட்.. அதிக விலைக்கு ஏலம் போன 5 வீரர்கள்..!
Most Expensive Players in IPL 2026 Auction: முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரரும், இலங்கை வேகப்பந்து வீச்சாளருமான மதிஷா பத்திரனாவை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ. 18 கோடிக்கு வாங்கியது. இதற்கிடையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 அன்கேப்டு வீரர்களுக்கு அதிக செலவை மேற்கொண்டது.
- Mukesh Kannan
- Updated on: Dec 16, 2025
- 20:35 pm IST
IPL 2026 Auction: அன்கேப்டு வீரர்களுக்கு அடித்த ஜாக்பாட்! ரூ. 8.40 கோடிக்கு ஆகிப் நபி.. ரூ. 14 கோடிக்கு பிரஷாந்த் வீர்!
IPL Uncapped Players: 20 வயதான பிரஷாந்த் வீரை வாங்கவும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் கடுமையாக மோதியது. இதில், பிரஷாந்த் வீரை ரூ.14.20 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் வாங்கியது. இதன்மூலம், ஐபிஎல் வரலாற்றில் அன்கேப்டு வீரராக அதிக தொகைக்கு ஏலம் போன வீரர் என்ற சாதனையை பிரஷாந்த் வீர் படைத்தார்.
- Mukesh Kannan
- Updated on: Dec 16, 2025
- 17:28 pm IST
IPL 2026 Auction: 18 கோடிக்கு பத்திரனா.. 7 கோடிக்கு ரவி பிஷ்னோய்.. அதிக தொகைக்கு சுற்றி வளைத்த அணிகள்!
Matheesha Pathirana: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக நீண்ட காலமாக விளையாடி வந்த மதீஷா பத்திரனாவை ஐபிஎல் 2026 சீசனுக்கு முன்பு விடுவிக்கப்பட்டார். இந்தநிலையில், ஐபிஎல் 2026 மினி ஏலத்தில் ரூ. 18 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வாங்கியது. முன்னதாக, ரூ. 23.25 கோடிக்கு கேமரூன் க்ரீனை கொல்கத்தா அணி ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
- Mukesh Kannan
- Updated on: Dec 16, 2025
- 16:36 pm IST