Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL Auction 2026 Live Streaming: சூடுபிடிக்கும் 2026 ஐபிஎல் மினி ஏலம்.. எப்போது, ​​எங்கே நேரடியாக பார்க்கலாம்?

IPL 2026 Auction Date, Time: 2026 ஐபிஎல் மினி ஏலத்தில் வீரர்களை எடுக்க ஒவ்வொரு அணிக்கும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பணம் கையில் உள்ளது. 10 அணிகளும் டெவோன் கான்வே (Devon Conway), கேமரூன் கிரீன், லியாம் லிவிங்ஸ்டோன் மற்றும் சர்பராஸ் கான் போன்ற குறிப்பிடத்தக்க வீரர்கள் மீது பந்தயம் கட்டலாம்.

IPL Auction 2026 Live Streaming: சூடுபிடிக்கும் 2026 ஐபிஎல் மினி ஏலம்.. எப்போது, ​​எங்கே நேரடியாக பார்க்கலாம்?
ஐபிஎல் 2026 மினி ஏலம்Image Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 16 Dec 2025 08:00 AM IST

ஐபிஎல் 2026 சீசனை தீர்மானிக்கப்போகும் ஏலம் இன்று அதாவது 2025 டிசம்பர் 16ம் தேதி அபுதாபியில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. ஐபிஎல் பங்கேற்கும் 10 அணிகள் ஏலம் எடுக்கவுள்ள நிலையில் 77 இடங்களுக்காக 350 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். ஏலத்தில் வீரர்களை எடுக்க ஒவ்வொரு அணிக்கும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பணம் கையில் உள்ளது. 10 அணிகளும் டெவோன் கான்வே (Devon Conway), கேமரூன் கிரீன், லியாம் லிவிங்ஸ்டோன் மற்றும் சர்பராஸ் கான் போன்ற குறிப்பிடத்தக்க வீரர்கள் மீது பந்தயம் கட்டலாம். இருப்பினும், ஐபிஎல் 2026 மினி ஏலம் (IPL Mini Auction 2026) இந்திய நேரப்படி எந்த நேரத்தில் தொடங்குகிறது..? எந்த சேனல் அல்லது ஆப்களில் நேரலையில் காணலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

ALSO READ: தெறிக்கப்போகும் ஐபிஎல் மினி ஏலம்.. அணிகள் வாங்க மறுக்கப்போகும் 5 வீரர்கள்..!

எந்த அணியிடம் அதிக பணம் உள்ளது..?

ஐபிஎல் 2026 மினி ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அதிகபட்ச பணத்தை கையில் வைத்துள்ளது. அதன்படி, கேகேஆர் அணியிடம் அதிகபட்சமாக ரூபாய் 64.30 கோடி மீதமுள்ளது. அதேநேரத்தில், 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி மிகக் குறைந்த பணத்தைக் கொண்டுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியிடம் ரூபாய் 2.75 கோடியை வைத்துள்ளது.

நேரடி ஏலத்தை எப்போது, ​​எங்கே பார்ப்பது?

ஐபிஎல் 2026 ஏலம் டிசம்பர் 16ம் தேதியான இன்று அபுதாபியில் இந்திய நேரப்படி பிற்பகல் 2:30 மணிக்கு ஏலம் தொடங்குகிறது. இந்த ஏலம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட இருக்கிறது. அதே நேரத்தில் மொபைல் மற்றும் லேப்டாப்லளில் நேரடி ஸ்ட்ரீமிங் ஜியோ ஹாட்ஸ்டார் ஆப்களில் நேரடியாக பார்க்கலாம்.

எத்தனை வீரர்கள் ஏலம் எடுக்கப்படுவார்கள்?

ஐபிஎல் 2026 மினி ஏலத்தில் மொத்தமாக 1,300 க்கும் மேற்பட்ட வீரர்கள் பதிவு செய்திருந்தனர். இதில்,  350 பேர் மட்டுமே ஏலத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், 10 அணிகளின் 77 இடங்கள் மட்டுமே காலியாக உள்ளதால், அதிகபட்சமாக 77 வீரர்கள் மட்டுமே ஏலத்தில் எடுக்கப்படுவார்கள்.

எந்த அணிக்கு எத்தனை வீரர்கள் தேவை..?

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு அதிகபட்ச வீரர்கள் தேவையாக உள்ளது. அதன்படி, அதிகபட்சமாக 13 வீரர்களும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் 10 வீரர்களும் தேவையாக உள்ளது. அதேநேரத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளில் தலா 5 காலியாக உள்ளன.

ALSO READ: சிஎஸ்கே அணிக்கு இந்த வரிசையில் சிக்கல்.. ஐபிஎல் மினி ஏலத்தில் யாரை குறிவைக்கும்..?

யாரிடம் எவ்வளவு பணம் மிச்சம் இருக்கிறது?

  1. KKR – ரூ. 64.3 கோடிகள்
  2. CSK – ரூ. 43.4 கோடிகள்
  3. SRH – ரூ. 25.5 கோடிகள்
  4. LSG – ரூ. 22.95 கோடிகள்
  5. DC – ரூ. 21.8 கோடிகள்
  6. RCB – ரூ. 16.4 கோடிகள்
  7. RR – ரூ. 16.05 கோடிகள்
  8. GT – ரூ. 12.9 கோடிகள்
  9. PBKS – ரூ. 11.5 கோடிகள்
  10. MI – ரூ. 2.75 கோடிகள்