IPL Auction 2026: சிஎஸ்கே அணிக்கு இந்த வரிசையில் சிக்கல்.. ஐபிஎல் மினி ஏலத்தில் யாரை குறிவைக்கும்..?
Chennai Super Kings: ஐபிஎல் 2026 சீசனுக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் தனது 28 பேர் கொண்ட அணியில் இருந்து மொத்தம் 12 வீரர்களை விடுவித்துள்ளது. ஐபிஎல் 2026 மினி-ஏலத்தில் மொத்தம் 9 வீரர்களை அணி ஏலம் எடுக்க வேண்டும். இதில் 4 இடங்கள் வெளிநாட்டு வீரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்தியன் பிரீமியர் லீக்கிற்கான ஏலத்தின் கவுண்ட்டவுன் தொடங்கியுள்ளது. நாளை அதாவது 2025 டிசம்பர் 16ம் தேதி அபுதாபியில் ஏலம் (IPL Auction 2026) நடைபெறவுள்ளது. இந்த ஏலத்தில் மொத்தம் 10 அணிகளும் பங்கேற்க இருப்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உள்ளிட்ட அணிகளிடம் அதிக பணம் இருப்பதால், எந்தெந்த வீரர்களை வாங்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அதேநேரத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணியை பொறுத்தவரை மதீஷா பதிரானாவை விடுவித்தும் ரவீந்திர ஜடேஜா வேற அணிக்கு சென்றதும் சிஎஸ்கேவின் ஏலத் திட்டங்கள் கிரிக்கெட் உலகில் அதிகம் பேசப்படும் விஷயங்களில் ஒன்றாக இருந்து வருகின்றன.
ALSO READ: ஐபிஎல் 2026 ஏல பட்டியலில் திடீர் மாற்றம்.. புது ட்விஸ்ட் கொடுத்த பிசிசிஐ!
சிஎஸ்கே அணியின் ஏல திட்டம் என்ன..?
ஐபிஎல் 2026 சீசனுக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் தனது 28 பேர் கொண்ட அணியில் இருந்து மொத்தம் 12 வீரர்களை விடுவித்துள்ளது. ஐபிஎல் 2026 மினி-ஏலத்தில் மொத்தம் 9 வீரர்களை அணி ஏலம் எடுக்க வேண்டும். இதில் 4 இடங்கள் வெளிநாட்டு வீரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. ஏலத்திற்கு முன்பு, சிஎஸ்கே ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரன் போன்ற வீரர்களை வர்த்தகம் செய்ய முடிவு செய்தது. கடந்த சீசனில் அணியில் இருந்த டெவோன் கான்வே, ரச்சின் ரவீந்திர மற்றும் மதிஷா பதிரானா ஆகியோரையும் விடுவித்தனர். இதன் விளைவாக, ஏலத்தில் சில முக்கிய இடங்களை சிஎஸ்கே நிரப்ப வேண்டியிருக்கும்.




முக்கிய ஆல்ரவுண்டருக்கு திட்டம்:
சிஎஸ்கே அணியின் முக்கிய ஆல்ரவுண்டர்களான ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கர்ரன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு வர்த்தகம் செய்ததன் மூலம், சிஎஸ்கே ஒரு முக்கிய ஆல்ரவுண்டர் இடத்தை காலி செய்துள்ளது. அணி நன்றாக பேட்டிங் செய்யவும், நன்றாக பந்து வீசவும் கூடிய ஒரு வீரரைத் தேடி வருகிறது. எனவே, இந்த இடத்திற்கு கேமரூன் கிரீன், லியாம் லிவிங்ஸ்டோன் மற்றும் வெங்கடேஷ் ஐயர் போன்ற வீரர்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறிவைக்கலாம்.
டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட்:
ஐபிஎல் 2026 மினி ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் வீரரை தேடுகிறது. மதிஷா பதிரானாவை சிஎஸ்கே அணி விடுவித்ததால் டெத் ஓவர்களில் திறம்பட பந்து வீசக்கூடிய ஒரு வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளரை சென்னை அணி கண்டறிய வேண்டும். ஏற்கனவே, சென்னை அணியில் நாதன் எல்லிஸ் மற்றும் முகேஷ் சவுத்ரி ஆகியோருடன் ஒரு மாற்று வேகப்பந்து வீச்சாளர் தேவை என்பதால், மேட் ஹென்றி மற்றும் ஜெரால்ட் கோட்ஸி போன்ற வீரர்களை குறிவைக்கலாம்.
ALSO READ: தெறிக்கப்போகும் ஐபிஎல் மினி ஏலம்.. அணிகள் வாங்க மறுக்கப்போகும் 5 வீரர்கள்..!
பவர் ஹிட்டர்:
மிடில் ஆர்டரில் உள்ள பவர்-ஹிட்டர்களின் சமநிலையை நிரப்ப சென்னை அணிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. எனவே, இந்த இடத்திற்கு வெளிநாட்டு தொடக்க வீரர்களாக டேவிட் மில்லர் மற்றும் குயின்டன் டி காக் போன்ற பவர் ஹிட்டர்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தூக்க வாய்ப்புள்ளது.