IPL Released List 2026: சூடுபிடிக்கும் ஐபிஎல் 2026.. எந்தெந்த அணிகள் யாரை வெளியிட்டது? முழு பட்டியல் இதோ!
IPL 2026 All Team Released List: கடந்த ஐபிஎல் 2025 சீசனில் விளையாடிய வீரர்கள் மற்றும் இந்த முறை ஏலத்தில் பங்கேற்க தகுதியுடைய வீரர்களின் எண்ணிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 10 உரிமையாளர்களும் அடுத்த சீசனுக்கான தக்கவைப்பு மற்றும் வெளியீடு செய்யப்பட்ட வீரர்களின் பட்டியலை அறிவித்துள்ளனர்.
ஐபிஎல் 2026 (IPL 2026) சீசனுக்கான தக்கவைப்பு மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்கள் பட்டியலை 10 அணிகளும் இன்று அதாவது 2025 நவம்பர் 15ம் தேதிக்குள் (BCCI) பிசிசிஐயிடம் சமர்பிக்க வேண்டும். அதன்படி, பல நாட்களாக சமூக வலைதளங்களில் கிளம்பிய வதந்திகள் மற்றும் ஊகங்களுக்கு பிறகு, எந்த வீரர்கள் தக்கவைக்கப்படுகிறார்கள், யார் ஏலத்திற்குச் செல்ல வேண்டும் என்பது தெரிந்துவிட்டது. ஐபிஎல் 2026 தக்கவைப்பு காலக்கெடு மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. 10 உரிமையாளர்களும் அந்தந்த அணிகளின் விடுவிக்கப்பட்ட மற்றும் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் பட்டியலை வெளியிட்டனர். இதில், எப்போதும் போல, யாரும் எதிர்பார்க்காத வகையில், பல முக்கிய வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். அந்தவகையில், 10 அணியும் விடுவித்த வீரர்களின் பட்டியலை தெரிந்து கொள்வோம்.
எந்தெந்த அணிகள் எந்த வீரர்களை விடுவித்தது..?
சென்னை சூப்பர் கிங்ஸ்:
View this post on Instagram
ராகுல் திரிபாதி, வான்ஷ் பேடி, சி ஆண்ட்ரே சித்தார்த், ரச்சின் ரவீந்திரா, டெவோன் கான்வே, ரவீந்திர ஜடேஜா (வர்த்தகம்), சாம் குர்ரன் (வர்த்தகம்), தீபக் ஹூடா, விஜய் சங்கர், ஷேக் ரஷித், கமலேஷ் நாகர்கோட்டி, மதிஷா பதிரனா.




ALSO READ: ஐபிஎல் 2026ன் முதல் வர்த்தக ஒப்பந்தம்.. ஷர்துல் தாக்கூரை இணைத்து கொண்ட மும்பை இந்தியன்ஸ்!
ராஜஸ்தான் ராயல்ஸ்:
வனிந்து ஹசரங்கா, அசோக் ஷர்மா, குமார் கார்த்திகேயா, ஆகாஷ் மத்வால், மகேஷ் தீக்ஷனா மற்றும் ஃபசல்ஹாக் ஃபருக்கி.
மும்பை இந்தியன்ஸ்:
பெவன் ஜேக்கப்ஸ், கே ஸ்ரீஜித், விக்னேஷ் புதூர், கர்ன் சர்மா, லிசார்ட் வில்லியம்ஸ், சத்யநாராயண ராஜு, முஜீப் உர் ரஹ்மான் மற்றும் ரீஸ் டாப்லி.
பஞ்சாப் கிங்ஸ்:
க்ளென் மேக்ஸ்வெல், ஆரோன் ஹார்டி, பிரவீன் துபே, குல்தீப் சென் மற்றும் கைல் ஜேமிசன்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்:
டேவிட் மில்லர், ஆர்யன் ஜூயல், யுவராஜ் சவுத்ரி, ராஜ்வர்தன் ஹங்ரேகர், ஷமர் ஜோசப், ஆகாஷ் தீப் மற்றும் ரவி பிஷ்னோய்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:
முகமது ஷமி, சச்சின் பேபி, அபினவ் மனோகர், அதர்வா டைடே, ராகுல் சாஹர், ஆடம் ஜம்பா, வியான் முல்டர் மற்றும் சிமர்ஜீத் சிங்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:
ஸ்வஸ்திக் சிகாரா, மயங்க் அகர்வால், டிம் சீஃபர்ட், லியாம் லிவிங்ஸ்டோன், மனோஜ் பந்தேஜ், லுங்கி என்கிடி, பிளஸ்ஸிங் முசரபானி, மோஹித் ரதி
டெல்லி கேபிடல்ஸ்:
ஃபாப் டு பிளேசிஸ், ஜேக் பிரேஸர் மெக்குர்க், டினோவன் பெராரியா, செடிகுல்லா அடல், மன்வந்த் குமார், மோகித் சர்மா, தர்ஷன் நலன்கடே.
குஜராத் டைட்டன்ஸ்:
ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், மஹிபால் லோம்ரோர், கரீம் ஜனத், தசுன் ஷனகா, ஜெரால்ட் கோட்ஸி மற்றும் குல்வந்த் கெஜ்ரோலியா
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
ஆண்ட்ரே ரஸல், வெங்கடேஷ் ஐயர், குயின்டன் டி காக், மொயீன் அலி மற்றும் நரிக் நோர்கியா
ALSO READ: சென்னை அணிக்கு வந்த சஞ்சு சாம்சன்.. ஜடேஜா இனி ராஜஸ்தான் பக்கம்.. சிஎஸ்கே அறிவிப்பு
அதிக தொகைக்கு ஏலம் மற்றும் தக்கவைக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட வீரர்கள்:
- ஆண்ட்ரே ரஸ்ஸல் – KKR – ரூ.12 கோடி
- வெங்கடேஷ் ஐயர் – KKR – ரூ.23.75 கோடி
- மதிஷா பதிரனா – CSK – ரூ. 13 கோடி
- ரவி பிஷ்னோய் – LSG – ரூ. 11 கோடி
- லியாம் லிவிங்ஸ்டோன் – RCB – ரூ. 8.75 கோடி