இந்தியத் திருமணங்கள் என்றாலே ஆடம்பரத்திற்கும் கொண்டாட்டத்திற்கும் பஞ்சமிருக்காது. அந்த வகையில், பஞ்சாபில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில், மணமகன் வீட்டார்கள் மணமகள் மீது லட்சக்கணக்கான ரூபாய்களை வாரி இறைத்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. சமீபத்தில் பஞ்சாபில் ஒரு பிரம்மாண்ட திருமண விழா நடைபெற்றது. அதில் மணமகள் மேடையில் அமர்ந்திருக்கும்போது, மணமகன் வீட்டைச் சேர்ந்த உறவினர்கள் கட்டுக் கட்டாகப் பணத்தை அவர் மீது தூவித் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.