IPL 2026 Auction: தெறிக்கப்போகும் ஐபிஎல் மினி ஏலம்.. அணிகள் வாங்க மறுக்கப்போகும் 5 வீரர்கள்..!
IPL Auction Foreign Players: ஐபிஎல் 2026 மினி ஏலத்தில் ஸ்டீவ் ஸ்மித் உள்பட இந்த 5 வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களை (Foreign Players) ஏலம் எடுக்க அணிகளின் உரிமையாளர்கள் தயக்கம் கொள்வார்கள். அவர்கள் யாராக இருக்கலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
ஐபிஎல் 2026 ஏலம் (IPL 2026 Auction) இன்னும் ஓரிரு நாட்களில் நடைபெறவுள்ளது. அதாவது தெளிவாக சொல்ல வேண்டுமென்றால், ஐபிஎல் 2026 சீசனுக்காக ஏலம் வருகின்ற 2025 டிசம்பர் 16ம் தேதி அபுதாபியில் பிசிசிஐ பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த ஏலம் குறித்து பல்வேறு முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் ஏராளமான கணிப்புகளை முன்வைத்து வருகின்றனர். அதன்படி, ஏலத்தில் பல முக்கிய வீரர்களின் பெயர்கள் அதிக விலைக்கு செல்லலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறை, 77 இடங்களை நிரப்ப 359 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். சுவாரஸ்யமாக, பல அனுபவமிக்க வீரர்கள் ஏலத்தில் இடம்பெறுவார்கள். இருப்பினும், ஐபிஎல் 2026 மினி ஏலத்தில் இந்த 5 வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களை (Foreign Players) ஏலம் எடுக்க அணிகளின் உரிமையாளர்கள் தயக்கம் கொள்வார்கள். அவர்கள் யாராக இருக்கலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
ஸ்டீவ் ஸ்மித்:
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் ஸ்டீவ் ஸ்மித்தும் ஐபிஎல் 2026 மினி ஏலத்தில் இந்திய மதிப்பில் ரூ. 2 கோடிக்கு தனது பெயரை பதிவு செய்துள்ளார். இவர் கடைசியாக கடந்த 2021 ஐபிஎல் சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடினார். அதன்பிறகு, ஏலத்தில் ஸ்மித் தனது பெயரை பதிவு செய்திருந்தாலும் எந்த அணியும் இவரை வாங்க முன் வரவில்லை. இதன் காரணமாக, கடந்த சில சீசன்களில் ஐபிஎல்லில் வர்ணனையாளராக வலம் வந்தார். எனவே, ஐபிஎல் 2026 மினி ஏலத்திலும் ஸ்டீவ் ஸ்மித்தை எந்த அணியும் வாங்காமல் போகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜோஷ் இங்கிலிஸ்:
ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ஜோஷ் இங்கிலிஸின் அடிப்படை விலைரூ. 2 கோடிக்கு (தோராயமாக 20 மில்லியன் டாலர் ) தனது பெயரை பதிவு செய்துள்ளார். வரவிருக்கும் ஐபிஎல் 2026 சீசனில் இங்கிலிஸ் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாட இருப்பதால், ஐபிஎல்லில் இடம்பெறும் அணிக்காக வெறும் 4 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்று கூறப்படுகிறது. எனவே, அணி உரிமையாளர்கள் தங்கள் பணத்தை வீணாக்காமல் வேறு வீரருக்கு தொகையை பந்தயம் கட்டலாம். எனவே, ஜோஷ் இங்கிலிஸ் ஐபிஎல் 2026 மினி ஏலத்தில் விற்கப்படாமல் போகலாம்.




ALSO READ: ஐபிஎல் ஏலத்தில் முதலில் எடுக்கப்படும் 6 வீரர்கள்.. விவரம்!
டெவோன் கான்வே:
நியூசிலாந்து தொடக்க வீரர் டெவோன் கான்வே, ஐபிஎல் 2026 மினி ஏலத்தில் ரூ. 2 கோடி அடிப்படை விலையாக பதிவு செய்துள்ளார். முன்னதாக, கடந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெவோன் கான்வேவை ரூ. 6 கோடிக்கு ஏலம் எடுத்தது. இருப்பினும், ஐபிஎல் 2025 சீசனில் கான்வே எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அவரது மோசமான ஃபார்ம் காரணமாக, கான்வே நியூசிலாந்து அணியில் இருந்து தனது இடத்தை இழந்தார். எனவே, ஐபிஎல் 2026 மினி ஏலத்தில் கான்வே விற்கப்படாமல் போகலாம்.
டாரில் மிட்செல்:
நியூசிலாந்தின் நட்சத்திர பேட்ஸ்மேன் டாரில் மிட்செல் ரூ. கோடி அடிப்படை விலையுடன் ஏலத்தில் வந்தாலும், இவரை வாங்கவும் அணி நிர்வாகம் தயக்கம் காட்டும். சென்னை சூப்பர் கிங்ஸ் மிட்செலை ஐபிஎல் 2024 க்கு ஒப்பந்தம் செய்தது, ஆனால் அவரது செயல்திறன் எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக இல்லை. அதனால்தான் அவர் ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் விற்கப்படாமல் போனார். அதேபோல், தற்போதும் ஐபிஎல் 2026 இல் அவர் விற்கப்படாமல் போகலாம்.
ALSO READ: ஐபிஎல் 2026 ஏல பட்டியலில் திடீர் மாற்றம்.. புது ட்விஸ்ட் கொடுத்த பிசிசிஐ!
ஜேசன் ஹோல்டர்:
முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜேசன் ஹோல்டரின் அடிப்படை விலை ரூ. 2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவர் கடந்த ஐபிஎல் சீசன்களில் பல அணிகளுக்காக விளையாடியுள்ளார். கடந்த 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் கூட இவரை எந்த அணியும் வாங்கவில்லை. இதன் காரணமா, பாகிஸ்தானில் நடைபெற்ற பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாடினார். ஹோல்டர் உலகளாவிய டி20 லீக்குகளில் அவரது செயல்திறன் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக இல்லை. எனவே, இவரை வாங்கவும் எந்த அணியும் ஆர்வம் காட்டாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.