AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தொண்டையில் சிக்கிய ஆப்பிள் துண்டு.. உயிருக்கு போராடிய 9 மாத குழந்தை..

Sensational incident in tiruppur: தொண்டையில் சிக்கிய ஆப்பிள் துண்டை எடுக்க அவர்கள் முயற்சி செய்தனர். ஆனால் அது பலன் அளிக்கவில்லை. இதனால் பதறிய செந்தில்குமார் குழந்தையை தூக்கிக்கொண்டு, உறவினர் ஒருவருடன் பைக்கில் வடக்குகுளம் அரசு மருத்துவமனைக்கு விரைந்தார். ஆனால், அங்கு மருத்துவர்கள் யாரும் பணியில் இல்லை என்று கூறப்படுகிறது. குழந்தை மூச்சுவிடுவதற்கு சிரமப்பட்டப்பட்டு உயிருக்கு போராடியது.

தொண்டையில் சிக்கிய ஆப்பிள் துண்டு.. உயிருக்கு போராடிய 9 மாத குழந்தை..
குழந்தையுடன் உறவினர்கள்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 14 Feb 2026 08:24 AM IST

திருப்பூர், பிப்ரவரி 14: திருப்பூர் அருகே தொண்டையில் சிக்கிய ஆப்பிள் துண்டால் 9 மாத குழந்தை உயிருக்கு போராடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதோடு, குழந்தையை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்ற போது, அங்கு மருத்துவர்கள் இல்லாததால், மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பதற்றம் நிலவியது. அதோடு, குழந்தைகள் வளர்ப்பில் பெற்றோர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதையும் இந்த செய்தி நமக்கு எடுத்துச்சொல்கிறது. குழந்தைகள் கையில் எட்டும் அளவில் பொருட்களை வைப்பதால், எற்படும் ஆபத்தை உணர்த்தும் வகையில், நடந்த இந்த சம்பவம் குறித்து விரிவாக இக்கட்டுரையில் பார்க்கலாம்.

மேலும் படிக்க: உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. அதிகாலையில் கொட்டும் பனி.. இன்னும் எத்தனை நாட்களுக்கு இருக்கும்?

குழந்தையின் தொண்டையில் சிக்கிய ஆப்பிள்:

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மடத்துக்குளம் அருகே உள்ள காரத்தொழுவு பகுதியை சேர்ந்தவர் வழக்கறிஞர் செல்வக்குமார். இவரது மனைவி ரம்யா. இந்த தம்பதிக்கு பரிதி தமிழின் (8), இன்பத்தமிழன் 9 மாத ஆண் குழந்தை உள்ளனர். இந்நிலையில், நேற்று காலை மூத்த மகன் ப்ரிதி தமிழனை பள்ளிக்கு அனுப்புவதற்காக தயார் படுத்தும் பணியில் ரம்யா ஈடுபட்டிருந்தார். சிறுவனுக்கு பள்ளிக்கு கொடுத்து விடுவதற்காக, ஆப்பிள்களை துண்டு, துண்டாக அவர் வெட்டிக் கொண்டிருந்தார். அப்போது அருகில் இருந்த குழந்தை இன்பத்தமிழன் எதிர்பாராதவிதமாக ஒரு ஆப்பிள் துண்டை எடுத்து வாயில் போட்டான். அது, தொண்டையில் சிக்கிக் கொண்டது. இதனால் மூச்சு விட முடியாமல் குழந்தை திணறியது.

மருத்துவமனையில் இல்லாத மருத்துவர்:

இதனைக் கண்ட ரம்யாவும், செந்தில்குமாரும் அதிர்ச்சி அடைந்தனர். தொண்டையில் சிக்கிய ஆப்பிள் துண்டை எடுக்க அவர்கள் முயற்சி செய்தனர். ஆனால் அது பலன் அளிக்கவில்லை. இதனால் பதறிய செந்தில்குமார் குழந்தையை தூக்கிக்கொண்டு, உறவினர் ஒருவருடன் பைக்கில் வடக்குகுளம் அரசு மருத்துவமனைக்கு விரைந்தார். ஆனால், அங்கு மருத்துவர்கள் யாரும் பணியில் இல்லை என்று கூறப்படுகிறது. குழந்தை மூச்சுவிடுவதற்கு சிரமப்பட்டப்பட்டு உயிருக்கு போராடியது. இதனால் உடனடியாக கார் மூலம் உடுமலை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

உயிர் பிழைத்த குழந்தை:

அங்கு குழந்தையின் தொண்டையில் சிக்கிய ஆப்பிள் துண்டை மருத்துவர்கள் பத்திரமாக அகற்றினார். இதனால் குழந்தை உயிர் பிழைத்து கொண்டது. இதனையடுத்து செல்வக்குமார் மற்றும் அவரது உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதனிடையே, மடத்துக்குளம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால் செல்வக்குமார் மற்றும் அவரது உறவினர்கள் ஆத்திரம் அடைந்தனர். இதனையடுத்து அவர்கள் அரசு மருத்துவமனைக்கு திரண்டு வந்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க: காதலர் தினம்.. எல்லை மீறினால் கடும் நடவடிக்கை.. காதலர்களுக்கு போலீசார் எச்சரிக்கை!!

அரசு மருத்துவர் விளக்கம்:

பின்னர் இதுதொடர்பாக மருத்துவப்பணிகள் இணை இயக்குனரிடம் புகார் தெரிவிப்பதாக கூறிவிட்டு, அனைவரும் சிறிது நேரத்தில் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதுகுறித்து பணியில் இருந்த மருத்துவரிடம் விசாரித்தபோது, சிறுவனை சிகிச்சைக்கு அழைத்து வந்த சமயத்தில் தான், சாப்பிட சென்றிருந்ததாக மருத்துவர் தீபக்குமார் விளக்கமளித்துள்ளார். எனினும், இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Follow Us