AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. அதிகாலையில் கொட்டும் பனி.. இன்னும் எத்தனை நாட்களுக்கு இருக்கும்?

Tamil Nadu Weather Update: தமிழகத்தில் வறண்ட வானிலை இருந்தாலும், அதிகாலை வேளையில் பனிமூட்டத்தின் தாக்கம் தொடர்ந்து நிலவி வருகிறது. இந்த சூழலில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திண்டுக்கல், நீலகிரி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் இன்று அதிகாலை வேளையில் ஒரு சில இடங்களில் பனிமூட்டம் காணப்படும்.

உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. அதிகாலையில் கொட்டும் பனி.. இன்னும் எத்தனை நாட்களுக்கு இருக்கும்?
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 14 Feb 2026 06:25 AM IST

வானிலை நிலவரம், பிப்ரவரி 14, 2026: பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள இந்தியப் பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக வரக்கூடிய நாட்களில் அதே பகுதிகளில் ஒரு காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கிழக்கு திசைக் காற்றின் வேக மாறுபாடு காரணமாகவும் தமிழகத்தில் வரக்கூடிய நாட்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு குறைவு:

அந்த வகையில், பிப்ரவரி 14, 2026 முதல் பிப்ரவரி 17ஆம் தேதி வரை மழைக்கான வாய்ப்பு பெரிய அளவில் இருக்காது என்றும், வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பிப்ரவரி 18 மற்றும் 19ஆம் தேதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை மட்டுமே இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: ரஜினிகாந்த், விஜயகாந்த்தை பார்த்து Copy Paste… விஜய்யை பற்றி அதிமுக கடும் விமர்சனம்

அதிகாலையில் கொட்டும் பனி:

தமிழகத்தில் வறண்ட வானிலை இருந்தாலும், அதிகாலை வேளையில் பனிமூட்டத்தின் தாக்கம் தொடர்ந்து நிலவி வருகிறது. இந்த சூழலில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திண்டுக்கல், நீலகிரி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் இன்று அதிகாலை வேளையில் ஒரு சில இடங்களில் பனிமூட்டம் காணப்படும்.

மேலும் படிக்க: தமிழக அரசின் திரைப்பட விருது வழங்கும் விழா – விருதுகள் வழங்கிய உதயநிதி ஸ்டாலின்

நாளை (பிப்ரவரி 15) சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் பனிமூட்டம் இருக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 16ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் மிதமான பனிமூட்டம் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 17ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சிபுரம், கரூர், நாமக்கல், ஈரோடு, பெரம்பலூர், ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களிலும், பிப்ரவரி 18ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கரூர், நாமக்கல், ஈரோடு, பெரம்பலூர், ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களிலும் பனிமூட்டம் தொடரக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வெப்பநிலை எப்படி இருக்கும்:

அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய அளவு மாற்றம் இருக்காது என்றும், இயல்புநிலையை ஒட்டி இருக்கக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், குறைந்தபட்ச வெப்பநிலையிலும் பெரிய அளவு மாற்றம் இருக்காது; ஒரு சில இடங்களில் மட்டும் இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பகல் நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், அதிகாலை வேளையில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான பனிமூட்டம் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் 36 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us