ரஜினிகாந்த், விஜயகாந்த்தை பார்த்து Copy Paste… விஜய்யை பற்றி அதிமுக கடும் விமர்சனம்
AIADMK Responds to TVK Vijay : விஜய்யின் விமர்சனத்துக்கு அதிமுக சார்பில் அளிக்கப்பட்ட பதிலில், விஜய் சினிமாவில் அப்பாவால் வந்தவர். ரஜினிகாந்த், விஜயகாந்த்தைப் பார்த்து காப்பி பேஸ்ட் என கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. மேலும், அடுத்தவர் குதிரையில் சவாரி செய்யும் நீங்கள் எப்படி ஒரிஜினல் ஆவிர்கள்? என கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை, பிப்ரவரி 13 : தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் (Vijay) பிப்ரவரி 13, 2026 அன்று சேலத்தில் நடந்த நிர்வாகிகள் சந்திப்பில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அதிமுவை மறைமுகமாக விமர்சிக்கும் விதமாக பேசிய அவர், அடுத்தவர்கள் தொடங்கிய கட்சியில் இருப்பவர்களுக்கு ஒரு சவால், என்னை மாதிரி தனித்து நின்று 1 சதவிகித வாக்குகள் வாங்க முடியுமா என கேள்வி எழுப்பியிருந்தார். அவருக்கு அதிமுக ஐடி விங் தரப்பில், நீங்கள் தனியாகவா வந்தீர்கள். அப்பா தயவில் வந்தீர்கள் என்று தெரிவித்துள்ளது.இதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
தவெக தலைவர் சேலத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் சந்திப்பில் பேசியபோது, அனுபவம் இல்லாதவர்களால் எப்படி ஆட்சி செய்ய முடியும் என கேட்கிறார்கள். பணத்தை கொள்ளையடிப்பதை விட அவர்களுக்கு வேறு அனுபவம் இருக்கிறதா? அடுத்தவர்கள் தொடங்கிய கட்சியில் அரசியல்வாதிகளாக இருப்பவர்களுக்கு ஒரு சவால். என்னை போன்று தனித்து நின்று 1 சதவிகித வாக்குகள் வாங்க தில் இருக்கிறதா? கட்சி தொடங்கி 2 ஆண்டுகளில் முதன்மை சக்தியாக வளர்ந்து 30 சதவிகித மக்கள் ஆதரவை பெற்றிருக்கிறோம் என்று பேசினார்.




இதையும் படிக்க : “மக்களை சந்திக்க இடம் தர மறுக்கிறார்கள்”.. சேலத்தில் விஜய் குமுறல்!!
‘ரஜினிகாந்த், விஜயகாந்த்தை பார்த்து காப்பி பேஸ்ட்’
இந்த நிலையில் அவருக்கு பதில் அளிக்கும் விதமாக அதிமுக ஐடி விங் என்ற பக்கத்தில் கடுமையான விமர்சனங்களை பதிவு செய்துள்ளது. அந்த பதிவில், நீங்கள் தனியாகவா வந்தீர்கள்? உங்கள் அப்பாவால் சினிமாவில் நுழைந்தீர்கள். ரஜினிகாந்த் மற்றும் விஜயகாந்த் ஆகியோரை பார்த்து காப்பி பேஸ்ட் அரசியலில் வரலாற்று தலைவர்களின் லீகசியை திருடி காப்பி பேஸ்ட் என இப்படி அடுத்தவர் குதிரையில் சவாரி செய்யும் நீங்கள் எப்படி ஒரிஜினல் ஆவிர்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளது.
அதிமுக ஐடி விங் பதிவு
நீங்க தனியாகவா வந்தீங்க பனையூர் பண்ணையார் Uncle?
அப்பா-வால சினிமா உள்ள வந்தீங்க…
வந்த சினிமா வழியே சூப்பர்ஸ்டார் @rajinikanth, புரட்சிக் கலைஞர் @iVijayakant ஆகியோரைப் பார்த்து COPY PASTE uu….
அரசியலில், அடுத்த கட்சி வரலாற்றுத் தலைவர்களின் Legacy-யை திருடி, COPY PASTE uu…… pic.twitter.com/YWYhQIaMve
— AIADMK IT WING – SayYesToWomenSafety&AIADMK (@AIADMKITWINGOFL) February 13, 2026
இதையும் படிக்க : திறக்காத கூட்டணி கதவு.. செய்வதறியாது கையறு நிலையில் பன்னீர்செல்வம்.. எதிரே இருக்கும் ஒரே சான்ஸ்!
மேலும், திமுக எதில் எல்லாம் அவுட் ஆஃப் கண்ட்ரோல் என்பதை எடப்பாடி பழனிசாமி ஆணைக்கினங்க பதிவிட்டதைப் பார்த்து காப்பி அடித்து யாரோ எழுதி கொடுத்ததை ஆக்சன் என சொன்னதும் அடி மாறாமல் ஒப்பித்துள்ளார். சொந்தமாக ஒருவரியைக் கூட பேத் தெரியாதவர், அடுத்தவர் வரலாற்றைப் பற்றி பேசலாமா? கோவில் வாசலில் உடைக்கப்படும் தேங்காய் சில்லுகளைப்பொறுக்கி எடுப்பது போல, அடுத்த கட்சிகளில் இருந்து தூக்கி எறியப்பட்டவர்களை சேர்த்துக்கொண்டு கட்சி என்ற பெயரில் ஒரு வாட்சப் குழுவை நடத்தும் நீங்கள் அடுத்த கட்சிகளை கலைத்துவிட்டு வாருங்கள் என்று சவால் விடுவது சிரிப்பாக உள்ளது. என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அம்மாவின் ஆட்சி அமை அணிலாய் இருந்ததாக சொல்லிய உங்களை மிகப்பெரிய துயரத்தின்போது 41 பேர் இறந்தபோது பேசக்கூடாது என அம்மா கற்றுத் தந்த அரசியல் மாண்போடு எடப்பாடி பழனிசாமி நடந்துகொண்டார். முதல் நாள் முதல் காட்சி டிக்கெட்டை ரூ.2000க்கு விற்பது கொள்ளை இல்லையா? என கேள்வி எழுப்பியுள்ளது.