Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026 Auction: அன்கேப்டு வீரர்களுக்கு அடித்த ஜாக்பாட்! ரூ. 8.40 கோடிக்கு ஆகிப் நபி.. ரூ. 14 கோடிக்கு பிரஷாந்த் வீர்!

IPL Uncapped Players: 20 வயதான பிரஷாந்த் வீரை வாங்கவும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் கடுமையாக மோதியது. இதில், பிரஷாந்த் வீரை ரூ.14.20 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் வாங்கியது. இதன்மூலம், ஐபிஎல் வரலாற்றில் அன்கேப்டு வீரராக அதிக தொகைக்கு ஏலம் போன வீரர் என்ற சாதனையை பிரஷாந்த் வீர் படைத்தார்.

IPL 2026 Auction: அன்கேப்டு வீரர்களுக்கு அடித்த ஜாக்பாட்! ரூ. 8.40 கோடிக்கு ஆகிப் நபி.. ரூ. 14 கோடிக்கு பிரஷாந்த் வீர்!
ஆகிப் நபி - பிரஷாந்த் வீர்Image Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 16 Dec 2025 17:28 PM IST

ஐபிஎல் 2026 மினி ஏலத்தில் (IPL 2026 Mini Auction) ஜம்மு காஷ்மீர் பந்துவீச்சாளர் ஆகிப் நபி அன்கேப்டு வீரராக களமிறங்கினாலும், அவருக்கு கடுமையான போட்டி நிலவியது. ஆகிப் நபியை இறுதியாக டெல்லி கேபிடல்ஸ் அணி ரூ. 8.40 கோடி வாங்கியது. தொடர்ந்து, 20 வயதான ஆல்ரவுண்டர் பிரஷாந்த் வீரை வாங்கவும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் கடுமையாக மோதியது. இதில், பிரஷாந்த் வீரை ரூ. 14.20 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) வாங்கியது. இதனை தொடர்ந்து, அப்கேப்டு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கார்த்திக் ஷர்மாவை ரூ. 14.20 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியது. இதன்மூலம், ஐபிஎல் வரலாற்றில் அன்கேப்டு வீரராக அதிக தொகைக்கு ஏலம் போன வீரர்கள் என்ற சாதனையை பிரஷாந்த் வீர் மற்றும் கார்த்திக் ஷர்மா படைத்தனர்.

ALSO READ: வெங்கடேஷ் ஐயருக்கு ஆர்சிபி போட்ட கொக்கி.. ரூ. 7 கோடிக்கு மடக்கி அணியில் சேர்ப்பு!

ஆகிப் நபி தர்:

இந்தியாவின் உள்நாட்டு நட்சத்திரமான ஆகிப் நபி தர், ஐபிஎல் 2026 மினி ஏலத்தில் வெறும் 30 லட்சம் அடிப்படை விலையில் ஏலத்தில் நுழைந்தார். டெல்லி கேபிடல்ஸ் அவரை ரூ. 8.4 கோடிக்கு வாங்கியது. சமீபத்திய சையத் முஷ்டாக் அலி டிராபியில் ஆல்ரவுண்டரான ஆகிப் நபி, 7 போட்டிகளில் 15 விக்கெட்டுகளையும், 5 இன்னிங்ஸ்களில் 42 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். இருப்பினும், இந்த 5 இன்னிங்ஸ்களில் அதிகபட்ச ஸ்கோர் 32, இரண்டு முறை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார்.

பிரஷாந்த் வீர்:


பிரசாந்த் வீர் ஆரம்பத்தில் உத்தரபிரதேச டி20 லீக்கில் நொய்டா சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடத் தொடங்கிய 20 வயதான இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஆல்ரவுண்டர் பிரசாந்த் வீர், இந்த 2025ம் ஆண்டு சையத் முஷ்டாக் அலி டிராபியிலும் அற்புதமாக விளையாடியுள்ளார். சையத் முஷ்டாக் டிராபியில், ஏழு போட்டிகளில் 169.19 ஸ்ட்ரைக் ரேட்டில் 112 ரன்கள் எடுத்துள்ளார். இவரை தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ. 14.20 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.

கார்த்திக் ஷர்மா:


ஐபிஎல் 2026 ஏலத்திற்கான சிஎஸ்கே அணியில், இதுவரை விளையாடாத விக்கெட் கீப்பர் கார்த்திக் சர்மா ரூ. 14.20 கோடி ஏலத்தில் சேர்க்கப்பட்டார். கேகேஆர் மற்றும் லக்னோ இடையேயான நீண்ட ஏலப் போருக்குப் பிறகு, சென்னை சூப்பர் கிங்ஸ் ஏலத்தில் நுழைந்தது. இறுதியாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19 வயதான கார்த்திக் ஷர்மாவை ரூ.14.20 கோடிக்கு வாங்கியது.

ALSO READ: 18 கோடிக்கு பத்திரனா.. 7 கோடிக்கு ரவி பிஷ்னோய்.. அதிக தொகைக்கு சுற்றி வளைத்த அணிகள்!

ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன அன்கேப்டு வீரர்கள்:

  1. பிரசாந்த் வீர் – சென்னை சூப்பர் கிங்ஸ் – ரூ 14.20 கோடி – 2025
  2. கார்த்திக் ஷர்மா – சென்னை சூப்பர் கிங்ஸ் – ரூ. 14.20 கோடி, 2025
  3. அவேஷ் கான் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – ரூ. 10 கோடி – 2022
  4. கிருஷ்ணப்ப கவுதம் – சென்னை சூப்பர் கிங்ஸ் – ரூ 9.25 கோடி – 2021
  5. ஷாருக்கான் – பஞ்சாப் கிங்ஸ் – ரூ. 9 கோடி – 2022
  6. ராகுல் தெவாடியா: குஜராத் டைட்டன்ஸ் – ரூ. 9 கோடி – 2022
  7. க்ருனால் பாண்டியா – மும்பை இந்தியன்ஸ் – ரூ 8.8 கோடி – 2018
  8. அகிப் நபி – டெல்லி கேப்பிடல்ஸ் – ரூ 8.40 கோடி – 2025
  9. வருண் சக்ரவர்த்தி – கிங்ஸ் XI பஞ்சாப் – ரூ 8.40 கோடி – 2019