IPL Auction 2026: ஐபிஎல் 2026 ஏலத்தில் எதிர்பார்க்காத ட்விஸ்ட்.. அதிக விலைக்கு ஏலம் போன 5 வீரர்கள்..!
Most Expensive Players in IPL 2026 Auction: முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரரும், இலங்கை வேகப்பந்து வீச்சாளருமான மதிஷா பத்திரனாவை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ. 18 கோடிக்கு வாங்கியது. இதற்கிடையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 அன்கேப்டு வீரர்களுக்கு அதிக செலவை மேற்கொண்டது.
ஐபிஎல் 2026 மினி ஏலமானது (IPL 2026 Mini Auction) இன்று அதாவது 2025 டிசம்பர் 16ம் தேதி அபுதாபியில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் அதிகபட்சமாக ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் க்ரீனை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ. 25.20 கோடிக்கு வாங்கியது. இதன்மூலம், ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை கேமரூன் க்ரீன் (Cameron Green) படைத்தார். அதேநேரத்தில், முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரரும், இலங்கை வேகப்பந்து வீச்சாளருமான மதிஷா பத்திரனாவை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ. 18 கோடிக்கு வாங்கியது. இதற்கிடையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 அன்கேப்டு வீரர்களுக்கு அதிக செலவை மேற்கொண்டது. அந்தவகையில், ஐபிஎல் 2026 ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட 5 வீரர்களை பற்றி தெரிந்து கொள்வோம்.
ALSO READ: 18 கோடிக்கு பத்திரனா.. 7 கோடிக்கு ரவி பிஷ்னோய்.. அதிக தொகைக்கு சுற்றி வளைத்த அணிகள்!
கேமரூன் க்ரீன் – ரூ 25.2 கோடி (KKR)
ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கேமரூன் க்ரீனை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ. 25.20 கோடிக்கு வாங்கியது. முன்னதாக, கேமரூன் க்ரீனை வாங்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கடுமையாக போராடியது. இருப்பினும், சிஎஸ்கே அணி ரூ. 25 கோடி வரை சென்று கைவிட்டது. இதன்மூலம், ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை கேமரூன் க்ரீன் படைத்து, சக நாட்டவரான மிட்செல் ஸ்டார்க்கின் சாதனையை முறியடித்தார்.




மதீஷா பத்திரனா – ரூ 18 கோடி (KKR)
கேமரூன் க்ரீனை தொடர்ந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மதிஷா பதிரானாவை அதிக தொகை கொடுத்து ஏலத்தில் எடுத்தது. முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரரான மதீஷா பத்திரானாவை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 18 கோடிக்கு வாங்கியது. இதன்மூலம், ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம்போன இலங்கை வீரர் என்ற பெருமையை பத்திரனா பெற்றார்.
பிரசாந்த் வீர் – ரூ 14.2 கோடி (CSK)
UP T20 லீக்கில் நொய்டா சூப்பர் கிங்ஸ் அணிக்காக பிரசாந்த் வீர் அற்புதமாக விளையாடினார். இது மட்டுமின்றி, சையத் முஷ்டாக் அலி டிராபியிலும் பிரசாந்த் வீர், 7 போட்டிகளில் விளையாடி 160 ஸ்ட்ரைக் ரேட்டில் 192 ரன்களுடன், 9 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். ரவீந்திர ஜடேஜா வெளியேறிய பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் இதேபோன்ற இடது கை ஆல்ரவுண்டர் தேவையாக இருந்தது. அதை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிரசாந்த் வீரை ரூ. 14.20 கோடிக்கு வாங்கி பூர்த்தி செய்தது.
கார்த்திக் சர்மா – ரூ. 14.2 கோடி (CSK)
ஐபிஎல் 2026 மினி ஏலத்தில் கார்த்திக் சர்மாவை வாங்க சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளும் போட்டியிட்டன. இதையும் சிஎஸ்கே வென்றது. ஹைதராபாத் அணி 14 கோடி ரூபாய் வரை சென்றது. அதன் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 14.20 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்து கார்த்திக் சர்மாவை தங்கள் அணியில் சேர்த்தது.
லியாம் லிவிங்ஸ்டோன்: ரூ. 13 கோடி (SRH)
முதல் சுற்றில் விற்காமல் போன இங்கிலாந்து ஆல்ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டோனை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ரூ. 13 கோடிக்கு வாங்கியது. முன்னதாக, ஐபிஎல் 2025 ஏலத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ரூ. 8.75 கோடிக்கு வாங்கியது. இருப்பினும், லிவிங்ஸ்டோனை எதிர்பார்த்தபடி சிறப்பாக செயல்பட தவறியதால் விடுவிக்கப்பட்டார்.