Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Year Ender 2025: ஐபிஎல் முதல் ஆசியக் கோப்பை வரை.. 2025ல் கிரிக்கெட்டில் நடந்த டாப் 5 சர்ச்சை!

Top 5 Cricket Controversies 2025: 2025 ஆசிய கோப்பையில் இந்தியாவும் பாகிஸ்தானும் 3 முறை மோதியது. இந்த 3 முறையும் இந்திய அணி, பாகிஸ்தானை தோற்கடித்தது. போட்டியின் இறுதிப் போட்டியில் இந்தியா கடைசியாக பாகிஸ்தானை தோற்கடித்தது. அதன் பிறகு, இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஏ.சி.சி தலைவர் மொஹ்சின் நக்வியிடமிருந்து ஆசிய கோப்பையை வாங்க மறுத்தனர்.

Year Ender 2025: ஐபிஎல் முதல் ஆசியக் கோப்பை வரை.. 2025ல் கிரிக்கெட்டில் நடந்த டாப் 5 சர்ச்சை!
டாப் 5 கிரிக்கெட் சர்ச்சைகள்Image Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 12 Dec 2025 20:39 PM IST

2025ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணிக்கு (Indian Cricket Team) மட்டுமல்லாமல், உலக கிரிக்கெட் அரங்கிலும் பல்வேறு நெகழ்ச்சிகரமான சம்பவங்கள் நடந்தது. இது உலக கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. அந்தவகையில், 2025ம் ஆண்டு முடிவுக்கு வந்து, ஒரு புதிய ஆண்டு தொடங்க இருக்கிறது. புதிய வருடம் தொடங்குவதற்கு முன்பாக, 2025ம் ஆண்டில் இதுவரை கிரிக்கெட்டில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை நினைத்து பார்ப்பது மிக முக்கியம். 2025ம் ஆண்டு கிரிக்கெட்டில் (Year Ender 2025) ஏராளமான சர்ச்சைகள் நடந்தன. இவற்றில் சில ஸ்டேடியத்திற்கு உள்ளேயும், சில ஸ்டேடியத்திற்கு வெளியேயும் நடந்துள்ளன. இருப்பினும், இதுவரை நடந்த பல சர்ச்சைகளில், 5 மிக முக்கிய சர்ச்சைகளை ஒவ்வொன்றாக தெரிந்து கொள்வோம்.

பெங்களூரு ஆர்சிபி கூட்ட நெரிசல்:

ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக கடந்த 2025 ஜூன் மாதம் 3ம் தேதி ஆர்சிபி சாம்பியன் பட்டத்தை வென்றது. அதைத் தொடர்ந்து பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் ஆர்சிபி அணியின் வெற்றி அணிவகுப்பு நடைபெற்றது. இருப்பினும், விராட் கோலி மற்றும் ஆர்சிபி அணியை காண, ஸ்டேடியத்திற்கு வெளியே ஏராளமான ரசிகர்கள் கூடியதால் சூழல் மோசமானதாக மாறி சோகத்தை ஏற்படுத்தியது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த நிலையில், எண்ணற்றோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் இன்றுவரை மிகப்பெரிய சர்ச்சையாக உள்ளது.

மான்செஸ்டர் டெஸ்டில் கைகுலுக்கல் சர்ச்சை:

இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் 4வது டெஸ்டின் போது, ​​மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்டில் ரவீந்திர ஜடேஜாவும் வாஷிங்டன் சுந்தரும் சதத்தை நோக்கி விளையாடி கொண்டிருந்தனர். அப்போது, இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் அணியினர் கைகுலுக்க வந்து டிராவிற்கு அழைத்தனர். இது அப்போது ஒரு சர்ச்சை வெடித்தது. ஜடேஜாவும் வாஷிங்டன் சுந்தரும் சதங்களை நெருங்கும்போது, ​​பென் ஸ்டோக்ஸ் அவர்களிடம் கைகுலுக்கச் சொன்னார். ஆனால் அவர்கள் மறுத்துவிட்டனர். இறுதியில், ஜடேஜாவும் வாஷிங்டனும் சதங்களை எட்டிய பிறகு இந்திய அணி போட்டியை டிரா செய்ய ஒப்புக்கொண்டனர். டெஸ்ட் போட்டியின் போது இந்த சர்ச்சை ஒரு முக்கிய விவாதப் பொருளாக மாறியது, பென் ஸ்டோக்ஸ் மற்றும் இங்கிலாந்தின் விளையாட்டுத்திறன் குறித்து கேள்விகளை எழுப்பியது.

ALSO READ: இந்திய ரசிகர்களுக்கு பல இடியை கொடுத்த தருணங்கள்.. 2025ல் ஓய்வு பெற்ற இந்திய வீரர்கள்..!

ஆசிய கோப்பை 2025 இந்தியா-பாகிஸ்தான் கைகுலுக்கல் சர்ச்சை:

2025 ஆசிய கோப்பை போட்டியின் போது இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டியின்போது இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ், பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலியுடன் கைகுலுக்க மறுத்துவிட்டார். தொடர்ந்து, இந்திய வீரர்கள் போட்டியை வென்றபிறகு, பாகிஸ்தான் வீரர்களுடன் கைகலுக்க மறுத்து நேராக டிரஸ்ஸிங் அறைக்குள் சென்று கதவை சாத்தி கொண்டனர்.  பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடியது. ஆனால் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்துவிட்டது. இது மிகப்பெரிய சர்ச்சையை எழுப்பியது.

இந்தியா-பாகிஸ்தான் ஆசிய கோப்பை 2025 கோப்பை தகராறு:

2025 ஆசிய கோப்பையில் இந்தியாவும் பாகிஸ்தானும் 3 முறை மோதியது. இந்த 3 முறையும் இந்திய அணி, பாகிஸ்தானை தோற்கடித்தது. போட்டியின் இறுதிப் போட்டியில் இந்தியா கடைசியாக பாகிஸ்தானை தோற்கடித்தது. அதன் பிறகு, இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஏ.சி.சி தலைவர் மொஹ்சின் நக்வியிடமிருந்து ஆசிய கோப்பையை வாங்க மறுத்தனர். மொஹ்சின் நக்வி பிசிபி தலைவர் மட்டுமல்ல, பாகிஸ்தானின் உள்துறை அமைச்சரும் கூட என்பதால் சூர்யகுமார் யாதவ் இந்த முடிவை எடுத்தார். இந்திய அணி கோப்பையை வென்று 3 மாதங்களுக்கு மேலாகியும் ஆசிய கோப்பையை இன்னும் வாங்கவில்லை. இது இன்றளவும் சர்ச்சையாக உள்ளது.

ஸ்மிருதி மந்தனா – பலாஷ் முச்சல் திருமண சர்ச்சை:

2025 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற பிறகு, ஸ்மிருதி மந்தனா தனது காதலன் பலாஷ் முச்சலுடன் தனது திருமணம் செய்ய தயாராக இருந்தார். இந்த ஜோடி கடந்த 2025 நவம்பர் 23ம் தேதி திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தனர். இருப்பினும், திருமண நாளின்போது மாலை 4 மணிக்கு, ஸ்மிருதியின் தந்தை உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக செய்தி வெளியானது. சிறிது நேரத்திற்குப் பிறகு, ஸ்மிருதியின் மேலாளர் ஸ்மிருதி மந்தனா தந்தையின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால், ஸ்மிருதி திருமணத்தை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளார்.

ALSO READ: 2025ல் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள்.. கோலி, ரோஹித்-க்கு எத்தனையாவது இடம்?

2025 நவம்பர் 24ம் தேதி, ஸ்மிருதி தனது திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக ஊடகங்களில் இருந்து நீக்கப்பட்டது. பின்னர், பலாஷ் முச்சலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இருப்பினும், கடந்த 2025 நவம்பர் 25ம் தேதி, மேரி டிகோஸ்டா என்ற பெண்ணுக்கு முச்சல் தனிப்பட்ட முறையில் பேசிய ஸ்கிரீன் ஷாட்கள் சமூக வலைதளங்களில் பரவியது. இதன்பிறகு, ஸ்மிருதியும் பலாஷும் சமூக வலைதளங்களில் தாமாக முன்வந்து தங்கள் பிரிவை அறிவித்தனர்.