Year Ender 2025: 2025ல் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள்.. கோலி, ரோஹித்-க்கு எத்தனையாவது இடம்?
Most ODI Runs in 2025: 2025ம் ஆண்டில் ஒருநாள் கிரிக்கெட்டிலும் பல சாதனைகளும், பல வரலாறுகளும் படைக்கப்பட்டன. அந்தவரிசையில் இயர் எண்டர் பிளானாக இன்று, 2025ம் ஆண்டில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த டாப் 10 பேட்ஸ்மேன்களைப் பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.
2025ம் ஆண்டு முடிவடைய இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால் வெறும் 21 நாட்களே உள்ளன. 2025ம் ஆண்டு கிரிக்கெட்டை பொறுத்தவரை கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து என்றே சொல்லலாம். விராட் கோலி (Virat Kohli) முதல் ஜோ ரூட் வரை ஒருநாள் போட்டிகளில் பேட்டிங்கில் கம் பேக் கொடுத்து ரசிகர்களை கவர்ந்தனர். அதன்படி, இந்த ஆண்டு ஏற்கனவே கிரிக்கெட் உலகில் பல எழுச்சிகளைக் கண்டுள்ளது. அந்தவகையில், 2025ம் ஆண்டில் ஒருநாள் கிரிக்கெட்டிலும் பல சாதனைகளும், பல வரலாறுகளும் படைக்கப்பட்டன. அந்தவரிசையில் இயர் எண்டர் (Year Ender 2025) பிளானாக இன்று, 2025ம் ஆண்டில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த டாப் 10 பேட்ஸ்மேன்களைப் பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.
ஜோ ரூட் (இங்கிலாந்து)
டெஸ்ட் போட்டிகள் மட்டுமின்றி 2025ம் ஆண்டில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் இங்கிலாந்து அணியின் அனுபவ வீரர் ஜோ ரூட் முதலிடத்தில் இருந்தார். இந்த 2025ம் ஆண்டில் இங்கிலாந்து அணிக்காக ஜோ ரூட் 15 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 3 சதங்கள் மற்றும் 4 அரைசதங்களுடன் 808 ரன்கள் எடுத்தார். இதன்போது, அவரது ஸ்ட்ரைக் ரேட் 95.5 மற்றும் சராசரி 57.71 ஆக இருந்தது.
ALSO READ: இந்திய ரசிகர்களுக்கு பல இடியை கொடுத்த தருணங்கள்.. 2025ல் ஓய்வு பெற்ற இந்திய வீரர்கள்..!




டாரில் மிட்செல் (நியூசிலாந்து)
நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் டேரில் மிட்செல் 17 ஒருநாள் போட்டிகளில் விளையாடி ஒரு சதம் மற்றும் 6 அரை சதங்கள் உள்பட 761 ரன்கள் எடுத்தார், இதன்போது அவரது சராசரி 54.35 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 86.18 ஆகவும் இருந்தது. இந்த சிறப்பான பார்ம் காரணமாக டேரில் மிட்செல் ஐசிசி ஒருநாள் தரவரிசை பட்டியலில் சில நாட்கள் முதலிடத்தையும் பிடித்து வரலாறு படைத்தார்.
ஜார்ஜ் முன்சி (ஸ்காட்லாந்து)
ஸ்காட்லாந்து பேட்ஸ்மேன் ஜார்ஜ் முன்சி 11 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 2 சதங்கள் மற்றும் 5 அரைசதங்களுடன் 735 ரன்கள் எடுத்துள்ளார். இதன்போது ஜார்ஜ் முன்சியின் ஸ்ட்ரைக் ரேட் 107.45 ஆக பதிவானது.
மேத்யூ பிரீட்ஸ்கே (தென்னாப்பிரிக்கா)
சமீபத்திய இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியின்போது தென்னாப்பிரிக்கா வீரர் மேத்யூ பிரீட்ஸ்கேவின் ஆட்டம் அபாரமாக இருந்தது. 2025ம் ஆண்டில் மேத்யூ பிரீட்ஸ்கே இதுவரை 12 ஒருநாள் போட்டிகளில் விளையாடி ஒரு சதம் மற்றும் 6 அரைசதங்கள் உள்பட 706 ரன்கள் எடுத்தார். இதன்போது, அவரது ஸ்ட்ரைக் ரேட் 96.71 ஆக இருந்தது.
ஷாய் ஹோப் (வெஸ்ட் இண்டீஸ்)
வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் அணியின் கேப்டன் ஷாய் ஹோப் 2025ம் ஆண்டில் 15 போட்டிகளில் 2 சதங்கள் மற்றும் 4 அரைசதங்களுடன் 98.82 ஸ்ட்ரைக் ரேட்டில் 670 ரன்கள் எடுத்தார். இதுமட்டுமின்றி, ஹோப் ஒட்டுமொத்தமாக 2025ம் ஆண்டில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலிலும் முதலிடத்தில் உள்ளார்.
சல்மான் அலி ஆகா (பாகிஸ்தான்)
பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா இந்த 2025 ஆண்டு 17 ஒருநாள் போட்டிகளில் 93.28 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 2 சதங்கள் மற்றும் 3 அரைசதங்களுடன் 667 ரன்கள் எடுத்துள்ளார்.
மிலிந்த் குமார் (அமெரிக்கா)
முன்னாள் டெல்லி பேட்ஸ்மேனான மிலிந்த் குமார் இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து விளையாடி வருகிறார். அமெரிக்காவுக்காக மிலிந்த் குமார் இதுவரை 2025ம் ஆண்டில் 12 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 2 சதங்கள் மற்றும் 5 அரைசதங்களுடன் 652 ரன்கள் எடுத்தார். இதன்போது, அவரது 99.23 ஸ்ட்ரைக் ரேட்டாக உள்ளது.
ALSO READ: 3 கேப்டன்கள்.. 3 தோல்விகள் மட்டுமே! 2025ல் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி எப்படி?
விராட் கோலி (இந்தியா)
இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி 2025ம் ஆண்டில் 13 ஒருநாள் போட்டிகளில் 3 சதங்கள் மற்றும் 4 அரைசதங்களுடன் 96.15 ஸ்ட்ரைக் ரேட்டில் 651 ரன்கள் எடுத்துள்ளார்.
ரோஹித் சர்மா (இந்தியா)
முன்னாள் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா 2025 ம் ஆண்டில் 14 ஒருநாள் போட்டிகளில் 2 சதங்கள் மற்றும் 4 அரைசதங்களுடன் 100.46 ஸ்ட்ரைக் ரேட்டில் 650 ரன்கள் எடுத்துள்ளார்.