IND vs SA 2nd T20: பேட்டிங்கில் பதறிய இந்தியா.. பழிவாங்கிய மார்க்ரம் படை.. SA 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
India vs South Africa 2nd T20I: 214 ரன்கள் என்ற இலக்கை துரத்திய இந்திய அணிக்கு தொடக்கம் மிகவும் மோசமாக அமைந்தது. வழக்கம்போல் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணியின் துணை கேப்டன் சுப்மன் கில் முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டாகி மிகப்பெரிய அளவில் ஏமாற்றத்தை கொடுத்தார்.
இந்தியா – தென்னாப்பிரிக்கா (India vs South Africa 2nd T20I) இடையிலான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவிடம் தோல்வியை சந்தித்தது. இதன் மூலம், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தென்னாப்பிரிக்கா 1-1 என்ற கணக்கில் சமநிலை செய்தது. முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்தது. 214 ரன்கள் என்ற இலக்கை துரத்திய இந்திய அணி (Indian Cricket Team) 19.1 ஓவர்களில் 162 ரன்கள் மட்டுமே எடுத்து மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
ALSO READ: ஆஹா சொல்ல வைத்த ஐசிசி.. ரூ. 100தான்! 2026 உலகக் கோப்பைக்கான டிக்கெட் விவரம் வெளியீடு!




கலக்கிய டி காக்:
2ND T20I. WICKET! 19.1: N Tilak Varma 62(34) ct Aiden Markram b Lungisani Ngidi, India 162 all out https://t.co/japA2CIofo #TeamIndia #INDvSA #2ndT20I @IDFCfirstbank
— BCCI (@BCCI) December 11, 2025
இந்தியா டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. எதிர்பார்த்த அளவிற்கு இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்படவில்லை. அதிலும் குறிப்பாக அர்ஷ்தீப்பும் பும்ராவும் அபாரமான ரன்களை விட்டுக்கொடுத்தனர். இதன் மூலம் தென்னாப்பிரிக்கா 213 ரன்கள் எடுத்தது. தென்னாப்பிரிக்கா அணியில் குயின்டன் டி காக் 46 பந்துகளில் 90 ரன்கள் எடுத்திருந்தார். இதுமட்டுமின்றி டெனோவன் ஃபெரீரா 30 ரன்களுடனும் டேவிட் மில்லர் 20 ரன்களுடனும் இணைந்து அரைசத பார்ட்னர்ஷிப் அமைத்து ஸ்கோரை 200 ஐ கடந்து கொண்டு சென்றனர்.
214 ரன்கள் என்ற இலக்கை துரத்திய இந்திய அணிக்கு தொடக்கம் மிகவும் மோசமாக அமைந்தது. வழக்கம்போல் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணியின் துணை கேப்டன் சுப்மன் கில் முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டாகி மிகப்பெரிய அளவில் ஏமாற்றத்தை கொடுத்தார். தொடர்ந்து, கேப்டன் சூர்யகுமார் யாதவின் மோசமான ஃபார்ம் தொடர்ந்தது. ரன்கள் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டபோது வெறும் 5 ரன்கள் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினார். மற்றொரு தொடக்க வீரரான அபிஷேக் சர்மாவை 8 பந்துகளில் 17 ரன்களுடன் வழியனுப்பினார் மார்கோ ஜான்சன்.
அங்கிருந்து, அக்சர் படேல், ஹார்டிக் பாண்ட்யாவுடன் இணைந்து இன்னிங்ஸை எடுத்து செல்ல முயற்சி செய்தனர். இந்திய அணி 18 ரன்கள் எடுத்திருந்தபோது 20 ரன்கள் எடுத்திருந்த ஹர்திக் பாண்ட்யா ஆட்டமிழக்க, இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 19.1 ஓவர்களில் 162 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் அதிகபட்சமாக திலக் வர்மா 62 ரன்களும், ஜிதேஷ் சர்மா 27 ரன்களும் எடுத்திருந்தனர். மற்ற வீரர்கள் யாரும் 30 ரன்களை கூட தொடவில்லை.
ALSO READ: 2025ல் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள்.. கோலி, ரோஹித்-க்கு எத்தனையாவது இடம்?
தென்னாப்பிரிக்கா தரப்பில் ஆர்ட்னீல் பார்ட்மேன் 4 விக்கெட்டுகளையும், லுங்கி நிகிடி, மார்கோ ஜான்சென் மற்றும் லூத்தோ சிபாம்லா தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.