India tour of Bangladesh: 2026ம் ஆண்டுக்கான வங்கதேச சுற்றுப்பயணம்.. இந்திய அணியின் அட்டவணை வெளியீடு!
India's tour of Bangladesh Rescheduled 2026: பாகிஸ்தான், நியூசிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 3 வடிவங்களிலும் இருதரப்பு தொடர்கள் அடங்கிய 2026 சீசனுக்கான வங்கதேசம் உள்நாட்டு சர்வதேச அட்டவணையை வங்கதேச கிரிக்கெட் வாரியம் நேற்று அதாவது 2026 ஜனவரி 2ம் தேதி அறிவித்தது.
இந்திய அணி (Indian Cricket Team) கடந்த ஆண்டு வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால், சில அரசியல் காரணத்திற்காக ஒத்திவைக்கப்பட்டது. இந்தநிலையில், வங்கதேச கிரிக்கெட் வாரியம் நேற்று அதாவது 2026 ஜனவரி 2ம் தேதி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அதில், இந்திய கிரிக்கெட் அணி வருகின்ற 2026ம் ஆண்டு ஆகஸ்ட்-செப்டம்பர் 2026ல் வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்யும் என்றும், இதில் 3 ஒருநாள் போட்டிகளிலும், 3 டி20 போட்டிகளிலும் விளையாடவுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்துக்களுக்கு எதிரான வன்முறை:
வங்கதேசத்தில் கடந்த சில நாட்களாக இந்துக்களுக்கு எதிரான வன்முறை நடந்து வருகிறது. இதன் காரணமாக, வங்கதேச வீரர்கள் 2026 ஐபிஎல் சீசனில் பங்கேற்கக்கூடாது என விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இந்த பரபரப்புக்கு மத்தியில், வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் கிரிக்கெட் செயல்பாட்டு பொறுப்பாளர் ஷஹ்ரியார் நஃபீஸ், ”முன்னர் ஒத்திவைக்கப்பட்ட வங்கதேசம் மற்றும் இந்தியா இடையேயான தொடர் மீண்டும் திட்டமிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்திருந்தார்.




ALSO READ: இந்தியா-நியூசிலாந்து ஒருநாள் தொடர் எப்போது தொடங்குகிறது..? முழு அட்டவணை இங்கே!
2026ம் ஆண்டு வங்கதேசத்திற்கான இந்திய சுற்றுப்பயணம்:
The India tour of Bangladesh that was postponed in 2025 due to political unrest has now been rescheduled for September 2026. (Cricbuzz)
Schedule:
3 ODIs: September 1, 3 & 6
3 T20Is: September 9, 12 & 13announced by the Bangladesh Cricket Board pic.twitter.com/U5P0GkA36P
— rohit and virat roko (@OverAndOut1507) January 2, 2026
கிடைத்த அறிக்கையின்படி, இந்திய அணி வருகின்ற 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதி வர திட்டமிடப்பட்டுள்ளது என்றும், ஒருநாள் போட்டிகள் வருகின்ற 2026ம் ஆண்டு செப்டம்பர் 1, 3 மற்றும் 6 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்றும், டி20 போட்டிகள் வருகின்ற 2026ம் ஆண்டு செப்டம்பர் 9, 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான், நியூசிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 3 வடிவங்களிலும் இருதரப்பு தொடர்கள் அடங்கிய 2026 சீசனுக்கான வங்கதேசம் உள்நாட்டு சர்வதேச அட்டவணையை வங்கதேச கிரிக்கெட் வாரியம் நேற்று அதாவது 2026 ஜனவரி 2ம் தேதி அறிவித்தது.
வங்கதேச உள்நாட்டு அட்டவணை 2026:
2026ம் ஆண்டு மார்ச் 12 முதல் 16 வரை நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சுற்றுப்பயணத்திற்காக பாகிஸ்தான் வருகின்ற 2026 மார்ச் 9ம் தேதி வங்கதேசத்திற்கு சுற்றுபயணம் மேற்கொள்ளும். நியூசிலாந்து அணி வருகின்ற 2026ம் ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, முதலில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், அதைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட டி20 போட்டிகளிலும் விளையாடும்.
பின்னர் பாகிஸ்தான் அணி ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட வங்கதேசத்திற்கு வரும். முதல் டெஸ்ட் 2026 மே 8-12 வரையிலும், இரண்டாவது டெஸ்ட் 2026 மே 16-20 வரையிலும் நடைபெறும்.
ஆஸ்திரேலியா ஜூன் மாதம் வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும். அங்கு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 2026 ஜூன் 5ம் தேதி தொடங்கும். இதைத் தொடர்ந்து 2026 ஜூன் 15 முதல் 20 வரை இரு அணிகளுக்கும் இடையே மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறும்.
ALSO READ: 2026 டி20 உலகக் கோப்பையில் அணி அறிவிப்புக்கான கடைசி தேதி எப்போது? 20 அணிகளும் மாற்றங்களை செய்யலாமா?
2026 செப்டம்பரில் இந்திய அணி சுற்றுப்பயணத்திற்கு பிறகு வங்கதேசம், டெஸ்ட் சாம்பியன்ஷிப் சீசனுக்காக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும். முதல் டெஸ்ட் 2026 அக்டோபர் 28 முதல் 2026 நவம்பர் 1 வரை நடைபெறும். அதேநேரத்தில், இரண்டாவது டெஸ்ட் 2026 நவம்பர் 5 முதல் 9 வரை நடைபெறும்.