Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ICC T20 World Cup 2026: 2026 டி20 உலகக் கோப்பையில் அணி அறிவிப்புக்கான கடைசி தேதி எப்போது? 20 அணிகளும் மாற்றங்களை செய்யலாமா?

2026 T20 World Cup Squad Announcement: 2026 டி20 உலகக் கோப்பைக்கான அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட குரூப் ஏ-வில் உள்ள ஒரே அணி இந்திய கிரிக்கெட் அணி மட்டுமே. அதேநேரத்தில், மற்ற பிரிவுகளில் உள்ள ஆஸ்திரேலியா, இலங்கை, ஓமன், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

ICC T20 World Cup 2026: 2026 டி20 உலகக் கோப்பையில் அணி அறிவிப்புக்கான கடைசி தேதி எப்போது? 20 அணிகளும் மாற்றங்களை செய்யலாமா?
2026 டி20 உலகக் கோப்பைக்கான அணிகள்Image Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 02 Jan 2026 20:44 PM IST

2026ம் ஆண்டு ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை (ICC T20 World Cup 2026) 2026 பிப்ரவரி 7 முதல் 2026 மார்ச் 8 வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறும். இந்த உலகக் கோப்பைக்கான இந்திய அணியை பிசிசிஐ ஏற்கனவே அறிவித்துள்ளது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) சில மாற்றங்களை செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் ஐசிசி விதிமுறைகளின்படி, அனைத்து அணிகளும் தங்கள் அணிகளை எப்போது அறிவிக்க வேண்டும் மற்றும் மாற்றங்களுக்கான காலக்கெடு எதுவரை உள்ளது என்பதை தெரிந்து கொள்வோம்.

எத்தனை அணிகள் பங்கேற்கின்றன..?

2026 டி20 உலகக் கோப்பையில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்று மொத்தம் 55 போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்தியா vs பாகிஸ்தான் போட்டி உட்பட 14 போட்டிகள் இலங்கையில் நடைபெறவுள்ளது. அதேநேரத்தில், பாகிஸ்தான் அரையிறுதி போட்டிக்கு முன்னேறினால், அந்தப் போட்டிகளும் இலங்கையில் நடைபெறும். இதுமட்டுமின்றி, பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறினாலும், இறுதிப் போட்டியும் இலங்கையில் நடைபெறும்.

ALSO READ: 3 உலகக் கோப்பைகள்.. ஆசிய விளையாட்டு போட்டிகள்.. இந்திய ஆடவர், மகளிர் அணிகளின் அட்டவணை!

டி20 உலகக் கோப்பைக்கான 7 நாடுகள் இதுவரை அறிவிப்பு:

2026 டி20 உலகக் கோப்பைக்கான அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட குரூப் ஏ-வில் உள்ள ஒரே அணி இந்திய கிரிக்கெட் அணி மட்டுமே. அதேநேரத்தில், மற்ற பிரிவுகளில் உள்ள ஆஸ்திரேலியா, இலங்கை, ஓமன், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இருப்பினும் அமெரிக்கா, நமீபியா, நெதர்லாந்து, பாகிஸ்தான், ஜிம்பாப்வே, அயர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், இத்தாலி, நேபாளம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கனடா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

2026 டி20 உலகக் கோப்பை அணி அறிவிப்புக்கான கடைசி தேதி?

2026 டி20 உலகக் கோப்பையில் பங்கேற்கும் அனைத்து நாடுகளும் தங்கள் தற்காலிக அணியில் சேர்க்கப்பட்டுள்ள 15 வீரர்களின் பட்டியலை வருகின்ற 2026ம் ஆண்டு ஜனவரி 8ம் தேதிக்குள் ஐசிசியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

போட்டிக்கு நடுவே மாற்றம் செய்யலாமா..?

2026 டி20 உலகக் கோப்பை போட்டி 2025 பிப்ரவரி 7ம் தேதி முதல் தொடங்கவுள்ள நிலையில், அனைத்து நாடுகளும் இந்த நிகழ்வுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு வரை தங்கள் உலகக் கோப்பை அணிகளில் மாற்றங்களைச் செய்யலாம். அதாவது, ஐசிசி விதிகளின்படி, 2026 ஜனவரி 31ம் தேதி வரை காலக்கெடுவை நிர்ணயித்துள்ளது.

2026 டி20 உலகக் கோப்பையின் நடுவில் அணியில் மாற்றங்கள் சாத்தியம் என்றாலும், ஒரு வீரர் காயமடைந்தால் மட்டுமே அவை சாத்தியமாகும். அதுபோன்ற சூழ்நிலைகளில், ஐசிசி ஒப்புதலுக்குப் பிறகுதான் மாற்றங்களைச் செய்ய முடியும்.

ALSO READ: ரோஹித், கோலியை காண ஆவல்! 8 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த டிக்கெட்டுகள்..!

டி20 உலகக் கோப்பை 2026 வடிவம்:

2026 டி20 உலகக் கோப்பையில் பங்கேற்கும் 20 அணிகளும் 5 குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் மொத்தம்4 அணிகள் இடம்பெறும். இந்தியாவும் பாகிஸ்தானும் குரூப் ஏ-வில் உள்ளன. ஒவ்வொரு குரூப்பிலிருந்தும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு (சூப்பர் 8) முன்னேறும். இதைத் தொடர்ந்து நாக் அவுட் சுற்றுகள் நடைபெறும்.