Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

U19 Asia Cup: இந்திய வீரர்கள் மீது அடுக்கடுக்கான புகார்.. ஐசிசியிடம் செல்லும் பிசிபி!

India vs Pakistan: 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை 2025 சமீபத்தில் துபாயில் நிறைவடைந்தது. லீக் ஸ்டேஜ் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை தோற்கடித்தது. ஆனால், அதேநேரத்தில் கடந்த 2025 டிசம்பர் 21ம் தேதி நடந்த இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்து ஏமாற்றத்தை கொடுத்தது.

U19 Asia Cup: இந்திய வீரர்கள் மீது அடுக்கடுக்கான புகார்.. ஐசிசியிடம் செல்லும் பிசிபி!
பாகிஸ்தான் U19 அணிImage Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 23 Dec 2025 14:21 PM IST

19 வயதுக்குட்பட்ட ஆசியக் கோப்பை (U19 Asia Cup) இறுதிப் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் (India vs Pakistan) துபாய் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மோதியது. இந்த போட்டியின்போது இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் முன் இந்தப் பிரச்சினையை எழுப்பப் போவதாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மொஹ்சின் நக்வி தெரிவித்துள்ளார். தொடர்ந்து, பாகிஸ்தான் இந்த சம்பவத்தை ஐசிசியிடம் அதிகாரப்பூர்வமாகப் புகாரளிக்கும். அரசியலும் விளையாட்டும் எப்போதும் தனித்தனியாக வைக்கப்பட வேண்டும். 19 வயதுக்குட்பட்ட ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியின் போது, ​​இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களைத் தொடர்ந்து தூண்டிவிட்டதாகவும் மொஹ்சின் நக்வி கூறியுள்ளார்.

ALSO READ: அன்றைய நாளில் ஓய்வு முடிவை யோசித்தேன்.. பகீர் கிளப்பிய ரோஹித் சர்மா! விரைவில் ஓய்வா?

பாகிஸ்தான் அணியின் வழிகாட்டி சர்ஃபராஸ் அகமது கூறியது என்ன..?

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வழிகாட்டியாக இருந்த சர்ஃபராஸ் அகமது, ”விளையாட்டின் போது இந்திய அணியின் நடத்தை சரியாக இல்லை. மேலும், இது கிரிக்கெட்டின் உணர்வுக்கு எதிராக இருந்தது. இதுபோன்ற போதிலும், நாங்கள் எங்கள் வெற்றியை விளையாட்டு உணர்வில் கொண்டாடினோம். கிரிக்கெட் எப்போதும் விளையாட்டு உணர்வோடு விளையாடப்பட வேண்டும்” என்றார்.

தொடரும் சர்ச்சை:

பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் சம்பவங்களுக்கு பிறகு கிரிக்கெட்டில் இந்திய மற்றும் பாகிஸ்தான் வீரர்களுக்கு இடையேயான தூரம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதன்பிறகு, கிரிக்கெட்டில் முதலில் நடந்த ஆசியக் கோப்பையில் டாஸின் போது இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகாவுடன் கைகுலுக்க மறுத்துவிட்டார். அதைத் தொடர்ந்து, போட்டிக்குப் பிறகு இந்திய வீரர்களும் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்துவிட்டனர். ஆசியக் கோப்பை வெற்றியைத் தொடர்ந்து, இந்திய அணி மொஹ்சின் நக்வியிடமிருந்து கோப்பையை வாங்கவும் மறுத்துவிட்டனர்.

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பையிலும் இந்திய அணியின் நிலைப்பாடும் இதுவாகவே இருந்தது. அதன்படி, பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க ஆயுஷ் மத்ரே தலைமையிலான இந்திய வீரர்கள் மறுத்துவிட்டனர்.

ALSO READ: 2025ம் ஆண்டில் இந்திய அணிக்காக அதிக ரன்கள்.. டாப் ஸ்கோரராக சுப்மன் கில்!

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை 2025 சமீபத்தில் துபாயில் நிறைவடைந்தது. லீக் ஸ்டேஜ் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை தோற்கடித்தது. ஆனால், அதேநேரத்தில் கடந்த 2025 டிசம்பர் 21ம் தேதி நடந்த இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்து ஏமாற்றத்தை கொடுத்தது. இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு 348 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. இந்திய அணி 156 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 191 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.