Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IndvsPakU19 Asia Cup: சொதப்பிய இந்திய அணி…. 191 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி

 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணி 347 ரன்கள் என்ற கடினமான இலக்கை நிர்ணயித்தது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில், 8 விக்கெட்டுகளை இழந்து 347 ரன்கள் குவித்தது. இந்த நிலையில் இந்திய அணி சொதப்பலான பேட்டிங் காரணமாக 140 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வி அடைந்தது.

IndvsPakU19 Asia Cup: சொதப்பிய இந்திய அணி….  191 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி
பாகிஸ்தானிடம் படுதோல்வியடைந்த இந்தியா
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 21 Dec 2025 18:02 PM IST

 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணிக்கு எதிராக பாகிஸ்தான் (Pakistan) அணி 347 ரன்கள் என்ற கடினமான இலக்கை நிர்ணயித்தது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில், 8 விக்கெட்டுகளை இழந்து 347 ரன்கள் குவித்தது. இந்த நிலையில் இந்திய அணி சொதப்பலான பேட்டிங் காரணமாக  156 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வி அடைந்தது. இதன் காரணமாக பாகிஸ்தான் அணி கடந்த 2012 ஆம் ஆண்டுக்கு பிறகு ஆசிய கோப்பையை கைப்பற்றியது.  பாகிஸ்தான் அணியின் சார்பில்  சமீர் மின்ஹாஸ் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 113 ரன்களை எதிர்கொண்டு,  172 ரன்கள் குவித்தார். இந்த இன்னிங்ஸ், அண்டர் 19 ஆசியக் கோப்பை (Asia Cup) இறுதிப்போட்டிகளில் அதிக ரன் எடுத்த வீரர் என்ற சாதனையையும் பதிவு செய்தார்.

அவருடன் அகமது ஹுசைன் அரைசதம் அடித்து நிலையான கூட்டணியை அமைத்தார்.  347 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்தில் அதிரடியாக ஆடினாலும், தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. முதல் சில ஓவர்களில் ரன்கள் வேகமாக வந்தாலும், இடைவிடாத விக்கெட் இழப்புகள் அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தின. 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்களை மட்டுமே எடுத்தது.

இதையும் படிக்க : கேமராமேனை தாக்கிய சிக்ஸர்… கட்டி அணைத்து மன்னிப்பு கேட்ட பாண்டியா

இந்திய அணியின் தோல்வி குறித்து பிசிசிஐ பதிவு

 

இந்திய அணிக்காக கைலன் பட்டேல், அபிக்யான் குண்டு உள்ளிட்ட வீரர்கள் சில அதிரடி ஷாட்களை விளையாடினாலும், பெரிய பார்ட்னர்ஷிப் அமைக்க முடியாமல் போனது.  இந்திய அணியின் கவனம் வைபவ் சூரியவன்ஷி மீது இருந்தது. அவரும் வைபவ் களமிறங்கியவுடன் சிக்சர்களை அடிக்கத் தொடங்கினார், கேப்டன் மத்ரே ஆட்டமிழந்தபோது இந்தியாவின் ஸ்கோர் வெறும் 14 பந்துகளில் 32 ரன்களை எட்டியது. இதன் பிறகு, ஆரோன் ஜார்ஜும் தொடர்ச்சியாக பவுண்டரிகள் அடித்தார், ஆனால் நான்காவது ஓவரில் அவரும் ஆட்டமிழந்தார். ஐந்தாவது ஓவரின் முதல் பந்திலேயே வைபவ் ஆட்டமிழந்தபோது இந்திய ரசிகர்கள் நம்பிக்கை இழந்தனர். இந்தியா வெறும் 49 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தவித்தது.

இதையும் படிக்க : Vijay Hazare Trophy: விஜய் ஹசாரா டிராபியில் களமிறங்கும் கிங்.. டெல்லி அணிக்காக விளையாடும் விராட் கோலி!

ஒரு கட்டத்தில் இந்தியா வெறும் 94 ரன்களுக்கு ஏழு விக்கெட்டுகளை இழந்தது. கடைசிக் கட்டத்தில் நம்பிக்கை அளித்த  தீபேஷ் தேவேந்திரன் மட்டுமே 16 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து அலி ரசா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். பாகிஸ்தானைப் பொறுத்தவரை, வேகப்பந்து வீச்சாளர் அலி ராசா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனையடுத்து பாகிஸ்தான் அணி ஆசிய கோப்பையை கைப்பற்றியது.