Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

U19 Asia Cup 2025 Final: இந்தியா vs பாகிஸ்தான் U19 ஆசிய கோப்பை பைனல்.. போட்டியை எப்போது, எங்கு காணலாம்?

IND U19 vs Pak U19 Final: இந்திய கிரிக்கெட் அணி 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பையை இதுவரை 8 முறை வென்றுள்ளது. கடந்த 2024 பதிப்பின்போது இந்திய அணி இறுதிப் போட்டிக்கும் முன்னேறியது. ஆனால், இறுதிப் போட்டியில் வங்கதேசத்திடம் தோற்று 2வது இடத்தை பிடித்தது.

U19 Asia Cup 2025 Final: இந்தியா vs பாகிஸ்தான் U19 ஆசிய கோப்பை பைனல்.. போட்டியை எப்போது, எங்கு காணலாம்?
இந்தியா vs பாகிஸ்தான் U19 ஆசிய கோப்பை பைனல்Image Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 21 Dec 2025 08:30 AM IST

2025 ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பையின் (U19 Asia Cup 2025 Final) இறுதிப் போட்டி இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் (IND U19 vs Pak U19) இடையில் இன்று அதாவது 2025 டிசம்பர் 20ம் தேதி துபாயில் நடைபெறுகிறது. சுமார் 3 மாதங்களுக்கு முன்பு, 2025 ஆசியக் கோப்பையில் இந்தியாவும் பாகிஸ்தானும் பைனலில் மோதின. அதேபோல், 19 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில், ஆயுஷ் மத்ரே தலைமையிலான இந்தியா, அரையிறுதியில் இலங்கையை தோற்கடித்தது. தொடர்ந்து, பாகிஸ்தான் அணி வங்கதேசத்தை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இந்திய அணி வெற்றியை சுவைக்குமா..?

இந்திய கிரிக்கெட் அணி 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பையை இதுவரை 8 முறை வென்றுள்ளது. கடந்த 2024 பதிப்பின்போது இந்திய அணி இறுதிப் போட்டிக்கும் முன்னேறியது. ஆனால், இறுதிப் போட்டியில் வங்கதேசத்திடம் தோற்று 2வது இடத்தை பிடித்தது. அதேநேரத்தில், 2017க்குப் பிறகு பாகிஸ்தான் முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்தியாவும் பாகிஸ்தானும் கடைசியாக 2014 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் மோதின. அதில், இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ALSO READ: கேப்டனாக சூர்யகுமார் யாதவ்.. இல்லாத கில்.. 2026 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!

19 வயதுக்குட்பட்ட ஆசிய கோப்பை 2025 இறுதிப் போட்டி எப்போது?

இந்திய 19 வயதுக்குட்பட்ட அணிக்கும் பாகிஸ்தான் 19 வயதுக்குட்பட்ட அணிக்கும் இடையிலான இறுதிப் போட்டி இன்று அதாவது 2025 டிசம்பர் 21ம் தேதி நடைபெறுகிறது. இந்தப் போட்டியானது துபாயில் உள்ள ஐசிசி அகாடமி ஸ்டேடியத்தில் நடைபெறும்.

IND U19 vs PAK U19 இறுதிப் போட்டி எப்போது தொடங்கும்?

2025ம் ஆண்டுக்கான 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பையின் இறுதிப் போட்டி இன்று அதாவது 2025 டிசம்பர் 21ம் தேதி காலை 10:30 மணிக்கு இந்திய நேரப்படி தொடங்குகிறது. டாஸ் காலை 10:00 மணிக்கு நடைபெறும்.

IND U19 vs PAK U19 இறுதிப் போட்டியை நேரடியாக எங்கே பார்ப்பது?

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை 2025 இறுதிப் போட்டி சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரடியாக ஒளிபரப்பப்படப்படுகிறது. சோனி ஸ்போர்ட்ஸ் 1ல் போட்டியை நேரடியாக காணலாம். மொபைல் மற்றும் லேப்டாப்களில் காண விரும்புவோர் சோனி லிவ் ஆப் அல்லது இணைய பக்கத்தில் போட்டியை நேரடியாக காணலாம்.

ALSO READ: ஆசியக் கோப்பை பைனலில் மீண்டும் இந்தியா – பாகிஸ்தான்.. வெல்லப்போவது யார்..?

இந்திய 19 வயதுக்குட்பட்டோர் அணி:

ஆயுஷ் மத்ரே (கேப்டன்), ராகுல் குமார், வைபவ் சூர்யவன்ஷி, வேதாந்த் திரிவேதி, விஹான் மல்ஹோத்ரா, யுவராஜ் கோஹில், ஆரோன் ஜார்ஜ், பி.கே. கிஷோர், ஜெகநாதன், கனிஷ்க் சவுகான், கிலான் படேல், அபிகயன் அபிஷேக் (விக்கெட் கீப்பர்), ஹர்வன்ஷ் பங்கலியா (விக்கெட் கீப்பர்), ஆதித்யா ராவத், தீபேஷ் தேவேந்திரன், ஹெனில் படேல், கிஷன் குமார் சிங், நமன் புஷ்பக், உத்தவ் மணீஷ் மோகன்.

பாகிஸ்தான் 19 வயதுக்குட்பட்டோர் அணி

ஹசன் பலோச், ஃபர்ஹான் யூசுப் (கேப்டன்), ஹுசைஃபா அஹ்சன், சமீர் மின்ஹாஸ், உஸ்மான் கான் (விக்கெட் கீப்பர்), அப்துல் காதிர், அப்துல் சுபான், அகமது ஹுசைன், முகமது ஹசன் கான், உமர் ஜைப், ஹம்சா ஜாஹூர் (விக்கெட் கீப்பர்), மொஹமட் ஷயான், ஹபரானி, டில்லி அகே, டர்லி அகே, இப்திசாம் அசார், முகமது ஹுசைஃபா, முகமது சயீம், மொமின் கமர், நிகாப் ஷபிக்.