Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IND vs PAK Final: ஆசியக் கோப்பை பைனலில் மீண்டும் இந்தியா – பாகிஸ்தான்.. வெல்லப்போவது யார்..?

U19 Asia Cup 2025 Final: 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பையின் லீக் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அனி 46.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்கள் எடுத்திருந்தது. 241 ரன்களை துரத்திய பாகிஸ்தான் அணியை இந்திய பந்து வீச்சாளர்கள் 150 ரன்களுக்கு ஆல் அவுட் செய்து 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.

IND vs PAK Final: ஆசியக் கோப்பை பைனலில் மீண்டும் இந்தியா – பாகிஸ்தான்.. வெல்லப்போவது யார்..?
இந்தியா - பாகிஸ்தான்Image Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 20 Dec 2025 08:00 AM IST

2025 ஆம் ஆண்டுக்கான 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை (U19 Asia Cup 2025) இறுதிப் போட்டி இந்தியா மற்றும் பாகிஸ்தான் (IND U19 vs PAK U19) அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது. இந்த போட்டியின் இறுதிப் போட்டி 2025 பிப்ரவரி 21ம் தேதி ஞாயிற்றுக்கிழமை துபாயில் உள்ள ஐசிசி அகாடமி மைதானத்தில் நடைபெறுகிறது. நேற்று அதாவது 2025 டிசம்பர் 19ம் தேதி நடைபெற்ற இரண்டு அரையிறுதி போட்டியில் முதலில் இந்தியா இலங்கையை தோற்கடித்தது. அதேநேரத்தில், பாகிஸ்தான் வங்கதேசத்தை தோற்கடித்தது. இந்த இரண்டு போட்டிகளிலும், மழை காரணமாக மைதானம் ஈரமாக இருந்தது. இதனால் போட்டியின் ஆரம்பம் தாமதமானது. அது மட்டுமல்லாமல், ஓவர்களும் குறைக்கப்பட்டன.

இந்தியா-இலங்கை போட்டி 20 ஓவர்களாக மாற்றப்பட்டது. 20 ஓவர்களில் இந்தியா வெற்றி பெற 139 ரன்கள் என்ற இலக்கை இலங்கை நிர்ணயித்திருந்தது. இந்தியா 2 விக்கெட்டுகளை இழந்து இந்த இலக்கை எட்டியது. பாகிஸ்தான்-வங்கதேச போட்டி 27 ஓவர்களில் முடிவடைந்த நிலையில். வங்கதேசம் 26.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 121 ரன்கள் எடுத்து வெற்றிக்கு 122 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தது. பாகிஸ்தான் 2 விக்கெட்டுகளை இழந்து இந்த இலக்கை எளிதில் அடைந்துள்ளது.

ALSO READ: டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி.. இந்த நாளில் அணியை அறிவிக்கும் பிசிசிஐ!

லீக் ஸ்டேஜ் போட்டியில் எந்த அணி வெற்றி பெற்றது..?


19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பையின் லீக் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அனி 46.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்கள் எடுத்திருந்தது. 241 ரன்களை துரத்திய பாகிஸ்தான் அணியை இந்திய பந்து வீச்சாளர்கள் 150 ரன்களுக்கு ஆல் அவுட் செய்து 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இப்போது, ​​அந்த வெற்றியை மீண்டும் பெற இந்திய அணி இறுதிப்போட்டியில் களமிறங்கும். இதுபோன்ற சூழ்நிலையில், பாகிஸ்தான் தோல்வியிலிருந்து மீண்டு பட்டத்தை வெல்ல முயற்சிக்கும் அதே வேளையில். இந்தியாவும் பாகிஸ்தானும் மீண்டும் மோதவுள்ளதால், இரு நாட்டு ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த போட்டியானது வருகின்ற 2025 டிசம்பர் 21ம் தேதி இந்திய நேரப்படி காலை 10.30 மணிக்கு தொடங்கும்.

ALSO READ: U19 ஆசியக் கோப்பை இறுதிப்போட்டி எப்போது..? இந்தியா – பாகிஸ்தான் மீண்டும் மோதலா?

இரு அணிகளின் முழு விவரம்:

19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணி:

ஆயுஷ் மத்ரே (கேப்டன்), வைபவ் சூர்யவன்ஷி, ஆரோன் ஜார்ஜ், விஹான் மல்ஹோத்ரா, வேதாந்த் திரிவேதி, அபியான் குண்டு (விக்கெட் கீப்பர்), கனிஷ்க் சவுகான், கிலன் படேல், திபேஷ் தேவேந்திரன், கிஷன் குமார் சிங், ஹெனில் படேல், ஹர்வன்ஷ் கோவின் மோகன்பக், ஹர்வன்ஷ் கோவின் பங்காலியா.

19 வயதுக்குட்பட்டோருக்கான பாகிஸ்தான் அணி:

உஸ்மான் கான், சமீர் மின்ஹாஸ், அலி ஹசன் பலோச், அகமது ஹுசைன், ஃபர்ஹான் யூசப் (கேப்டன்), ஹம்சா ஜாஹூர் (விக்கெட் கீப்பர்), ஹுசைஃபா அஹ்சன், நிகாப் ஷபிக், டேனியல் அலி கான், முகமது சயாம், மொஹம்மத் சயாம், அலி ரஸா, அப்துல் ஹுஸானி, மொஹம்மத் ஹுஸானி ஷயன்.