Year Ender 2025: 2025ம் ஆண்டில் அடித்த லக்.. சாம்பியன் பட்டத்தை குவித்த இந்திய அணியினர்!
Indian Team: பீகாரின் ராஜ்கிரில் நடைபெற்ற 2025ம் ஆண்டு ஹாக்கி ஆசிய கோப்பையை இந்தியா வென்றது. ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி தென் கொரியாவை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தியது. போட்டியில் தோற்கடிக்கப்படாத அணியாக இறுதிப் போட்டிக்கு வந்த இந்தியா, நான்காவது முறையாக ஆசிய கோப்பையை வென்றது.
2025ம் ஆண்டு முடிய இன்னும் சிறிது நாட்களே உள்ள நிலையில், இந்திய அணியினர் (Indian Team) பல சாதனைகளை படைத்துள்ளனர். அதன்படி, இந்திய விளையாட்டு உலகில் மிக முக்கியமான ஆண்டாக அமைந்தது. இந்த 2025ம் ஆண்டு விளையாட்டுத் துறையில் 2025 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை (2025 Womens World Cup), 2025 சாம்பியன்ஸ் டிராபி, 2025 ஆசிய கோப்பை கிரிக்கெட், 2025 ஹாக்கி ஆசிய கோப்பை, 2025 பார்வையற்றோர் மகளிர் உலகக் கோப்பை, 2025 கோ-கோ உலகக் கோப்பை உள்ளிட்ட பல வெற்றிகளை இந்திய அணியினர் கண்டனர். அந்தவகையில், 2025ம் ஆண்டில் இந்திய அணியினர் வென்ற சாதனை பற்றிய விவரங்களை இங்கே தெரிந்து கொள்வோம்.
2025 கோ-கோ உலகக் கோப்பை:
2025ம் ஆண்டு ஜனவரி மாதத்தின் தொடக்கத்தில் நடைபெற்ற கோ-கோ உலகக் கோப்பையில் இந்திய ஆண்கள் மற்றும் மகளிர் அணிகள் என இரண்டு அணிகளும் சாம்பியன்ஸ் பட்டத்தை வென்றனர். இந்திய மகளிர் அணி நேபாள மகளிர் கோ-கோ அணியை தோற்கடித்து கோப்பையை வென்றது. அதே நேரத்தில், இந்திய ஆண்கள் அணி நேபாள ஆண்கள் அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது.
ALSO READ: 2025ல் டெஸ்டில் இந்திய அணி சாதனையா..? சொதப்பலா..? முழு விவரம்!




2025 சாம்பியன்ஸ் டிராபி:
2025 பிப்ரவரி-மார்ச் மாதங்களில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி அற்புதமாக செயல்பட்டு போட்டி முழுவதும் ஆதிக்கம் செலுத்தியது. 2025 சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் ஒரு போட்டியில் கூட தோல்வியடையாமல் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, இறுதிப் போட்டியில் நியூசிலாந்திற்கு எதிராக 4 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.
ஆசிய கோப்பையை வென்ற இந்தியா:
பாகிஸ்தான் நடத்திய 2025 ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானை இறுதிப் போட்டியில் தோற்கடித்தது. ஆனால், வெற்றிக்கு பிறகு சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தான் உள்துறை அமைச்சரும் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் (ACC) தலைவருமான மொஹ்சின் நக்வி கைகளால் வாங்க மறுத்தனர். இதையடுத்து, துபாய் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இருந்து நக்வி கோப்பையை தன்னுடன் எடுத்து சென்றார். இதுநாள் வரையும் இந்திய அணி தான் வென்ற கோப்பையை கைப்பற்றவில்லை.
2025 ஆசிய ஹாக்கி கோப்பை:
பீகாரின் ராஜ்கிரில் நடைபெற்ற 2025ம் ஆண்டு ஹாக்கி ஆசிய கோப்பையை இந்தியா வென்றது. ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி தென் கொரியாவை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தியது. போட்டியில் தோற்கடிக்கப்படாத அணியாக இறுதிப் போட்டிக்கு வந்த இந்தியா, நான்காவது முறையாக ஆசிய கோப்பையை வென்றது. இதன் மூலம், நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் நடத்தும் 2026ம் ஆண்டு சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பைக்கு இந்திய ஹாக்கி அணி தகுதி பெற்றது.
2025 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை:
இந்திய மகளிர் அணியின் 50 ஆண்டு கால தவமும், கோடிக்கணக்கான ரசிகர்களின் விருப்பமும் இந்த ஆண்டு நிறைவேறியது. இந்திய மகளிர் அணி அதன் ஐசிசி கோப்பை வறட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தது. 13வது மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையின் சாம்பியனாக உருவெடுத்தது. நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி சரியாக 47 ஆண்டுகளுக்குப் பிறகு தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி மகளிர் உலகக் கோப்பையில் தனது முதல் சாம்பியன் பட்டத்தை வென்றது.
ALSO READ: ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்காக அதிக சிக்ஸ்ர்கள்.. டாப் 2 பட்டியலில் ரோஹித், கோலி!
2025 பார்வையற்றோர் மகளிர் உலகக் கோப்பை:
கொழும்பில் நடைபெற்ற முதல் பார்வையற்றோர் டி20 உலகக் கோப்பையை வென்றதன் மூலம் இந்திய பார்வையற்ற மகளிர் கிரிக்கெட் அணி வரலாறு படைத்தது. இறுதிப் போட்டியில் இந்திய அணி நேபாளத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தனர்.