Year Ender 2025: 2025ல் டெஸ்டில் இந்திய அணி சாதனையா..? சொதப்பலா..? முழு விவரம்!
Indian Cricket Team in Test: இந்திய அணி மொத்தமாக 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. இதில், இந்திய அணி அதிகபட்சமாக 4 டெஸ்ட் போட்டிகளில் வெற்றியும், 5ல் தோல்வியையும் சந்தித்தது. மேலும், ஒரு போட்டி டிராவில் முடிந்தது. இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இந்தியா வரலாற்று சிறப்புமிக்க தொடர் டிராவைப் பெற்றது.
2025 ஆம் ஆண்டில் (Year Ender 2025) இந்திய அணி (Indian Cricket Team) டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி இருந்தாலும், டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரை ஏற்ற இறக்கங்கள் கொண்டவையாகவே இருந்தது. அதன்படி, இந்திய அணி மொத்தமாக 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. இதில், இந்திய அணி அதிகபட்சமாக 4 டெஸ்ட் போட்டிகளில் வெற்றியும், 5ல் தோல்வியையும் சந்தித்தது. மேலும், ஒரு போட்டி டிராவில் முடிந்தது. இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இந்தியா வரலாற்று சிறப்புமிக்க தொடர் டிராவைப் பெற்றது. மேலும், வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணி, தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2-0 என்ற கணக்கில் இழந்தது.
இந்தியா vs ஆஸ்திரேலியா:
ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் போட்டியுடன் இந்திய அணி 2025ம் ஆண்டை தொடங்கியது. 2024ல் நவம்பர்-டிசம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 4 டெஸ்ட் போட்டிகளில் 2ல் இந்திய அணி தோல்வியடைந்தது. சிட்னியில் நடந்த தொடரின் 5வது போட்டியுடன் 2025ம் ஆண்டு தொடங்கியது. இருப்பினும், இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்து 5 போட்டிகள் கொண்ட தொடரில் 3-1 என்ற வெற்றியைப் பெற்றது. தொடரை சமன் செய்யும் வாய்ப்பை இந்தியா தவறவிட்டது.
ALSO READ: ஐபிஎல் முதல் ஆசியக் கோப்பை வரை.. 2025ல் கிரிக்கெட்டில் நடந்த டாப் 5 சர்ச்சை!




இந்தியா vs. இங்கிலாந்து:
2025 ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில் இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. சுப்மன் கில் கேப்டனாக இந்திய அணி தலைமை தாங்கிய முதல் டெஸ்ட் தொடர் இதுவாகும். இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-2 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது.
லீட்ஸில் நடந்த தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து ஏற்கனவே 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. பர்மிங்காமில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து தொடரை 1-1 என சமன் செய்தது. தொடரின் மூன்றாவது போட்டி லார்ட்ஸில் நடைபெற்றது. இந்த போட்டியில் 22 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றியைப் பெற்றது. ஓவலில் நடந்த போட்டியில் இங்கிலாந்து 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரை 2-2 என டிராவில் முடித்தனர்.
இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்:
2025 அக்டோபரில் வெஸ்ட் இண்டீஸ் எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி, ஆண்டின் ஒரே டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்றது. முதல் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில், இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடரின் இரண்டாவது மற்றும் கடைசி போட்டி டெல்லியில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா vs தென்னாப்பிரிக்கா:
2025ம் ஆண்டில் இந்திய அணி 2வது முறையாக சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை விளையாடியது. கொல்கத்தாவில் நடந்த தொடரின் முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்காவை 159 ரன்களுக்குள் இந்திய அணி சுருட்டியது. அடுத்ததாக முதல் இன்னிங்ஸை விளையாடிய இந்தியா 189 ரன்களை மட்டுமே எடுத்தது. தென்னாப்பிரிக்கா இரண்டாவது இன்னிங்ஸில் 153 ரன்கள் எடுத்தது. இந்தியாவுக்கு 124 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நிர்ணயித்தது. ஆனால், இந்தியா 93 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால், தென்னாப்பிரிக்கா 30 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை வென்றது.
ALSO READ: தோல்விக்கு காரணம் யார்..? வாக்குவாதத்தில் கம்பீர் – ஹர்திக்.. வைரலாகும் வீடியோ!
தொடரின் இரண்டாவது போட்டி குவஹாத்தியில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 489 ரன்கள் எடுத்தது. அதேநேரத்தில், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 201 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இருப்பினும், தென்னாப்பிரிக்கா ஃபாலோ-ஆனை கொடுக்கவில்லை. தொடர்ந்து, இரண்டாவது இன்னிங்ஸை 260/5 என்று டிக்ளேர் செய்த தென்னாப்பிரிக்கா, இந்தியாவை வெறும் 140 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கி 408 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம், தென்னாப்பிரிக்கா தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றியது.