Ashes 2025-26: ஆஷஸ் தொடர் எப்படி தொடங்கியது..? அதன் வரலாறு என்ன..?
Ashes History: கடந்த 1882ம் ஆண்டு இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவிடம் தங்கள் சொந்த ஸ்டேடியமான தி ஓவலில் தோல்வியடைந்தது. இந்தத் தோல்வி இங்கிலாந்து ரசிகர்கள், ஊடகங்களை மிகவும் காயப்படுத்தியது.
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா (Australia vs England Test Series) அணிகளுக்கு இடையிலான வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் டெஸ்ட் (Ashes) தொடர் வருகின்ற 2025 நவம்பர் 21ம் தேதி தொடங்கவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெறும். இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடைபெறும் வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடர் இரு நாட்டு ரசிகர்களை கடந்து, உலக கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்து இழக்கும். 1882 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் தொடர், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. ஆஷஸ் தொடர் விளையாடப்படும் போதெல்லாம் ஆஸ்திரேலியாவும் இங்கிலாந்தும் தங்கள் செயல்திறன் மூலம் எதிரணிக்கு பதிலடி கொடுக்க முயற்சிக்கும். இந்தநிலையில், ஆஷஸ் என்ற பெயர் ஏன் வந்தது..? இதன் வரலாறு என்ன உள்ளிட்ட விவரங்களை இங்கே தெரிந்து கொள்வோம்.
ஆஷஸ் வரலாறு:
🚨 ASHES 2025 🚨🇦🇺🏴
– One of the greatest battles in Test History….🥶!! pic.twitter.com/CDv0rGssI7
— lndian Sports Netwrk (@IS_Netwrk29) November 18, 2025
இரு நாடுகளுக்கும் இந்த ஆஷஸ் தொடர் கிரிக்கெட்டின் மிக முக்கியமான மற்றும் மிகப்பெரிய தொடர்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்தத் தொடர் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. கடந்த 1882ம் ஆண்டு இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற இங்கிலாந்து – ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவிடம் தங்கள் சொந்த ஸ்டேடியமான தி ஓவலில் தோல்வியடைந்தது. இந்தத் தோல்வி இங்கிலாந்து ரசிகர்கள், ஊடகங்களை மிகவும் காயப்படுத்தியது, கோபப்படுத்தியது. ஏனெனில் இது ஆஸ்திரேலியாவிடம் இங்கிலாந்து அணி சொந்த மண்ணில் சந்தித்த முதல் தோல்வியாகும்.




ALSO READ: இந்தியா vs தென்னாப்பிரிக்கா 2வது டெஸ்ட்.. அதிரடியாக மாற்றப்பட்ட போட்டி நேரம்! ஏன் தெரியுமா?
இதையடுத்து, இங்கிலாந்து ஊடகங்கள் தங்களது செய்தித்தாள்களில் இங்கிலாந்து அணியை கடுமையாக விமர்சித்தது. இந்தத் தோல்வியைத் தொடர்ந்து, பிரிட்டிஷ் செய்தித்தாளான தி ஸ்போர்டிங் டைம்ஸ், “இங்கிலாந்து கிரிக்கெட்டின் மரணம்” என்ற தலைப்பில் ஆங்கில கிரிக்கெட்டுக்கான இரங்கல் செய்தியை வெளியிட்டது. இந்த இரங்கல் செய்தியில் உடல் அடக்கம் செய்யப்பட்டு இதன் சாம்பல் ஆஸ்திரேலியாவுக்கு எடுத்துச் செல்லப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அப்போதிருந்து, இந்தத் தொடர் ஆஷஸ் என்று பெயரிடப்பட்டது.
அடுத்த முறை வெற்றிபெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து தொடரை வென்றபோது, சில பெண்கள் பெயில்களை எரித்து சாம்பலை ஒரு வாசனை திரவிய பாட்டிலில் போட்டனர். இந்த வாசனை திரவிய பாட்டிலை மாதிரியாகக் கொண்ட ஒரு கோப்பை பின்னர் ஆஷஸ் தொடரின் வெற்றியாளருக்கு வழங்கப்பட்டது. ஆஷஸ் உலகிலேயே மிகச் சிறிய கோப்பையாகக் கருதப்படுகிறது. ஆஷஸ் கோப்பையின் அசல் கோப்பை லண்டனில் உள்ள ஓவலில் உள்ள MCC அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இப்போது, வெற்றி பெறும் அணிக்கு ஒரு பிரதி கோப்பை வழங்கப்படுகிறது.
ALSO READ: இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா ஆஷஸ் தொடர் எப்போது? ஹெட் டூ ஹெட் சாதனை எப்படி?
ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து: ஆஷஸ் போட்டி நேருக்கு நேர்
ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் 361 டெஸ்ட் போட்டிகள் விளையாடப்பட்டுள்ளன. இதுவரை புள்ளிவிவரங்கள் எப்படி இருக்கின்றன என்பது இங்கே:
- ஆஸ்திரேலியா: 152 வெற்றிகள்
- இங்கிலாந்து: 112 வெற்றிகள்
- டிராக்கள்: 97