Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

IND vs SA 2nd Test: இந்தியா – தென்னாப்பிரிக்கா டெஸ்டில் சிக்கல்.. மேலும் 3 வீரர்கள் மருத்துவமனை அனுமதி..!

South Africa Cricket Team: தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர்களான மார்கோ ஜென்சன், கேசவ் மகாராஜ் மற்றும் சைமன் ஹார்மர் ஆகியோர் கொல்கத்தாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், இந்த 3 வீரர்களுக்கு என்ன ஆனது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

IND vs SA 2nd Test: இந்தியா – தென்னாப்பிரிக்கா டெஸ்டில் சிக்கல்.. மேலும் 3 வீரர்கள் மருத்துவமனை அனுமதி..!
தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிImage Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 18 Nov 2025 18:01 PM IST

இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் (India – South Africa Test Series) இடையிலான நடந்து வரும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய கேப்டன் சுப்மன் கில் (Shubman Gill) காயமடைந்தார், இதன் காரணமாக அந்த போட்டியில் விளையாட முடியாமல் பாதியிலேயே வெளியேறினார். தற்போது, ​​குவஹாத்தி டெஸ்டுக்கு முன்பு மேலும் இரண்டு வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கிடைத்த ஊடக அறிக்கைகளின்படி, சிம் ஹார்மர் மற்றும் மார்கோ ஜான்சன் ஆகியோர் கொல்கத்தாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொல்கத்தாவில் நடைபெற்ற இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றதற்கு, இந்த இரண்டு வீரர்கள்தான் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: இந்தியா vs தென்னாப்பிரிக்கா 2வது டெஸ்ட்.. அதிரடியாக மாற்றப்பட்ட போட்டி நேரம்! ஏன் தெரியுமா?

ஜான்சன்-ஹார்மர் மருத்துவமனையில் அனுமதி:

தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர்களான மார்கோ ஜென்சன், கேசவ் மகாராஜ் மற்றும் சைமன் ஹார்மர் ஆகியோர் கொல்கத்தாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், இந்த 3 வீரர்களுக்கு என்ன ஆனது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. காயங்கள் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை என்றாலும், ஹார்மர் மற்றும் ஜென்சன் ஃபுட் பாய்சனால் பாதிக்கப்பட்டிருக்கலாம். இப்போது, இந்த இரு வீரர்களும் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால், தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிக்கு மிகப்பெரிய அடியாக அமையலாம். கொல்கத்தா டெஸ்டில் அணியின் வெற்றிக்கு இரு வீரர்களும் மிக முக்கிய பங்களிப்பைச் செய்தனர்.

கலக்கிய ஹார்மர் -யான்சன்:

இந்தியாவுக்கு எதிரான கொல்கத்தா டெஸ்டில் சைமன் ஹார்மர் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டு இன்னிங்ஸ்களிலும் தலா நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி போட்டியில் மொத்தம் எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதேநேரத்தில், இளம் வீரர் மார்கோ ஜான்சென் இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மொத்தமாக 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இதுமட்டுமின்றி, இரண்டாவது இன்னிங்ஸில் கே.எல். ராகுல் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை ஆட்டமிழக்கச் செய்து கடைசி இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்காவுக்கு வலுவான அடித்தளத்தை அமைத்தார்.

ALSO READ: கில்லின் காயம்.. குவஹாத்தி டெஸ்ட் போட்டியை மிஸ் செய்வாரா?

சுப்மன் கில் விளையாடுவாரா..?

இந்திய கேப்டன் சுப்மன் கில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான 2வது டெஸ்ட் குவஹாத்தி டெஸ்டில் விளையாடுவது சாத்தியமில்லை என்றே கூறப்படுகிறது.கொல்கத்தா டெஸ்டின் போது சுப்மன் கில் கழுத்தில் காயம் ஏற்பட்டது. இதன்காரணமாக, சுப்மன் கில் விமானத்தில் பயணிக்க வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதுமட்டுமின்றி, சுப்மன் கில் ஒருநாள் தொடருக்கு உடல் தகுதி பெறுவாரா இல்லையா என்பது கேள்விக்குறியாக உள்ளது. மேலும் இந்தக் கேள்விக்கான பதில் அடுத்த 24 மணி நேரத்தில் தெரியும்.