Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Shubman Gill: கில்லின் காயம்.. குவஹாத்தி டெஸ்ட் போட்டியை மிஸ் செய்வாரா?

IND vs SA 2nd Test: கொல்கத்தாவில் நடந்த இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்டில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்த பிறகு, இரண்டாவது டெஸ்ட் போட்டி இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானதாக மாறிவிட்டது. சொந்த மண்ணில் தொடர் தோல்வியைத் தவிர்க்க இந்தியா விரும்பினால், குவஹாத்தியில் உள்ள பராபதி மைதானத்தில் வெற்றி பெறுவதுதான் ஒரே வழி.

Shubman Gill: கில்லின் காயம்.. குவஹாத்தி டெஸ்ட் போட்டியை மிஸ் செய்வாரா?
சுப்மன் கில்Image Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 18 Nov 2025 12:09 PM IST

இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் (IND vs SA 1st Test) போட்டியின்போது ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் (Shubman Gill) இரண்டாவது டெஸ்டில் இருந்து விலகுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி வருகின்ற 2025 நவம்பர் 22 முதல் குவஹாத்தியில் நடைபெற உள்ளது. இதில், விளையாடுவதற்காக சுப்மன் கில் இந்திய அணியுடன் குவஹாத்திக்கு பயணம் செய்ய மாட்டார் என்று கூறப்படுகிறது. பெங்கால் கிரிக்கெட் சங்கத்திற்குள் உள்ள வட்டாரங்கள், கில்லின் உடல் நிலை குறித்த அப்டேட்டை வெளியிட்டனர். அதன்படி, இந்திய கேப்டன் சுப்மன் கில் இப்போதைக்கு விமானத்தில் பயணம் செய்யக்கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால்தான் கில் தற்போது வரை குவஹாத்திக்கு பயணம் செய்யவில்லை.

ALSO READ: தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான தோல்வி.. புள்ளிகள் பட்டியலில் சரிந்ததா இந்திய அணி?

கில் கடைசி நேரத்தில் பங்கேற்பாரா..?

கொல்கத்தாவில் நடந்த இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்டில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்த பிறகு, இரண்டாவது டெஸ்ட் போட்டி இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானதாக மாறிவிட்டது. சொந்த மண்ணில் தொடர் தோல்வியைத் தவிர்க்க இந்தியா விரும்பினால், குவஹாத்தியில் உள்ள பராபதி மைதானத்தில் வெற்றி பெறுவதுதான் ஒரே வழி. ஆனால் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில்லின் காயம் மிகப்பெரிய கவலைகளை அதிகரித்துள்ளது.

PTI அறிக்கையின்படி, சுப்மன் கில் அடுத்த நான்கு நாட்களுக்கு ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார். மருத்துவர்களின் முடிவால் கில் இரண்டாவது டெஸ்டுக்காக அணியுடன் குவஹாத்திக்கு பயணம் செய்வது கடினமாக உள்ளது என்று அறிக்கை கூறியுள்ளது. இருப்பினும், சுப்மன் கில்லின் காயம் தினமும் மதிப்பீடு செய்யப்பட்டு வருவதாகவும், குவஹாத்திக்கு பயணம் செய்வது குறித்து இன்று அதாவது 2025 நவம்பர் 18ம் தேதி இறுதி முடிவு எடுக்கப்படலாம் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கில் எப்போது காயமடைந்தார்?


கொல்கத்தா டெஸ்டில் இந்தியாவின் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்யும் போது சுப்மன் கில் காயம் அடைந்தார். இந்த போட்டியில் கில் 3 பந்துகளில் 4 ரன்கள் எடுத்து பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, ​​அவருக்கு கழுத்தில் வலி ஏற்பட்டு காயம் ஏற்பட்டு ஓய்வு பெற வேண்டியிருந்தது. காயம் காரணமாக, சுப்மன் கில் இரண்டாவது இன்னிங்ஸிலும் பேட்டிங் செய்யவில்லை.

ALSO READ: சொதப்பும் கம்பீரின் பயிற்சி.. டெஸ்ட் போட்டியில் தடுமாறுகிறதா இந்திய அணி?

சுப்மன் கில் கவுகாத்தி டெஸ்டைத் தவறவிட்டால், அக்டோபர் 2024க்குப் பிறகு இந்திய அணியில் ஒரு டெஸ்ட் போட்டியைத் தவறவிடுவது இதுவே முதல் முறை. இந்த நேரத்தில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் சுப்மன் கில் விளையாடத் தவறவிட்டார்.