WTC Points Table: தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான தோல்வி.. புள்ளிகள் பட்டியலில் சரிந்ததா இந்திய அணி?
WTC Points Table 2025-27: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-27 சுழற்சியின் புள்ளிகள் பட்டியலில் இந்திய அணி இதுவரை 8 போட்டிகளில் 4 வெற்றிகளைப் பெற்று நான்காவது இடத்தில் உள்ளது. அதன்படி, இந்திய கிரிக்கெட் அணியின் புள்ளிகள் சதவீதம் 54.17 ஆகும்.
கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்தியா – தென்னாப்பிரிக்கா (IND vs SA 1st Test) இடையிலான முதல் டெஸ்டில் தென்னாப்பிரிக்க அணி, இந்திய அணியை 30 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.இந்த தோல்வி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் (WTC Points Table) இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் நடப்பு சாம்பியனான தென்னாப்பிரிக்கா 2வது இடத்திற்கு சரிந்துள்ள நிலையில், இந்திய அணி நான்காவது இடத்திற்கு சரிந்துள்ளது. கொல்கத்தா டெஸ்டில் ஏற்பட்ட தோல்வி, இறுதிப் போட்டிக்கு முன்னேறும் இந்தியாவின் நம்பிக்கையை மீண்டும் ஒருமுறை உருகுலைத்துள்ளது. அந்தவகையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் எந்தெந்த அணிகள் எந்த இடத்தை பிடித்துள்ளது என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
ALSO READ: முதல் டெஸ்டில் இந்திய அணி தோல்வி.. ஈடன் கார்டனில் தென்னாப்பிரிக்கா அபாரம்..!




உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் அட்டவணை:
WTC 2025-27 Points Table. pic.twitter.com/6Z7K1Hw5tS
— Mufaddal Vohra (@mufaddal_vohra) November 16, 2025
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-27 சுழற்சியின் புள்ளிகள் பட்டியலில் இந்திய அணி இதுவரை 8 போட்டிகளில் 4 வெற்றிகளைப் பெற்று நான்காவது இடத்தில் உள்ளது. அதன்படி, இந்திய அணியின் புள்ளிகள் சதவீதம் 54.17 ஆகும். ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகள் தற்போது அட்டவணையில் இந்திய அணியை விட முன்னிலையில் உள்ளது. 50 புள்ளிகளுடன் அண்டை நாடான பாகிஸ்தான் அணி புள்ளிகள் பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது.
- ஆஸ்திரேலியா
- தென்னாப்பிரிக்கா
- இலங்கை
- இந்தியா
- பாகிஸ்தான்
அசத்தும் தென்னாப்பிரிக்கா:
இந்திய சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக, தென்னாப்பிரிக்கா அணி பாகிஸ்தான் மண்ணில் 2 போட்டிகளில் பாகிஸ்தான் அணியுடன் விளையாடி டெஸ்ட் தொடரை 1-1 என சமநிலையில் முடித்தது. தற்போது, கொல்கத்தா டெஸ்டில் வெற்றி பெற்றதன் மூலம், தொடரில் இந்திய அணி தொடரை வெல்ல முடியாது என்பது உறுதியாகியுள்ளது. இதன்மூலம், டெம்பா பவுமாவின் கேப்டனின் வெற்றி தொடர் தொடர்கிறது. இதுவரை, பவுமாவின் தலைமையில் தென்னாப்பிரிக்கா 11 போட்டிகளில் 10 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதேநேரத்தில், ஒரு போட்டி டிராவில் முடிந்தது.
ALSO READ: 2வது டெஸ்டில் சுப்மன் கில் விளையாடுவாரா..? கவுதம் கம்பீர் கொடுத்த ட்விஸ்ட்!
இந்திய அணி தோல்வி:
இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்டில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 159 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து, முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸ் 189 ரன்களில் ஆல் அவுட்டானது. அடுத்ததாக, தென்னாப்பிரிக்கா தனது மூன்றாவது இன்னிங்சில் 153 ரன்கள் எடுத்தது. எனவே, முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றதன் அடிப்படையில் இந்தியாவுக்கு 124 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்தியா வெறும் 93 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.