Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Shubman Gill: 3 பந்துகளை மட்டுமே சந்தித்த கில்.. பாதியில் வெளியேறியதால் ரசிகர்கள் அதிர்ச்சி.. காரணம் என்ன?

India - South Africa 1st Test: சுப்மன் கில் 3 பந்துகளில் 4 ரன்கள் எடுத்து பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, ​​காயம் காரணமாக ரிட்டையர்ட் ஹர்ட் ஆனார் . கில்லுக்கு ஏற்பட்ட இந்த கழுத்து பிரச்சனையின் தீவிரம் அவரது பரிசோதனைக்குப் பிறகுதான் தெரியும்.

Shubman Gill: 3 பந்துகளை மட்டுமே சந்தித்த கில்.. பாதியில் வெளியேறியதால் ரசிகர்கள் அதிர்ச்சி.. காரணம் என்ன?
சுப்மன் கில் Image Source: BCCI/ Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 15 Nov 2025 12:50 PM IST

இந்தியா – தென்னாப்பிரிக்கா (India – South Africa 1st Test) இடையிலான முதல் டெஸ்டின் 2ம் நாள் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸை தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி 55 ஓவர்களில் 159 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. இதையடுத்து, முதல் இன்னிங்ஸில் இந்திய அணி தற்போது விளையாடி வருகிறது. இந்திய அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 12 ரன்களில் ஆட்டமிழக்க, நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய வாஷிங்டன் சுந்தர் 29 ரன்களில் வெளியேறினார். இதையடுத்து, 4வது நாள் இடத்தில் பேட்டிங் செய்ய வந்த இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் (Shubman Gill) பாதியில் களத்தை விட்டு வெளியேறி ரிட்டயர்ட் ஹர்ட் ஆகினார்.

ALSO READ: சென்னை அணிக்கு வந்த சஞ்சு சாம்சன்.. ஜடேஜா இனி ராஜஸ்தான் பக்கம்.. சிஎஸ்கே அறிவிப்பு

என்ன காரணம்..?


வெறும் 3 பந்துகளை மட்டுமே சந்தித்த நிலையில் சுப்மன் கில் காயம் காரணமாக வெளியேறினார். தென்னாப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் ஹார்மரின் பந்தில் 3 பந்துகளை சந்தித்து கில் ஒரு பவுண்டரி அடித்தார். 4 பந்தை சந்திக்கும்போது அவருக்கு கழுத்தில் அசௌகரியம் ஏற்பட்டது. அவர் தனது கழுத்தை பிடித்துக் கொண்டதால், மைதானத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

சுப்மன் கில்லுக்கு கழுத்துப் பகுதியில் பிரச்சனை ஏற்பட்டதை அடுத்து, அணியின் பிசியோ அவரை பரிசோதிக்க களத்திற்குச் சென்றார். கில்லின் நிலையை மதிப்பிட்ட பிறகு, பிசியோ அவரை மைதானத்திலிருந்து வெளியேற சொல்லி அறிவுரை வழங்கினார். அதன்படி, சுப்மன் கில் மைதானத்தை விட்டு வெளியேறும் வீடியோ அவரது வலியின் அளவைக் காட்டுகிறது.

காயம் காரணமாக வெளியேறிய சுப்மன் கில்:


சுப்மன் கில் 3 பந்துகளில் 4 ரன்கள் எடுத்து பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, ​​காயம் காரணமாக ரிட்டையர்ட் ஹர்ட் ஆனார் . கில்லுக்கு ஏற்பட்ட இந்த கழுத்து பிரச்சனையின் தீவிரம் அவரது பரிசோதனைக்குப் பிறகுதான் தெரியும். பிரச்சனை அவ்வளவு பெரியதாக இருக்காது என்றும், அவர் தொடர்ந்து பேட்டிங் செய்ய முடியும் என்றும் ரசிகர்கள் நம்புகிறார்கள். ஏனெனில், இந்திய அணி வெற்றிபெற சுப்மன் கில் பங்களிப்பது மிக முக்கியம்.

ALSO READ: இந்திய அணிக்கு குடைச்சல் கொடுக்கும் சுழற்பந்து.. தென் ஆப்பிரிக்காவின் ஐடியா இதுவா?

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் இந்தியா 79 ரன்கள் எடுத்திருந்தபோது சுப்மன் கில் காயம் காரணமாக வெளியேறினார்.  முன்னதாக, இந்தியா முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்காவை 159 ரன்களுக்கு ஆல் அவுட் செய்திருந்தது. தற்போது இந்திய அணி 51 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகலை இழந்து 165 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.