AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வாழ 2: பயோ பிக் ஆஃப் எ பில்லியன் ப்ரோஸ் படத்தின் ரிலீஸ் எப்போது?

Vaazha II: Biopic of a Billion Bros Movie Release Update: மலையாள சினிமாவில் ஐந்து இளைஞர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் வாழ பயோ பிக் ஆஃப் எ பில்லியன் பாய்ஸ்.

வாழ 2: பயோ பிக் ஆஃப் எ பில்லியன் ப்ரோஸ் படத்தின் ரிலீஸ் எப்போது?
வாழ 2: பயோ பிக் ஆஃப் எ பில்லியன் ப்ரோஸ்
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 01 Mar 2026 16:29 PM IST

மலையாள சினிமாவில் கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் வாழ: பயோ பிக் ஆஃப் ட் பில்லியன் பாய்ஸ். இந்தப் படத்தை இயக்குநர் ஆனந்த் மேனன் இயக்கி இருந்த நிலையில் படத்திற்கு திரைக்கதையை விபின் தாஸ் எழுதி இருந்தார். இந்தப் படத்தில் நடிகர்கள் சிஜு சன்னி, அமித் மோகன் ராஜேஸ்வரி, ஜோமோன் ஜோதிர், அன்ஷித் அனு, அனுராஜ் ஓ. பி., சாஃப் ஆகியோர் உடன் இணைந்து பலர் முக்கிய வேடங்களில் நடித்து இருந்தனர். இந்தப் படம் பள்ளியில் படிக்கும் போது இருந்தே ஒன்றாக வளர்ந்த 5 இளைஞர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி இருந்தது. இவர்கள் 5 பேரும் வேலைக்கு எதுவும் செல்லாமல் பெற்றோர்களிடம் திட்டுவாங்கும் கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர்.

இந்தப் படம் பார்த்த பலருக்கு தங்களது வாழ்க்கையின் பல நினைவுகளை தூண்டியதாகவும் கருத்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் இந்தப் படத்தின் இரண்டம் பாகமான வாழ 2: பயோ பிக் ஆஃப் ட் பில்லியன் ப்ரோஸ் படத்தின் படபிடிப்பு பணிகள் தொடங்கி முடிவடைந்துள்ளது. இந்தப் படத்தில் நடிகர்கள் ஹாஷிர், ஆலன் பின் சிராஜ், அஜின் ஜாய், விநாயக், அல் அமீன், நிஹால் நிஜாம், நிப்ராஸ் நௌஷாத், ஷாஹுபாஸ், சபீர் எஸ், தியான் ஸ்ரீனிவாசன், அல்போன்ஸ் புத்ரன், சுதீஷ், விஜய் பாபு, அஜு வர்கீஸ், பிஜு குட்டன், ஷாருக்கான், டைகர் ஷெராஃப் என பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

வாழ 2: பயோ பிக் ஆஃப் எ பில்லியன் ப்ரோஸ் படத்தின் ரிலீஸ் எப்போது?

படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னதாக முடிவடைந்த நிலையில் தற்போது வெளியீட்டிற்கான போஸ்ட் புரடெக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி வாழ 2: பயோ பிக் ஆஃப் எ பில்லியன் ப்ரோஸ் படம் வருகின்ற ஏப்ரல் மாதம் 2-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படம் நடிகர் மோகன்லாலின் நடிப்பில் வெளியாக உள்ள த்ரிஷ்யம் 3 படத்துடன் நேரடியாக மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… சின்னத்திரை ரசிகர்களே ரெடியா? விஜய் டிவியில் புதிதாக தொடங்கும் நிகழ்ச்சி.. முதல் போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா?

வாழ 2: பயோ பிக் ஆஃப் எ பில்லியன் ப்ரோஸ் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… சேயோன் படம் எப்படிப்பட்ட கதையைக் கொண்டது – இயக்குநர் சிவகுமார் முருகேசன் விளக்கம்

Follow Us