AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Sivakarthikeyan: அஜித்தின் படத்தை தயாரிப்பீர்களா? எது நானா.. – வேடிக்கையாக பதிலளித்த சிவகார்த்திகேயன்!

Sivakartikeyan About Producing Ajith Kumar Film: சிவகார்த்திகேயன் தயாரிப்பில் தாய் கிழவி என்ற படமானது இன்று வெளியாகியிருந்தது. இந்நிலையில் இப்படத்தை பார்த்தபிறகு செய்தியாளர்களை சந்தித்த சிவகார்த்திகேயனிடம், அஜித்தின் படத்தை தயாரிப்பீர்களா? என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சிவகார்த்திகேயன் சொன்னது குறித்து பார்க்கலாம்.

Sivakarthikeyan: அஜித்தின் படத்தை தயாரிப்பீர்களா? எது நானா.. – வேடிக்கையாக பதிலளித்த சிவகார்த்திகேயன்!
சிவகார்த்திகேயன்- அஜித் குமார்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 27 Feb 2026 16:56 PM IST

தென்னிந்திய சினிமாவில் பிரபல கதாநாயகன் மற்றும் தயாரிப்பாளராக இருப்பவர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan). இவரின் நடிப்பில் இறுதியாக பராசக்தி (Parasakthi) என்ற படமானது வெளியாகியிருந்த நிலையில், கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. மேலும் இவர் தயாரிப்பாளராகவும் படங்களை தயாரித்துவரும் நிலையில், இவரின் தயாரிப்பில் இன்று 2026 பிப்ரவரி 27ம் தேதியில் வெளியான திரைப்படம்தான் “தாய் கிழவி” (Thaai Kizhavi). இப்படத்தில் ராதிகா சரத்குமார் (Radhika Sarathkumar) நடிக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் (Sivakumar Murugesan) இயக்கியிருந்தார். இப்படம் சிவகார்த்திகேயனின் “சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ்” நிறுவனத்தின் கீழ் தயாரிக்கப்பட்டிருந்தது. இப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், இப்படத்தின் மதுரை FDFS ஷோவில், தாய் கிழவி படக்குழு கலந்துகொண்டிருந்தனர். இன்று காலை 9 மணி முதல் இப்படம் திரையிடப்பட்ட நிலையில், மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது.

இந்நிலையில் இப்படத்தை பார்த்த பிறகு செய்தியாளர்களை தாய் கிழவி படக்குழு சந்தித்திருந்தது. அப்போது நடிகர் சிவகார்த்திகேயனிடம் அஜித் குமாரின் திரைப்படத்தை தயாரிப்பிறீர்களா? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சிவகார்த்திகேயன் வேடிக்கையாக பதிலளித்துள்ளார்.

இதையும் படிங்க: 6 -7 வருடங்களுக்கு பின் மீண்டும் இந்திய சினிமாவில்… வாரணாசி படத்திற்காக காத்திருக்கிறேன் – பிரியங்கா சோப்ரா பேச்சு!

அஜித்தின் படத்தை தயாரிப்பது குறித்து சிவகார்த்திகேயன் பகிர்ந்த விஷயம் :

அந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சிவகார்த்திகேயன், “எது நானா?, அஜித் சார் படத்தையா?. நான் வெச்சிருக்காது சின்ன தயாரிப்பு நிறுவனம். அவ்வளவு பெரிய நிறுவனமாக எனது கம்பெனி வளரலையே. வளர்ந்து, ஒருவேளை அஜித் சார் கிட்ட கேட்டுட்டு அவர் ஓகே சொன்னால், செமயா பண்ணலாம். அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால், அது கண்டிப்பாக அவரின் ரசிகர்கள் எல்லோருக்கும் ஒரு திருவிழாவாக இருக்கும். இது எல்லாமே ஒரு கனவுதான், ஆனால் இப்போதைக்கு எனது சம்பளத்திலிருந்து, கொஞ்சமாக பணம் ஒதுக்கி அதை வைத்து ஒரு நல்ல படம் பண்ணுவதுதான், அவ்ளோதான் இப்போதைக்கு எனது ஆசை” என அதில் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ‘தலைவர் 173 படத்தில் நடிக்கிறேனா?’ – உண்மையை உடைத்த பிரியங்கா மோகன்!

தாய் கிழவி திரைப்படம் ரிலீஸ் குறித்து சிவகார்த்திகேயன் வெளியிட்ட எக்ஸ் பதிவு:

நடிகர் சிவகார்த்திகேயன் நடிகர், தயாரிப்பாளர், பாடகர் என பல்வேறு பணிகளை செய்துவருகிறார். இவர் சிவகுமார் முருகேசனை வைத்து தாய் கிழவி படத்தை இயக்கியிருந்த நிலையில், தற்போது அவருடனே தனது 26வது படமான சேயோன் என்ற படத்தில் இணைந்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் துவங்கிய நிலையில், இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இளம் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தின் அப்டேட்டுகளும் தொடர்ந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us