Priyanka Chopra: 6 -7 வருடங்களுக்கு பின் மீண்டும் இந்திய சினிமாவில்… வாரணாசி படத்திற்காக காத்திருக்கிறேன் – பிரியங்கா சோப்ரா பேச்சு!
Priyanka Chopra About Varanasi Movie: இந்திய சினிமாவையும் கடந்து ஹாலிவுட் சினிமாவிலும் கதாநாயகியாக கலக்கிவருபவர் பிரியங்கா சோப்ரா. இவர் தெலுங்கில் வாரணாசி என்ற படத்தில் நடித்துவரும் நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் குறித்து அப்டேட் ஒன்றை தெரிவித்துள்ளார். அது குறித்து பார்க்கலாம்.
பான் இந்திய கதாநாயகியாக கலக்கிவருபவர் நடிகை பிரியங்கா சோப்ரா (Priyanka Chopra). இவர் தற்போது ஹாலிவுட் திரைப்படங்களில் ஆக்ஷன் கதாநாயகியாக கலக்கிவருகிறார். இவர் கிட்டத்தட்ட 6 முதல் 7 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய சினிமாவில் திரைப்படங்களில் நடிக்கவில்லை. முழுவதுமாக ஹாலிவுட் படங்களில் நடிப்பதையே வழக்கமாக கொண்டிருந்தார். இவர் கடந்த 2000ம் ஆண்டில் மிஸ் வேர்ல்ட் என்ற அழகி பட்டத்தை வெற்ற பெருமையும் இவருக்கு உண்டு. அந்த வகையில் இவர் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான முதல் திரைப்படம் தமிழன் (Tamizhan). இவர் கடந்த 2002ம் ஆண்டில் இயக்குநர் மஜித் இயக்கத்தில், தளபதி விஜய் (Thalapathy Vijay) இப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். இப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்து நடிகை பிரியங்கா சோப்ரா முதல் முதலில் கதாநாயகியாக சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டார்.
இதைத் தொடர்ந்து தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளிலும் தொடர்ந்து படங்களில் நடித்துவந்தார். அதில் இந்தி திரைப்படம் இவருக்கு கை கொடுக்கவே, தொடர்ந்து மிக பிரம்மாண்டமான படங்களிலும் நடித்துவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி (S.S. Rajamouli) மற்றும் மகேஷ் பாபா (Mahesh Babu) கூட்டணியில் உருவாகிவரும் “வாரணாசி” (Varanasi) என்ற திரைப்படத்திலும் இவர் கதாநாயகியாக நடித்துவருகிறார். தற்போது அப்படத்தின் ஷூட்டிங் குறித்து இவர் தெரிவித்துள்ளார்.




இதையும் படிங்க: ராதிகா சரத்குமாரின் தாய் கிழவி திரைப்படம் எப்படி இருக்கு? – எக்ஸ் விமர்சனங்கள் இதோ!
வாரணாசி படத்தின் ஷூட்டிங் குறித்து பேசிய நடிகை பிரியங்கா சோப்ரா :
சமீபத்தில் ஆங்கில நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த நடிகை பிரியங்கா சோப்ராவிடம், வாரணாசி படம் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டது. அப்போது அதில் பேசிய அவர், “நான் 6 முதல் 7 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இந்திய சினிமாவில் நடிக்கிறேன். அந்த படம்தான் வாரணாசி. இதை இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்குகிறார். இவர் இந்தியாவிலே மிகவும் சிறப்பான இயக்குநர்களில் ஒருவர். இப்படமானது மிகவும் அட்வெஞ்சராக இருக்கும், அதன் மீது நானும் ஆர்வமாக இருக்கிறேன்.
இதையும் படிங்க: ‘D55 படத்திற்காக ஸ்பெஷல் ஆல்பம் தயாராகிறது’ – ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சாய் அபயங்கர்!
இப்படம் வரும் 2027 ஏப்ரல் 27ம் தேதியில் வெளியாகவுள்ளது. இப்படமானது ஐமேக்ஸ் தரத்தில் படப்பிடிக்கப்பட்டுவருகிறது, உலகமெங்கும் இப்படம் வெளியாக காத்திருக்கிறது. ஏற்கனவே இப்படத்தின் 14 மாதங்கள் ஷூட்டிங் முடிந்தது, இன்னும் 6 மாதங்களுக்கு ஷூட்டிங் நடைபெறும்” என அதில் அவர் தெரிவித்துள்ளார்.
வாரணாசி திரைப்படம் குறித்து நடிகை பிரியங்கா சோப்ரா பேசிய வீடியோ பதிவு:
#PriyankaChopra Recent
– I am back in Indian cinema after 6–7 years. #SSRajamouli is India’s most amazing and talented director.
– We have been filming for 14 months, and we will continue shooting for another 6 months.#Varanasipic.twitter.com/4k6mHCUf71— Movie Tamil (@_MovieTamil) February 27, 2026
இப்படமானது வரும் 2027ம் ஆண்டு ஏப்ரல் 7ம் தேதியில் படக்குழு வெளியிட திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் இப்படமானது கிட்டத்தட்ட ஐ 1000 கோடிகளுக்கு மேல் பட்ஜெட்டில் தயாராகவுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இப்படத்தின் அப்டேட்டுகளும் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களை கவர்ந்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.