AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Sai Abhyankkar: ‘D55 படத்திற்காக ஸ்பெஷல் ஆல்பம் தயாராகிறது’ – ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சாய் அபயங்கர்!

Sai Abhyankkar About D55 Movie: இளம் இசையமைப்பாளராக தென்னிந்திய மொழிகளில் கலக்கிவருபவர் சாய் அபயங்கர். இவர் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நிலையில், அந்த நிகழ்ச்சியின்போது தனுஷின் டி55 படம் குறித்து சூப்பர் அப்டேட் ஒன்றை தெரிவித்துள்ளார். அது குறித்து பார்க்கலாம்.

Sai Abhyankkar: ‘D55 படத்திற்காக ஸ்பெஷல் ஆல்பம் தயாராகிறது’ – ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சாய் அபயங்கர்!
சாய் அபயங்கர் மற்றும் தனுஷ்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 27 Feb 2026 13:10 PM IST

தமிழில் ஆல்பம் பாடல்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் சாய் அபயங்கர் (Sai Abhyankkar). “கட்சி சேர” என்ற பாடலின் மூலம் மக்களிடையே பிரபலமான இவர், தொடர்ந்து அடுத்தடுத்த ஆல்பம் பாடல்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தார். மேலும் இவர் விரைவில் தனது 5வது அல்பம் பாடலையும் வெளியிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அல்மபம் பாடகராகவும் இசையமைப்பாளராகவும் இருந்துவந்த இவர், தற்போது சினிமாவில் இசையமைப்பாளராகவும் படங்களில் பணியாற்றிவருகிறார். இவரின் இசையமைப்பில் தமிழில் முதல் முதலாக வெளியான படம்தான் டியூட் (Dude). பிரதீப் ரங்கநாதனின் (Pradeep Ranganathan) நடிப்பில் வெளியான இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் வரவேற்பை பெற்றிருந்தது அனைவருக்கும் தெரிந்ததே.

இதையடுத்து சாய் அபயங்கர், சூர்யா (Suriya), கார்த்தி (Karthi), தனுஷ் (Dhanush) மற்றும் அல்லு அர்ஜுன் (Allu Arjun) போன்ற பிரபலங்களின் படங்களுக்கு இசையமைத்துவருகிறார். இந்நிலையில் சமீபத்தில் இவர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டிருந்த நிலையில், அதில் தனுஷின் டி55 (D55) படம் பற்றி அப்டேட்டை தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ராதிகா சரத்குமாரின் தாய் கிழவி திரைப்படம் எப்படி இருக்கு? – எக்ஸ் விமர்சனங்கள் இதோ!

தனுஷின் டி55 படம் பற்றி சாய் அபயங்கர் பேச்சு:

அந்த நிகழ்ச்சியின்போது பேசிய சாய் அபயங்கர், “கருப்பு படம் விரைவில் வருகிறது. அதன்பிறகு தனுஷ் சாரின் (டி55) படத்திற்கு சிறப்பாக காத்திருக்கிறேன். மேலும் அல்லு சாரின் படத்தின் இசையமைப்பு பணிகள் நடைபெற்றுவருகிறது. மேலும் தனுஷின் டி55 படத்தின் இசையமைப்பு பணிகள் தொடங்கியது, எதிர்பார்ப்புகளுடனும் பணிகள் நடைபெற்றுவருகிறது.

இதையும் படிங்க: என்னோடு நீ உன்னோடு நான்.. திருமண புகைப்படங்களை பகிர்ந்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா ஜோடி!

சொல்லவே வேண்டாம், தனுஷ் சார் மற்றும் ராஜ்குமார் சாருடன் பணியாற்றும்போது, மிகவும் ஸ்பெஷலான ஆல்பம் தயாராகிவருகிறது. தனுஷ் சாரின் ரசிகர்களை ஆடவைக்கும் பாடலும் இருக்கும், காதல் பாடலும் இருக்கும் மொத்தத்தில் சிறப்பான ஆல்பமாக டி 55 படம் இருக்கும்” என அதில் தெரிவித்துள்ளார்.

தனுஷின் டி55 படம் குறித்து சாய் அபயங்கர் பேசியது குறித்த பதிவு:

இந்த டி55 படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க, தனுஷ் கதாநாயகனாக நடித்துவருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக நடிகைகள் சாய் பல்லவி மற்றும் ஸ்ரீலீலா போன்ற பிரபலங்களும் இணைந்து நடிக்கிறர்கள். மேலும் இதில் நடிகர் மம்முட்டியும் மிக முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் சிறப்பாக நடைபெற்றுவரும் நிலையில், வரும் 2027ம் ஆண்டில் இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us