AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

குயிக் கன் கௌபாய்ஸ் Vs மைனிங் மாஃபியாஸ்.. பிக் பாஸில் இந்த வாரத்திற்கான சிறப்பான டாஸ்க் – வைரலாகும் ப்ரோமோ!

Quick Gun Cowboys vs Mining Mafias: பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது தொடங்கி கிட்டத்தட்ட 8 வாரமாகியுள்ளது. கடந்த வாரத்தில் ரெட் டீம் மற்றும் ப்ளூ டீம் என இந்த நிகழ்ச்சி களைகட்டிய நிலையில், இந்த வாரத்தில் குயிக் கன் கௌபாய்ஸ் Vs மைனிங் மாஃபியாஸ் என புதுவிதமான டாஸ்க் நடத்தப்படவுள்ளது. இது தொடர்பாக வெளியான ப்ரோமோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

குயிக் கன் கௌபாய்ஸ் Vs மைனிங் மாஃபியாஸ்.. பிக் பாஸில் இந்த வாரத்திற்கான சிறப்பான டாஸ்க் – வைரலாகும் ப்ரோமோ!
பிக் பாஸ் சீசன் 10 ப்ரோமோImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 27 Oct 2026 10:39 AM IST

தமிழில் விஜய் தொலைக்காட்சியில் (Vijay Tv) ஒளிபரப்பாகிவரும் பிரபலமான ரியாலிட்டி ஷோதான் பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10). கடந்த 2026 செப்டம்பர் முதல் வாரத்தில் இந்த நிகழ்ச்சியானது ஆரம்பமான நிலையில், இன்றுடன் (27/10/2026) கிட்டத்தட்ட 51வது நாளாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) தொகுத்துவந்த நிலையில், கடந்த வாரத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் (ramya Krishnan) தொகுத்து வழங்கியிருந்தார். அந்த விதத்தில் இவர் தொகுத்த விதமானது புதியதாக இருந்தது. கடந்த வாரத்தில் ரெட் டீம் vs ப்ளூ டீம் என இந்த போட்டியானது சுவாரஸ்யமாக நடைபெற்றிருந்தது. அதில் ப்ளூ டீம் போட்டியாளர்கள் வெற்றிபெற்றிருந்த நிலையில், ரெட் டீம் தோல்வியடைந்தது.

அந்த விதத்தில் இந்த வாரத்திலும் அதே போல குயிக் கன் கௌபாய்ஸ் Vs மைனிங் மாஃபியாஸ் என்ற டாஸ்க் நடைபெற்றுவருகிறது. இது தொடர்பான ப்ரோமோ வெளியான நிலையில், இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: அல்லு அர்ஜூன் ராக்கா படத்தில் ராஷ்மிகாவின் கதாபாத்திரம் இதுவா? – வைரலாகும் தகவல்!

பிக் பாஸில் குயிக் கன் கௌபாய்ஸ் Vs மைனிங் மாஃபியாஸ்:

கடந்த வாரத்தில் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியானது இரு அணிகளாக பிரிந்து வித்தியாசமான டாஸ்குகள் நடைபெற்றிருந்தது. அந்த விதத்தில் இந்த வாரத்தில் குயிக் கன் கௌபாய்ஸ் Vs மைனிங் மாஃபியாஸ் என இரு அணிகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். இதில் குயிக் கன் கௌபாய்ஸ் டீம் கிச்சனை கொள்ளையடிக்கலாம், கொள்ளையடித்த பொருட்களை தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ளலாம்.

இதையும் படிங்க: என்னப்பா இது… அஸ்மிதாவால் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஜேசன் மற்றும் வினோத்!

அதுபோல மைனிங் மாஃபியாஸ் டீம் இந்த வீட்டின் உழைப்பாளிகளாம். இந்த வாரத்தில் நடத்தப்படும் டாஸ்கில் வென்றால் குயிக் கன் கௌபாய்ஸ் டீம் கிச்சனை ரைட் செய்யலாம். மைனிங் மாஃபியாஸ் டீம் வெற்றிபெற்றால் கிச்சனை காப்பாற்றலாம் என்பதுபோல இந்த டாஸ்கானது அறிவிக்கப்பட்டுள்ளது.

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் 51வது நாளின் முதல் ப்ரோமோ குறித்த எக்ஸ் பதிவு:

இந்த பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்றுவருகிறது. 8வது வாரத்தில் இந்த நிகழ்ச்சியானது இருந்துவரும் நிலையில், குயிக் கன் கௌபாய்ஸ் Vs மைனிங் மாஃபியாஸ் டாஸ்க்குடன் ஆரம்பமாகியுள்ளது. இந்த டாஸ்க் கடந்த வாரங்களில் நடத்த போட்டிகளை போலவே சிறப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டாஸ்கில் என்னென்ன பிரச்சனைகள் நடைபெற்றுகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Follow Us