AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அஜித் குமாரின் டேர் டெவில் படத்தின் ஷூட்டிங் எங்கு எப்போது தொடங்குகிறது? – விவரங்கள் இதோ!

Dare Devil Movie Shooting: தென்னிந்திய சினிமாவில் நடிகராகவும், கார் ரேஸராகவும் மக்கள் மத்தியில் பிரபலமானவர் அஜித் குமார். இவர் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் டேர் டெவில் என்ற படத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அந்த விதத்தில் இப்படத்தின் ஷூட்டிங் எப்போது எங்கு நடைபெறுகிறது என்பது குறித்து விவரமாக பார்க்கலாம்.

அஜித் குமாரின் டேர் டெவில் படத்தின் ஷூட்டிங் எங்கு எப்போது தொடங்குகிறது? – விவரங்கள் இதோ!
டேர் டெவில் Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 27 Oct 2026 11:24 AM IST

நடிகர் அஜித் குமார் (Ajith Kumar) தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர். இவர் தற்போது கார் ரேஸ் (Car Race) பயிற்சிகள் மற்றும் போட்டியில் தனது கவனத்தை செலுத்திவருகிறார். கடந்த 2024ம் ஆண்டு இறுதியில் கார் ரேஸ் போட்டிகளில் நுழைந்த நிலையில், கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக அதில் இருந்துவருகிறார். கடந்த 2025ம் ஆண்டில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி (Good Bad Ugly) என்ற இரு படங்கள் இவரின் நடிப்பில் வெளியானது. ஆனால் இந்த 2026ம் ஆண்டில் ஒரு படம் கூட வெளியாகவில்லை. குட் பேட் அக்லி படத்தின் வெற்றியை அடுத்து தனது 64வது படத்திலும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் (Adhik Ravichanthran) இணைந்துள்ளார்.

இந்த படம் ஆரம்பத்தில் AK64 என அழைக்கப்பட்டுவந்த நிலையில், அதன் பிறகு படக்குழு “டேர் டெவில்” (Dare Devil) என டைட்டில் வைத்திருந்தது. இந்த படத்தை ஷாலினி அஜித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் ஷூட்டிங் எப்போது எங்கு தொடங்கும் என்பது குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: குயிக் கன் கௌபாய்ஸ் Vs மைனிங் மாஃபியாஸ்.. பிக் பாஸில் இந்த வாரத்திற்கான சிறப்பான டாஸ்க் – வைரலாகும் ப்ரோமோ!

அஜித் குமாரின் டேர் டெவில் படத்தின் ஷூட்டிங் தொடக்கம் எங்கு ? எப்போது?:

இந்த டேர் டெவில் திரைப்படமானது அஜித் குமாரின் நடிப்பில் உருவாகும் ஒரு மாஸ் கதைக்களம் கொண்ட கேங்ஸ்டர் படமாகும். இந்த படத்தில் அஜித் ஹீரோவாக நடிக்க, அவருடன் நடிகை ஸ்ரீலீலா முக்கியமான வேடத்தில் நடிப்பதாக கூறப்பட்டிருந்தது. மேலும் இப்படத்தில் நடிகை ஸ்வாசிகாவும் சிறப்பான வேடத்தில் நடிக்கிறாராம். இந்த படத்தின் ஷூட்டிங் 2026ம் ஆண்டு நவம்பர் 2ம் தேதி பூஜைகளுடன் தொடங்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: ஜெர்மனியில் அரசன் ரீயூனியன்… இணையத்தில் வைரலாகும் சிலம்பரசன் – ஆண்ட்ரியா போட்டோஸ்!

ஆனால் இப்படத்தின் ஷூட்டிங் பூஜை நவம்பர் 2ம் தேதியில் நடைபெறவுள்ள நிலையில், அதில் அஜித் கலந்துகொள்வதாக கூறப்படுகிறது. இதற்கு பின் இப்படத்தின் ஷூட்டிங் நவம்பர் 12 அல்லது 13ம் தேதியில் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம்ஸ் சிட்டியில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஷூட்டிங்கில் நடிகை ஸ்ரீலீலாவும் இணைவார் என கூறப்படுகிறது.

அஜித் குமாரின் டேர் டெவில் படத்தின் ஷூட்டிங் குறித்து இணையத்தில் வைரலாகும் எக்ஸ் பதிவு:

இந்த டேர் டெவில் திரைப்படமானது கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுவருகிறது. இந்த படத்தில் நடிகர் அஜித் ஹீரோவாக நடிக்கும் நிலையில், தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் அவர் உருவாக்கும் முதல் படமாக இது அமைந்துள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங்கை கிட்டத்தட்ட 4 மாதங்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், 2027ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கு பின் இப்படத்தை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us