AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

FD : 1 ஆண்டுக்கான நிலையான வைப்பு நிதி திட்டம்.. முன்னணி வங்கிகள் வழங்கும் வட்டி விகிதங்கள்!

One Year Fixed Deposit Scheme Interest | இந்தியாவில் உள்ள தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் நிலையான வைப்பு நிதி திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், 1 ஆண்டுக்கான திட்டத்திற்கு இந்த வங்கிகள் வழங்கும் வட்டி விகிதம் குறித்து பார்க்கலாம்.

FD : 1 ஆண்டுக்கான நிலையான வைப்பு நிதி திட்டம்.. முன்னணி வங்கிகள் வழங்கும் வட்டி விகிதங்கள்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 26 Jul 2026 10:00 AM IST

கையில் இருக்கும் பணத்தை பாதுகாப்பாகவும், நல்ல லாபம் தரும் திட்டத்திலும் முதலீடு செய்ய வேண்டும் என நினைக்கும் நபர்களுக்கு வரும் முதல் யோசனை தான் நிலையான வைப்பு நிதி திட்டம் (Fixed Deposit Scheme). இந்த திட்டம் எஸ்ஐபி, மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை போல நிதி பாதுகாப்பின்மை கொண்டவை அல்ல. இதுவே ஏராளமான நடுத்தர வர்கத்தினர் இந்த திட்டத்தில் முதலீடு செய்ய முக்கிய காரணமாக உள்ளது. பாதுகாப்பான மற்றும் நிலையான வருமானத்தை வரும் நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு வங்கிகள் எவ்வளவு வட்டி வழங்குகின்றன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

நிலையான வைப்பு நிதி திட்டம் – வங்கிகள் வழங்கும் வட்டி விகிதம்

ஒவ்வொரு வங்கிகளும் 1 ஆண்டுக்கான திட்டம், 2 ஆண்டுக்கான திட்டம், 3 ஆண்டுக்கான திட்டம் மற்றும் 5 ஆண்டுக்கான திட்டம் ஆகியவற்றை செயல்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், 1 ஆண்டுக்கான திட்டத்திற்கு வங்கிகள் வழங்கும் வட்டி விகிதங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

பொதுத்துறை வங்கிகள்

1 ஆண்டுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு பொதுத்துறை வங்கிகள் வழங்கும் வட்டி விகிதங்கள் குறித்து பார்க்கலாம்.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா

1 ஆண்டு கால அளவீடு கொண்ட திட்டத்திற்கு இந்த வங்கி 6.45 சதவீதம் வட்டி வழங்குகிறது.

பேங்க் ஆஃப் பரோடா

1 ஆண்டு கால அளவீடு கொண்ட திட்டத்திற்கு இந்த வங்கி 6.75 சதவீதம் வட்டி வழங்குகிறது.

பஞ்சாப் நேஷனல் வங்கி

1 ஆண்டு கால அளவீடு கொண்ட திட்டத்திற்கு இந்த வங்கி 6.60 சதவீதம் வட்டி வழங்குகிறது.

இதையும் படிங்க : Gold : அடுத்த 3 – 5 ஆண்டுகளுக்கு தங்கம் விலை இதுதான்.. யெஸ் செக்யூரிட்டிஸ் அறிக்கை கூறுவது என்ன?

தனியார் துறை வங்கிகள்

1 ஆண்டுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு தனியார் துறை வங்கிகள் வழங்கும் வட்டி விகிதங்கள் குறித்து பார்க்கலாம்.

ஹெச்டிஎஃப்சி மற்றும் ஐசிஐசிஐ வங்கிகள்

1 ஆண்டு கால அளவீடு கொண்ட திட்டத்திற்கு இந்த வங்கி 6.50 சதவீதம் வட்டி வழங்குகிறது.

ஆக்சிஸ் வங்கி

1 ஆண்டு கால அளவீடு கொண்ட திட்டத்திற்கு இந்த வங்கி 6.50 சதவீதம் வட்டி வழங்குகிறது.

யெஸ் பேங்க் மற்றும் ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க்

1 ஆண்டு கால அளவீடு கொண்ட திட்டத்திற்கு இந்த வங்கி 7.25 மற்றும் 7,35 சதவீதம் வட்டி வழங்குகிறது.

(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TV9Tamil பொறுப்பேற்காது.)

Follow Us