AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Gold : அடுத்த 3 – 5 ஆண்டுகளுக்கு தங்கம் விலை இதுதான்.. யெஸ் செக்யூரிட்டிஸ் அறிக்கை கூறுவது என்ன?

Gold Price May Not Face Huge Hike | தற்போதைய நிலவரப்படி தங்கம் விலை நாளுக்கு நாள் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், அடுத்த 3 - 5 ஆண்டுகளில் தங்கம் விலை பெரிய அளவில் மாற்றமடையாது என யெஸ் செக்யூரிட்டிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Gold : அடுத்த 3 – 5 ஆண்டுகளுக்கு தங்கம் விலை இதுதான்.. யெஸ் செக்யூரிட்டிஸ் அறிக்கை கூறுவது என்ன?
மாதிரி புகைப்படம் (Pic Credit : Gettyimages)
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 24 Jul 2026 21:16 PM IST

தங்கம் நாளுக்கு நாள் விலை மாறும் தன்மை கொண்டது. இன்று இருக்கும் விலை நாளை மாற்றம் அடையும். சில நாட்கள் முன்பு இருந்த விலையிலேயே விற்பனை செய்யப்படும். இவ்வாறு தங்கம் விலை (Gold Price) தொடர்ந்து மாற்றமடைவதற்கும், மாற்றமடையாமல் இருப்பதற்கும் பணவீக்கம், புவிசார் பதற்றங்கள், பங்குசந்தை சிக்கல் உள்ளிட்டவை முக்கிய காரணிகளாக உள்ளன. ஆனால், அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளுக்கு தங்கம் விலை இதுவாக தான் இருக்கும் என பொருளாதார வல்லுநர்கள் அடித்து கூறுகின்றனர். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தங்கம் விலை உயருமா, குறையுமா?

தற்போதைய காலக்கட்டத்தில் தங்கத்தில் முதலீடு செய்பவர்களுக்குன் இருக்கக்கூடிய முக்கிய கேள்வி தான் தங்கம் விலை குறையுமா அல்லது உயர்வை சந்திக்குமா என்பது. இந்த கேள்விக்கு யெஸ் செக்யூரிட்டிஸ் நிறுவனம் அறிக்கை மூலம் பதில் அளித்துள்ளது. அதில், கடந்த பல சில ஆண்டுகளாக முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தந்த தங்கம், இனி வரும் காலங்களில் மந்தமடைய கூடும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : பிஎஃப் கணக்கில் பணம் எடுக்க போறீங்களா?.. இந்த 25% குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள்!

தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தும் முக்கிய காரணி

இதற்கு முன்பு நிலவிய Saving Glut என்ற பொருளாதார நிலை மாறி, தற்போது Capital Formation என்ற நிலைக்கு உலகம் சென்றுவிட்டது. இந்த மாற்றமே தங்கத்தின் விலையில் தாக்கம் ஏற்பட முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், பணத்தை வங்கியில் வைத்திருப்பது அல்லது அரசுப் பத்திரங்களில் முதலீடு செய்வது குறைந்த லாபத்தை தந்ததன் காரணமாக தான் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமாக இருந்தது.

இதையும் படிங்க : EPFO : பிஎஃப் வட்டி வரவு வைத்த இபிஎஃப்ஓ.. உங்களுக்கு வந்துவிட்டதா?.. உடனே செக் பண்ணுங்க!

ஆனால், தற்போது அரசுப் பத்திரங்கள் மற்றும் இதர முதலீடுகளில் அதிக அளவு வருமானம் கிடைக்கிறது. இதுவே தங்கத்தின் மீதான முதலீடு குறைந்து, தங்கம் விலை மந்தமடைய முக்கிய காரணியாக. இவற்றின் காரணமாக அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளுக்கு தங்கம் விலை பெரிய அளவிலான விலை உயர்வை சந்திக்காது என கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us