AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

EPFO : பிஎஃப் வட்டி வரவு வைத்த இபிஎஃப்ஓ.. உங்களுக்கு வந்துவிட்டதா?.. உடனே செக் பண்ணுங்க!

EPFO Credited Interest On July 23 2026 | ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தில் பிஎஃப் கணக்கு வைத்துள்ள ஊழியர்களுக்கு 2026 - 2027 ஆம் நிதியாண்டுக்கான வட்டி வரவு வைக்கப்பட்டுள்ளது. அதனை செக் செய்வது எப்படி என பார்க்கலாம்.

EPFO : பிஎஃப் வட்டி வரவு வைத்த இபிஎஃப்ஓ.. உங்களுக்கு வந்துவிட்டதா?.. உடனே செக் பண்ணுங்க!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 23 Jul 2026 23:29 PM IST

இந்தியாவில் பணியாற்றும் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கான பாதுகாப்பான எதிர்காலத்தை உறுதி செய்யும் பணியை ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் (EPFO – Employee Provident Fund Organization) மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக ஊழியர்களின் மாத ஊதியத்தில் இருந்து குறிப்பிட்ட தொகையை பிடித்தம் செய்து, ஊழியர்களின் பெயர்களில் பிஎஃப் (PF – Provident Fund) கணக்கு தொடங்கி அதில் வரவு வைத்து வருகிறது. இந்த பிஎஃப் பணத்தை ஊழியர்கள் தங்களது தேவைகளின்போது எடுத்துக்கொள்ள அனுமதி உள்ளது. ஒருவேளை ஊழியர்கள் தங்கள் பிஎஃப் பணத்தை எடுக்காமல் அப்படியே வைத்திருந்தால் அதற்கான வட்டியும் வழங்கப்படுகிறது.

பிஎஃப் வட்டி வரவு வைத்த இபிஎஃப்ஓ

இவ்வாறு ஒவ்வொரு ஆண்டும் பிஎஃப் பணத்திற்கான வட்டியை மத்திய அரசு ஊழியர்களின் பிஎஃப் கணக்கில் வரவு வைத்து வருகிறது. அந்த வகையில் 2026 – 2027 ஆம் ஆண்டுக்கான பிஎஃப் வட்டியை ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் இன்று (ஜூலை 23, 2026) வரவு வைத்துள்ளது. இந்த நிலையில், பிஎஃப் வட்டியை எப்படி சோதனை செய்வது என்பது குறித்து விரிவாக பாடிக்கலாம்.

இதையும் படிங்க : தமிழ்நாடு பட்ஜெட் நடைமுறை.. சட்டப்பேரவையில் என்ன நடக்கும்? தாக்கல் முதல் ஒப்புதல் வரை ஒரு பார்வை!

பிஎஃப் வட்டி வந்துவிட்டதா? – செக் செய்வது எப்படி?

  1. முதலில் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தின் இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  2. இணையதளத்தில் பயனர்கள் தங்களது யுஏஎன் எண், கடவுச்சொல் மற்றும் கேப்ட்சா ஆகியவற்றை பதிவிட்டு லாக் இன் செய்ய வேண்டும்.
  3. லாக் இன் செய்து உள்ளே சென்ற பிறகு e Passbook என்ற ஒரு ஆப்ஷன் தோன்றும். அதனை தேர்வு செய்ய வேண்டும்.
  4. அந்த பாஸ்புக்கில் உங்களது பிஎஃப் கணக்கில் எவ்வளவு உள்ளது, வட்டி வரவு வைக்கப்பட்டுள்ளதா உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் தெரிந்துக்கொள்ள முடியும்.

இதையும் படிங்க : தடையற்ற மருத்துவ சிகிச்சைக்கு ஆபா ஐடி ஏன் அவசியம்?.. ஆபா ஐடி என்றால் என்ன?

மேலே குறிப்பிடப்பட்டுள்ள முறையை பின்பற்றி வீட்டில் இருந்தபடியே உங்களது பிஎஃப் கணக்கு வட்டி குறித்து தெரிந்துக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us