தடையற்ற மருத்துவ சிகிச்சைக்கு ஆபா ஐடி ஏன் அவசியம்?.. ஆபா ஐடி என்றால் என்ன?
Aadhaar Registrations In Hospital For Continuous Treatment | மருத்துவமனைகளில் ஆதார் எண்ணை பதிவு செய்து ஆபா ஐடி பெறுவதன் மூலம் இந்தியாவின் எந்த பகுதியில் இருந்து தடை இல்லாமல் தொடர் சிகிச்சைகளை பெற முடியும் என மத்திய அரசு கூறுகிறது.
இந்திய குடிமக்களுக்கான மிக முக்கிய ஆவணமாக ஆதார் கார்டு (Aadhaar Card) உள்ளது. குழந்தையை பள்ளியில் சேர்ப்பது முதல் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது, அரசின் நலதிட்டங்களை பெறுவது என பல தேவைகளுக்கு ஆதார் மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. இந்த நிலையில், வாழ்நாள் முழுவதும் சிகிச்சைக்கு உதவும் வகையில் மருத்துவமனைகளில் ஆதார் பதிவு செய்வது எப்படி, அதன் முக்கிய அம்சங்கள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தொடர் சிகிச்சை பெற ஆதார் பதிவு மிக அவசியம்
மருத்துவமனைகளில் ஆதார் எண் அளித்து, ஆபா ஐடி உருவாக்குவதம் மூலம் உலகின் எந்த பகுதியில் இருந்தும் முந்தைய சிகிச்சைகளை பார்த்து தொடர் சிகிச்சைகளை பெற முடியும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் திட்டத்தின் கீழ், ஹெச்.எம்.ஐ.எஸ் என்ற சுகாதார மேலாண்மை அமைப்பை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த அமைப்பின் மூலம், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் இருந்து ஆதார் கார்டு பெறப்பட்டு அதன் மூலம் ஆபா ஐடி உருவாக்கப்படுகிறது.
இதையும் படிங்க : “மகளிருக்கு மாதம் ₹2,500!”.. தவெக அரசின் முதல் பட்ஜெட்டில் காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி!
தடையற்ற மருத்துவ சிகிச்சைக்கு ஆபா ஐடி ஏன் அவசியம்?
இந்த ஐடி உருவாக்கப்பட்ட நபரின் மருத்துவ சிகிச்சை விவரங்கள் சேகரிக்கப்படும். அவை, ஹெச்.எம்.ஐ.எஸ் தகவல் அமைப்பி சேகரித்து வைக்கப்படும். தனியார் மருத்துவமனைகள் தனித்தனியாக தகவல் அமைப்பை பயன்படுத்தினாலும், அவையும் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆபா ஐடி உள்ள நபரின் மருத்துவ சிகிச்சை குறித்த விவரங்களை எந்த மருத்துவமனை வேண்டுமானாலும் மிக சுலபமாக தெரிந்துக்கொண்டு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்க முடியும்.
இதையும் படிங்க : SSY : செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் இப்படி முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம்.. முழு விவரம் இதோ!
அனைத்து மருத்துவமனைகளிலும் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் இருந்து ஆதார் எண் பெற்று, ஆபா ஐடி உருவாக்கி நோயாளிகளின் சிகிச்சை விவரங்களை சேகரிக்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.