உரிய நேரத்தில் க்ளெய்ம் வழங்காததால் 6% வட்டி.. நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Interest For Delayed PF Claim To EPFO | பிஎஃப் பணத்தை எடுக்க ஓய்வு பெற்ற ஊழியர் ஒருவர் விண்ணப்பித்த நிலையில், அவருக்கு க்ளெய்ம் வழங்க கால தாமதமானதால் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் அவருக்கு 6 சதவீதம் வட்டி வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லட்சக்கணக்கான உழியர்கள் பயன்பெறும் அமைப்பாக ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் (EPFO – Employee Provident Fund Organization) செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் தான், ஊழியர்களின் நலனுக்கான முக்கிய அறிவிப்பு ஒன்றை இபிஎஃப்ஓ அமைப்புக்கு நீதிமன்றம் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் பிஎஃப் (PF – Provident Fund) கணக்கு வைத்திருக்கும் ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி கிடைத்துள்ளது. இந்த நிலையில், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்திற்கு நீதிமன்றம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு என்ன, அது ஊழியர்களுக்கு எந்த வகையில் பயனளிக்கும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இபிஎஃப்ஓ அமைப்புக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
இபிஎஃப்ஓ அமைப்பில் கணக்கு வைத்திருந்த ஓய்வு பெற்ற ஊழியர் ஒருவர் தனது பிஎஃப் பணத்தை எடுக்க இணையதள மூலம் விண்ணப்பித்துள்ளார். இந்த கோரிக்கையை நிறைவேற்ற 35 நாட்கள் ஆகியுள்ளது. இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது, தாமதமான நாட்களுக்கு 6 சதவீதம் வட்டியுடன் சேர்த்து தொகையை வழங்க வேண்டும் என அறிவித்துள்ளது.
இதையும் படிங்க : உலக பணக்காரர் பட்டியல்.. தட்டித்தூக்கும் எலான் மஸ்க்.. பேஸ்புக் ஓனர் நிலை என்ன? லிஸ்ட் இதோ!




20 நாட்களில் தீர்வு காணாததால் அதிரடி நடவடிக்கை
ஃப்ளீட் மேரிடைம் சர்வீஸ் என்ற நிறுவனத்தில் அவர் பணிபுரிந்து வந்துள்ளார். அவர் பணி ஓய்வு பெற்ற நிலையில், தனது பிஎஃப் கணக்கில் இருந்த ரூ.14,06,272 எடுக்க அக்டோபர் 19, 2026 அன்று விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளார். இபிஎஃப் திட்டம், 1952-ன் விதிகளின்படி, இத்தகைய கோரிக்கைகளுக்கு 20 நாட்களுக்குள்ளாக தீர்வு காண வேண்டும். ஆனால், அவருக்கு டிசம்பர் 14, 2016 அன்று தான் பணம் கிடைத்துள்ளது.
கால தாமதத்திற்கு 6 சதவீதம் வட்டி வழங்க வேண்டும் – நீதிமன்றம்
இது தொடர்பாக அவர் நுகர்வோர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அப்போது தங்களுக்கு ஆவணம் கிடைக்க தாமதமானதால், பிஎஃப் க்ளெய்ம் வழங்க கால தாமதமானதாக இபிஎஃப்ஓ அமைப்பு விளக்கம் அளித்துள்ளது. ஆனால், அதற்கான எழுத்துப்பூர்வ ஆதாரம் எதுவும் இல்லாததன் காரணமாக இபிஎஃப்ஓ வாதத்தை நிராகரித்த நீதிமன்றம் அவருக்கு 6 சதவீதம் வட்டி வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.