AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

HDFC வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்.. இத உடனே செக் பண்ணுங்க!

HDFC Bank Reduced 10 Bps From Its MCLR | எடிசிஎஃப்சி வங்கி தனது எம்சிஎல்ஆர் விகிதத்தை குறைந்துள்ளது. இந்த மாற்றம் செய்யப்பட்ட எம்சிஎல்ஆர் விகிதம் செப்டம்பர் 07, 2026 முதல் அமலுக்கு வந்துள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

HDFC வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்.. இத உடனே செக் பண்ணுங்க!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 08 Sep 2026 11:43 AM IST

எச்டிஎஃப்சி வாடிக்கையாளர்களுக்கு அந்த வங்கி மிகவும் மகிழ்ச்சிகரமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, தனது எம்சிஎல்ஆர் (MCLR – Marginal Cost Of Funds- based Lending Rates) விகிதத்தில் 10 அடிப்படை புள்ளிகளை குறைத்துள்ளது. இதன் மூலம் எம்சிஎல்ஆர் மையப்படுத்தி கடன் வாங்கியவர்கள் பயடைவார்கள். இந்த மாற்றம் செய்யப்பட்ட வட்டி விகிதம் செப்டம்பர் 07, 2026 முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில், எச்டிஎஃப்சி வங்கி மேற்கொண்டுள்ள இந்த முக்கிய மாற்றம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

எம்சிஎல்ஆர் சதவீதத்தை குறைத்த எச்டிஎஃப்சி வங்கி

அடிப்படை புள்ளி என்பது சதவீதத்தில் ஒரு பங்கு ஆகும். அதாவது, 100 அடிப்படை புள்ளிகள் சேர்ந்ததுதான் ஒரு சதவீதம். தற்போது எச்டிஎஃப்சி வங்கி வட்டி விகிதத்தில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதன் காரணமாக எம்சிஎல்ஆர் வட்டி விகிதம் 7.90 சதவீதம் முதல் 8.60 சதவீதமாக உள்ளது. இது முன்னதாக 8 சதவீதம் முதல் 8.65 சதவீதமாக இருந்தது.

இதையும் படிங்க : மூத்த குடிமக்கள் FD திட்டம்.. சிறந்த வட்டி வழங்கும் இரண்டு வங்கிகள்.. முழு விவரம் இதோ!

எச்டிஎஃசி வங்கியின் செப்டம்பர் எம்சிஎல்ஆர் விகிதம்

  • எச்டிஎஃப்சியின் ஒரு மாத எம்சிஎல்ஆர் விதிகம் 8 சதவீதத்தில் இருந்து 7.90 சதவீதமாக குறைந்துள்ளது.
  • மூன்று மாதங்கள் கால அளவுக்கு எம்சிஎல்ஆர் விகிதம் 8.15 சதவீதத்தில் இருந்து 8.05 சதவீதமாக குறைந்துள்ளது.
  • ஆறு மாதங்கள் கால அளவுக்கு எம்சிஎல்ஆர் விகிதம் 8.30 சதவீதத்தில் இருந்து 8.25 சதவீதமாக குறைந்துள்ளது.
  • ஒரு ஆண்டு கால அளவுக்கு எம்சிஎல்ஆர் விகிதம் 8.40 சதவீதத்தில் இருந்து 8.35 சதவீதமாக குறைந்துள்ளது.
  • இரண்டு ஆண்டுகள் கால அளவுக்கு எம்சிஎல்ஆர் விகிதம் 8.55 சதவீதத்தில் இருந்து 8.45 சதவீதமாக குறைந்துள்ளது.
  • மூன்று ஆண்டுகள் கால அளவுக்கு எம்சிஎல்ஆர் விகிதம் 8.65 சதவீதத்தில் இருந்து 8.60 சதவீதமாக குறைந்துள்ளது.

இதையும் படிங்க : SIP முதலீடு.. மாதம் ரூ.50,000 சம்பாதிக்கும் நபர் கோடீஸ்வரர் ஆக முடியுமா?.. முழு விவரம் இதோ!

எம்சிஎல்ஆர் என்றால் என்ன?

எம்சிஎல்ஆர் என்பது குறைந்தபட்ச கடன் வழங்கும் வட்டி விகிதம் ஆகும். இதனை 2016 ஆம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி (RBI – Reserve Bank Of India) அறிமுகம் செய்தது. இந்த அம்சத்துடன் இணைக்கப்பட்ட கடன்கள், இதன் வட்டி விகிதத்தில் ஏற்படும் மாற்றத்திற்கு ஏற்ப வட்டி விகித உயர்வு, தாழ்வுகளை சந்திக்கும்.

Follow Us