AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மூத்த குடிமக்கள் FD திட்டம்.. சிறந்த வட்டி வழங்கும் இரண்டு வங்கிகள்.. முழு விவரம் இதோ!

Senior Citizen Fixed Deposit Schemes | இந்தியாவில் உள்ள பல்வேறு வங்கிகள் மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்பு நிதி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், மூத்த குடிமக்கள் எஃப்டி திட்டங்களுக்கு அதிக வட்டி வழங்கும் இரண்டு வங்கிகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

மூத்த குடிமக்கள் FD திட்டம்.. சிறந்த வட்டி வழங்கும் இரண்டு வங்கிகள்.. முழு விவரம் இதோ!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 06 Sep 2026 20:08 PM IST

மனிதர்களுக்கு எப்போதுமே நிதி தேவை இருந்துக்கொண்டே தான் இருக்கும். எனவே தான் ஒவ்வொருவரும் தங்களுக்கான நிதி பாதுகாப்பை உருவாக்க வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது. அதிலும் குறிப்பாக முதியவர்கள் தங்களது முதுமை காலத்தில் நிதி பாதுகாப்புடன் இருக்க முதலீடு செய்ய வேண்டும் என கூறப்படுகிறது. இதற்காக முதியவர்களுக்கென பிரத்யேகமான திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன. அதுமட்டுமன்றி, அந்த திட்டங்களுக்கு அதிக வட்டியும் வழங்கப்படுகிறது. இந்த நிலையில், அதிக வட்டியுடன் கூடிய முதியவர்களுக்கான நிலையான வைப்பு நிதி திட்டங்கள் (Senior Citizen Fixed Deposit Schemes) குறித்து விரிவாக பார்க்கலாம்.

முதியவர்களுக்கான அதிக வட்டி எஃப்டி திட்டங்கள்

ஃபெடரல் பேங்

ஃபெடரல் பேங்க் (Federal Bank) மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு 3.50 சதவீதம் முதல் 7.20 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. இந்த வங்கி, அதிகப்படியாக 48 மாதங்களுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு 7.20 சதவீதம் வட்டி வழங்குகிறது.

எச்டிஎஃப்சி வங்கி

எச்டிஎஃப்சி வங்கி (HDFC Bank) மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு 3.25 சதவீதம் முதல் 7.10 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. இந்த வங்கி, அதிகப்படியாக 48 மாதங்களுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு 7.10 சதவீதம் வட்டி வழங்குகிறது.

இதையும் படிங்க : ரேஷன் கார்டு விண்ணப்பங்களில் புதிய மாற்றம்.. கவலையே வேண்டாம்.. இனி அலையத் தேவையில்லை!!

ஃபெடரல் Vs எச்டிஎஃப்சி – திட்டம் வாரியான வட்டி விகிதங்கள்

வங்கி  திட்டம்  வட்டி விகிதம் 
ஃபெடரல் வங்கி 181 நாட்களுக்கான எஃப்டி திட்டம் 6.50%
ஃபெடரல் வங்கி 1 ஆண்டுக்கான எஃப்டி திட்டம் 6.75%
ஃபெடரல் வங்கி 15 மாதங்களுக்கான எஃப்டி திட்டம் 7.15%
ஃபெடரல் வங்கி 24 மாதங்கள் முதல் 48 மாதங்களுக்கான எஃப்டி திட்டம் 7%
ஃபெடரல் வங்கி 48 மாதங்களுக்கான எஃப்டி திட்டம் 7.20%
எச்டிஎஃப்சி வங்கி 6 மாதங்கள் முதல் 9 மாதங்களுக்கான எஃப்டி திட்டம் 6%
எச்டிஎஃப்சி வங்கி 1 வருடம் முதல் 15 மாதங்கள் வரையிலான எஃப்டி திட்டம் 6.75%
எச்டிஎஃப்சி வங்கி 15 மாதங்கள் முதல் 18 மாதங்கள் வரையிலான எஃப்டி திட்டம் 6.85%
எச்டிஎஃப்சி வங்கி 18 மாதங்கள் முதல் 3 வருடங்கள் வரையிலான எஃப்டி திட்டம் 6.95%
எச்டிஎஃப்சி வங்கி 3 ஆண்டுகள் முதல் 4 ஆண்டுகள் 7 மாதங்கள் வரையிலான திட்டம் 7.10%

இதையும் படிங்க : அஞ்சலக மாதாந்திர வருமான திட்டம் – கணக்குதாரர் இறந்தால் யாருக்கு பணம் கிடைக்கும்?

ஃபெடரல், எச்டிஎஃப்சி ஆகிய இரண்டு வங்கிகளுமே மூத்த குடிமக்களுக்கு சிறந்த வட்டியுடன் கூடிய நிலையான வைப்பு நிதி திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us