AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

டிசம்பரில் தங்கம் விலை எப்படி இருக்கும்.. Emkay Wealth வெளியிட்ட ஷாக் கணிப்பு!

What Will Be Gold Price In December 2026 | தங்கம் விலை நாளுக்கு நாள் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில், டிசம்பர் மாதம் தங்கம் விலை எப்படி இருக்கும் என்பது குறித்த கணிப்பு வெளியாகியுள்ளது.

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 05 Sep 2026 12:00 PM IST
தங்கம் விலை கடும் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. 2026 தொடக்கத்தில் ஒரு கிராம் தங்கம் ரூ.15,000-த்தை தாண்டி விற்பனை செய்யப்பட்ட நிலையில், அதன் பிறகு விலை உயர்வது, சரிவை சந்திப்பது என நிலையற்ற தன்மையில் தங்கம் உள்ளது. தங்கம் தற்போது விலை குறைவாக இருந்தாலும் ஆண்டின் இறுதியில் கடும் விலை உயர்வை சந்திக்கும் என நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

1 / 5
இந்த நிலையில் தான், ஆண்டின் இறுதியில் அதாவது டிசம்பர் மாதத்தில் தங்கம் விலை எப்படி இருக்கும் என்பது குறித்து Emkay Wealth Management நிறுவனம் ஷாக் தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது, இனி வரும் நாட்களில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகளின் போக்கு எப்படி இருக்கும் என்பதற்கான கணிப்பை அது வெளியிட்டுள்ளது. 

2 / 5
அதன்படி, தங்கம் விலையில் திருத்தம் மற்றும் குறுகிய கால ஏற்ற, இறக்கங்கள் இருந்தாலும் தங்கம் மற்றும் வெள்ளி போன்ற விலை உயர்ந்த உலோகங்கள் நீண்ட கால அடிப்படையில் விலை உயர்வை சந்திக்க தான் போகின்றன என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது. மத்திய வங்கிகளின் தொடர்ச்சியான தேவை மற்றும் உலகளாவிய வட்டி விகித எதிர்ப்பார்ப்புகள் தங்கம் மற்றும் வெள்ளிக்கு வலுவான ஆதரவை வழங்குவதாக கூறியுள்ளது.

3 / 5
குறிப்பாக உலகளாவிய சந்தையில், இந்த ஆண்டு இறுதிக்குள் அதாவது டிசம்பர் மாதம் தங்கம் விலை தற்போது இருப்பதை விட 12 சதவீதம் வரை உயர்வை சந்திப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது. அப்படியென்றால் தங்கம் ஒரு கிராம் ரூ.16,083-க்கு விற்பனை செய்யப்படும். ஒரு சவரன் ரூ.1.29 லட்சத்தை எட்டும்.

4 / 5
மத்திய வங்கிகள் நீண்ட காலத்திற்கு வட்டி விகிதங்களை குறைக்க திட்டமிடும் பட்சத்தில் உலக முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தின் மீது திரும்பும். இதன் காரணமாக தங்கம் விலை மீண்டும் உயர்வை சந்திக்கும். எனவே, டிசம்பர் மாதத்திற்குள்ளாக தங்கம் விலை 12 சதவீதம் உயர்வை சந்திக்கும் என Emkay Wealth கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

5 / 5
Follow Us