AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மதுபிரியர்களே கவனிக்க.. 3 நாள்கள் மதுக்கடைகள் செயல்படாது.. மதுரை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

Madurai District TASMAC Shops Closed : மதுரை மாவட்டத்தில் 3 நாள்கள் டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுபார்கள் செயல்படாது என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில், எந்தெந்த நாள்களில் கடைகள் செயல்படாது என்ற முழு விவரத்தை இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம்.

மதுபிரியர்களே கவனிக்க.. 3 நாள்கள் மதுக்கடைகள் செயல்படாது.. மதுரை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
மாதிரி புகைப்படம்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 22 Oct 2026 21:24 PM IST

தமிழகத்தில் தேவர் ஜெயந்தி, மருது பாண்டியர்கள் குருபூஜை ஆகியவை கொண்டாடப்பட உள்ளது. இதன் காரணமாக மதுரை மாவட்டத்தில் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுபான பார்கள் செயல்படாது என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, வருகிற அக்டோபர் 27, 29 மற்றும் 30- ஆம் தேதிகளில் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மற்றும் தனியார் பார்கள் செயல்படாது. ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னி ஒவ்வொரு ஆண்டும் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழா மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்படுவது வழக்கம் ஆகும். அதன்படி, இந்த ஆண்டு வரும் அக்டோபர் 30- ஆம் தேதி பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழா கொண்டாடப்பட உள்ளது. இந்த நிகழ்வில், முதல்வர் விஜய் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழா

தமிழகத்தின் முதல் முறை முதல் அமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய் முதல் முறையாக முத்துராமலிங்க தேவர் குருபூஜை நிகழ்வில் பங்கேற்க இருப்பதால் இந்த நிகழ்வுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிகழ்வில் பங்கேற்கபதற்காக முதல்வன் விஜய் விமானம் மற்றும் ஹெலிகாப்டர் மூலமாக சென்னையில் இருந்து பசும்பொன்னுக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக ஹெலிபேடுகள் அமைக்கும் பணி, பாதுகாப்பு பலப்படுத்தும் பணி உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் படிக்க: அரசியல் கட்சியாக மாறும் வீ த லீடர்ஸ்.. தமிழகத்தில் உண்மையான மாற்று அரசியல் வரும்.. மகளிர் மாநாட்டில் அண்ணாமலை அதிரடி!

பசும்பொன்னுக்கு வரும் முதல் அமைச்சர் விஜய்

இந்த விழாவில், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்க உள்ளனர். முதல்வர் விஜயும் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்த உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதன் காரணமாக ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் பல்வேறு கட்ட முன்னேற்பாடுகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை விமான நிலையத்துக்கு முதல் விஜய் வருகை தர உள்ளார்.

தேவர் குருபூஜை முன்னேற்பாடுகள் தீவிரம்

மதுரையில் இருந்து தனி ஹெலிகாப்டர் மூலமாக பசும்பொன்னுக்கு வருகை தர உள்ளார். இதன் காரணமாக ஹெலிகாப்டர் இறங்கு தளம், இரும்பு தடுப்புகள், இரும்பு தடுப்பு வேலிகள் உள்ளிட்டவை காவல்துறை சார்பில் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த இடத்தில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும், நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகள் மற்றும் முதல்வர் வருகைக்கான முன்னேற்பாடுகளை முடுக்கி விட்டுள்ளனர்.

மேலும் படிக்க: புதிய தலைமை செயலகம் குறித்த RTI கேள்விக்கு பகீர் பதில்.. யூ டர்ன் போடும் தவெக அரசு.. நயினார் நாகேந்திரன் விளாசல்!

Follow Us