AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கடன் சிக்கலில் இருந்து வெளியே வர முடியவில்லையா?.. இந்த விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க!

Daily Habits Which Helps To Repay Loan | நிதி தேவைக்காக கடன் வாங்கிவிட்டு அதனை திருப்பி செலுத்த முடியாமல் பலரும் மிக கடுமையான சிக்கல்களை எதிர்க்கொள்கின்றனர். இந்த நிலையில், கடனை அடைக்க உதவி செய்யும் சில முக்கிய அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

கடன் சிக்கலில் இருந்து வெளியே வர முடியவில்லையா?.. இந்த விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 04 Sep 2026 19:09 PM IST

குறைந்த சம்பளம், விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றின் காரணமாக, பலரும் தங்களது மாத தேவைக்கு கடன் வாங்கும் சூழலுக்கு தள்ளப்படுகின்றனர். அவ்வாறு கடன் வாங்கும் நபர்கள், அந்த கடனை திருப்பி செலுத்த முடியாமல் கடன் சுமையில் சிக்கிக்கொள்கின்றனர். இந்த நிலையில் இருந்து எப்படி வெளியே வருவது என தெரியாமல் மிக கடுமையான மன உளைச்சலுக்கும் ஆளாகின்றனர். இந்த நிலையில், கடன் சுமையில் இருந்து வெளியே வர உதவும் சில முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

கடன் சுமையை குறைக்க உதவும் முக்கிய அம்சங்கள்

இந்த சில விஷயங்களை பின்பற்றும்போது, உங்களது சிக்கலாக இருக்கும் கடன் சுமையை உங்களால் குறைக்க முடியும்.

கடன்களை ஒருமுகப்படுத்துவது

பலரும் தங்களுக்கு எப்போதெல்லாம் நிதி தேவை ஏற்படுகிறதோ அப்போதேல்லாம் சிறிய சிறிய கடனை பெற்று பெரிய சிக்கலில் சிக்கிக்கொள்கின்றனர். இந்த சிக்கலில் இருந்து வெளியே வர ஒரே வழி தான் உள்ளது. அதுதான் கடன்களை ஒருமுகப்படுத்துவது. அதாவது, ஒன்றுக்கும் மேற்பட்ட கடன்களை ஒரே கடனாக மாற்றி திருப்பி செலுத்துவது.

இதையும் படிங்க : காசை கரியாக்கும் “Impulsive Buying”.. அதிக செலவுகளை தவிர்க்க உதவும் 3 வழிகள்!

அதிகமாக கடனை திருப்பி செலுத்துதல்

கடனை திருப்பி செலுத்தும்போது குறைந்தபட்ச மாத தவணை உடன் இணைந்து கூடுதலாக கட்டணம் செலுத்துவது கடனை விரைவில் அடைக்க வழிவகை செய்யும். அதாவது, கூடுதலாக கடனை திருப்பி செலுத்தும் பட்சத்தில் அசலில் இருந்து தொகை கழிக்கப்படும். எனவே, இதன் மூலம் சுலபமாக கடனை அடைக்க முடியும்.

இதையும் படிங்க : செப்-4-ல் 45 நிமிடம் யுபிஐ செயல்படாது.. எஸ்பிஐ வங்கி முக்கிய அறிவிப்பு!

செலவுகளை கண்காணிப்பது

திடீரென நம்முடைய வருமானத்தை கூட்டுவது எளிதான விஷயம் அல்ல. ஆனால், செலவுகளை கட்டுப்படுத்துவதன் மூலம் நிதி சுமையில் இருந்து மிக சுலபமாக வெளியே வர முடியும். எனவே ஒவ்வொரு மாதம் சம்பளம் வந்த உடன் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் பணத்தை எடுத்து வைத்துக்கொண்டு மீதமுள்ள பணத்தை கடனை அடைப்பதற்காக பயன்படுத்திக்கொள்ளலாம்.

குறைந்த விகித கடன்களை பெறுவது

அதிக வட்டி விகிதம் கொண்ட கடனை திருப்பி செலுத்துவது மிகவும் சவாலானதாக இருக்கும். எனவே, குறைந்த வட்டியில் கடன் கிடைத்தால், அந்த கடனை பெற்று அதிக வட்டி கடனை திருப்பி செலுத்திவிடுங்கள். இது கடன் சுமையை குறைக்க உதவி செய்யும்.

Follow Us