Gold Price : தங்கம் ரூ.2,320, வெள்ளி ரூ.5,000 உயர்வு.. இன்றைய விலை நிலவரம் என்ன?
Gold and Silver Price Hiked In Chennai Today | சென்னையில் இன்று (செப்டமர் 03, 2026) தங்கம் மற்றும் வெள்ளி அதிரடி விலை உயர்வை சந்தித்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
சென்னை, செப்டம்பர் 03 : சென்னையில் நாளுக்கு நாள் தங்கம் விலை (Gold Price) மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை (Silver Price) அதிரடி உயர்வை சந்தித்துள்ளது. அதாவது, தங்கம் ரூ.2,320 உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி விலை ரூ.5,000 உயர்வை சந்தித்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கடும் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் தங்கம்
2026, ஆகஸ்ட் மாதத்தில் அதிரடி விலை உயர்வை சந்தித்த தங்கம் ஒரு கிராம் ரூ.15,000-க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வந்தது. அவ்வாறு தங்கம் விலை தொடர் உயர்வை சந்தித்து வந்த நிலையில், ஒரு கிராம் ரூ.16,000-த்தை தாண்டு என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், தங்கம் விலை டிவிஸ்ட் ஏற்பட்டது. அதாவது மாத தொடக்கத்தில் தொடர் உயர்வை சந்தித்து வந்த தங்கம், மாத இறுதியில் சரிவை சந்தித்தது.
இதையும் படிங்க : கிரெடிட் கார்டு கடனில் இருந்து வெளியே வர என்ன செய்ய வேண்டும்?.. இவற்றை ஃபாலோ பண்ணுங்க!
மீண்டும் டிவிஸ்ட் கொடுத்த தங்கம் விலை
குறிப்பாக நேற்று (செப்டம்பர் 02, 2026) கடும் சரிவை சந்தித்த தங்கம் ஒரு கிராம் ரூ.13,950-க்கும், ஒரு சவரன் ரூ.1,11,600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் காரணமாக தங்கம் விலை குறைந்தது என நகை பிரியர்கள் மகிழ்ச்சியில் இருந்த நிலையில் தான் இன்று மீண்டும் டிவிஸ்ட் கொடுக்கும் விதமாக தங்கம் விலை அதிரடி விலை உயர்வை சந்தித்துள்ளது.
இதையும் படிங்க : இபிஎஃப்ஓ 3.0 அம்சம் எப்போது அமலுக்கு வரும்.. வெளியான முக்கிய தகவல்.. என்ன தெரியுமா?
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்
சென்னையில் இன்று (செப்டம்பர் 03, 2026) 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.290 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,240-க்கும், சவரனுக்கு ரூ.2,320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,13,920-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல 24 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.15,535-க்கும், ஒரு சவரன் ரூ.1,24,280-க்கும் விற்பனை செய்யப்படுகிறது குறிப்பிடத்தக்கது.