இபிஎஃப்ஓ 3.0 அம்சம் எப்போது அமலுக்கு வரும்.. வெளியான முக்கிய தகவல்.. என்ன தெரியுமா?
When Will EPFO 3.0 Will Come For Use | ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப பல்வேறு புதிய புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்த நிலையில், இபிஎஃப்ஓ 3.0 அம்சம் எப்போது அறிமுகமாகும் என்பது குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தில் (EPFO – Employee Provident Fund Organization) பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தான், ஊழியர்கள் மிக விரைவாக பிஎஃப் (PF – Provident Fund) பணத்தை எடுத்துக்கொள்ள, யுபிஐ (UPI – Unified Payment Interface) மூலம் பிஎஃப் பணத்தை எடுக்கும் அம்சத்தை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இது தொடர்பான அறிவிப்பு வெளியானது முதலே இந்த முறை எப்போது அமலுக்கு வரும் என ஊழியர்கள் மத்தியில் மிகுந்த எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது. ஆனால், இந்த அம்சம் இன்னும் அமலுக்கு வரவில்லை. இந்த நிலையில் தான், அது தொடர்பான முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இபிஎஃப்ஓ 3.0 எப்போது அமலுக்கு வரும்?
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு பிஎஃப், ஓய்வூதியம் உள்ளிட்ட சலுகைகளை வழங்கி வருகிறது. இந்த பிஎஃப் பணத்தை எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. அவ்வாறு பிஎஃப் பணத்தை எடுக்க இணையதளம் மூலம் விண்ணப்பித்து வங்கி கணக்கில் பெற்றுக்கொள்ளலாம். இதற்கு சில நாட்கள் காத்திருக்க வேண்டும். இந்த நிலையில் தான், விரைவாகவும், சுலபமாகவும் பணத்தை எடுக்க வழிவகை செய்யும் நோக்கில் இபிஎஃப்ஓ 3.0 அம்சத்தை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் ஏடிஎம் மற்றும் யுபிஐ மூலம் பிஎஃப் பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.
இதையும் படிங்க : இந்தியாவின் 7.8% வளர்ச்சியால் பிரதமர் மோடி மகிழ்ச்சி.. சாதனை சாத்தியமானது எப்படி?




இறுதி கட்டப் பணிகளில் இபிஎஃப்ஓ 3.0 அம்சம்
செப்டம்பர் மாதத்திலாவது இந்த அம்சம் நடைமுறைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI – National Payment Corporation Of India) மற்றும் மத்திய தொழிலாளர் அமைச்சகத்தின் ஒருங்கிணைப்போடு உருவாக்கப்பட்ட இந்த புதிய இபிஎஃப்ஓ 3.0 அம்சம் இறுதி கட்டப் பணிகளில் உள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த அம்சத்திற்கான அடிப்படை டிஜிட்டல் தரவு தளங்கள் மேம்படுத்தப்பட்டு வரும் நிலையில், இந்த அம்சம் விரைவில் அமலுக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : மாதத்தின் முதல் நாள்.. சென்னையில் சிலிண்டர் விலை ரூ. 10.50 உயர்வு
இந்த அம்சம் அமலுக்கு வரும் பட்சத்தில் பணத்தை எடுக்க விண்ணப்பித்து, பணம் வரும்வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. போன்பே, கூகுள் பே, பேடிஎம் உள்ளிட்ட யுபிஐ செயலிகள் மூலமும் அல்லது ஏடிஎம் மூலமும் எடுத்துக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.