AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

இனி ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்பனை செய்யப்படும்.. தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

Onion Will Sell Through Ration Shops | ரேஷன் கடைகள் மூலம் அரிசி, பெருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இனி ரேஷன் கடைகள் மூலம் வெங்காயம் விற்பனை செய்ய உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இனி ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்பனை செய்யப்படும்.. தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 01 Sep 2026 15:47 PM IST

இந்திய பொதுமக்களுக்கு ரேஷன் கார்டு (Ration Card) திட்டம், ஒரு வரப்பிரசாதமாக உள்ளது. காரணம், ரேஷன் அட்டை வைத்திருக்கும் தகுதியான குடும்பங்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் மானிய விலையில் அரிசி, பருப்பு, கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்கப்படுகின்றன. வெளியே கடைகளில் கிடைப்பதை விடவும் ரேஷன் கடைகளில் மிக குறைந்த விலைக்கு இந்த உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதன் காரணமாக சாமானிய மக்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

ஏற்கனவெ அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படும் நிலையில், இனி வெங்காயத்தையும் விற்பனை செய்ய உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ரேஷன் கடைகள் மூலம் வெங்காயம் விற்பனை செய்ய முடிவு – அமைச்சர் அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் பேசினார். அப்போது கூறிய அவர், ஈரான் போரால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து செலவும் அதிகரித்துள்ளது. எனவே அதிக அளவில் வெங்காயம் உற்பத்தி செய்யும் மாநிலங்களான மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய பகுதிகளில் இருந்து வெங்காயம் வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக சந்தையில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.56 முதல் ரூ.60 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க : மாதத்தின் முதல் நாள்.. சென்னையில் சிலிண்டர் விலை ரூ. 10.50 உயர்வு

வெங்காயத்தை நியாயமான முறையில் விற்பனை செய்ய முடிவு

ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் நலனை கருத்தில் கொண்டு வெங்காயத்தின் விலை உயர்வை கட்டுப்படுத்தும் விதமாக தேசிய வேளாண்மை கூட்டுறவு விற்பனை நிலையம், தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு மூலம் முதற்கட்டமாக சுமார் 1,000 மெட்ரிக் டன் வெங்காயத்தை கொள்முதல் செய்து மக்களுக்கு நியாயமான முறையில் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க : ஐடி வேலையை உதறிவிட்டு பழ தோட்டம் அமைத்த நபர்.. ஆண்டுக்கு ரூ.60 கோடி வருமானம்.. சேத்தன் சாதித்தது எப்படி?

ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்ய திட்டம்

ஒரு கிலோ வெங்காயம் ரூ.35 என நகரப்பகுதிகளில் உள்ள கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலைகள், பிரதான விற்பனை பண்டக சாலைகள் வழியாக அமுதம் அங்காடிகள் மற்றும் நகரப் பகுதிகளில் அமைந்துள்ள ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us