தொழிலாளர்கள்- நெசவாளர்களுக்கு குட் நியூஸ்.. அமைச்சர்கள் வெளியிட்ட சூப்பர் அறிவிப்புகள்.. என்ன தெரியுமா?
Khadi and Labour Welfare Department : கதர் மற்றும் தொழிலாளர் நலத்துறைகளில் பல்வேறு புதிய அறிவிப்புகளை துறை அமைச்சர்களான விஜய் பாலாஜி மற்றும் முகமது பர்வேஸ் ஆகியோர் சட்டப்பேரவையில் வெளியிட்டனர். அது என்னென்ன அறிவிப்புகள் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
பேரவையில் அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர்கள்.
தமிழக சட்டப்பேரவையில் கதர் மற்றும் கிராம தொழில்கள் துறை உள்ளிட்ட துறைகள் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில், துறை அமைச்சர் விஜய் பாலாஜி புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில்,
மேலும் படிக்க: தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்.. கோவையில் கணக்கெடுப்பில் இறங்கிய அதிகாரிகள்.. விரைவில் தங்க மழை!
- திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜமுனா மரத்தூரில் ஜவ்வாது மலை தேன் அலகு ரூ. 25 லட்சம் மதிப்பில் மத்திய ஆணைய குழுவுடன் அமைக்கப்படும்.
- திருச்சி, சேலம், தஞ்சாவூரில் ரூ. 1 கோடியில் கதர் அங்காடிகள் புதுப்பிக்கப்படும்.
- திருநெல்வேலி மாவட்ட பனை பொருட்கள் விற்பனை கூட்டுறவு சம்மேளனத்தின் தூத்துக்குடி தலைமை அலுவலக கட்டடம் மற்றும் வள்ளியூர் பனைப் பொருட்கள் இருப்பு கிடங்கு ஆகியவை ரூ. 1 கோடியில் கட்டப்படும்.
- கதர், பட்டு உற்பத்தி பணிகளில் ஈடுபடும் நூற்பாளர்கள், நெசவாளர்களுக்கு நலநிதி பங்கு தொகை 12 சதவீதத்தில் இருந்து 16 சதவீதமாக உயர்த்தப்படும்.
- தமிழ்நாடு மாநில பனைவெல்லம் மற்றும் தும்பு விற்பனை இணையத்துக்கு கூட்டுறவு சொந்தமான இடங்களில் ரூ. 80 லட்சத்தில் 10 விற்பனை அங்காடிகள் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.
தொழிலாளர் நலத்துறை சார்ந்த அறிவிப்புகள்
இதே போல, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் முகமது பர்வேஸ் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதில்,
இதையும் படியுங்கள்

முதலமைச்சரான பின் முதல் வெளிநாட்டு பயணம்.. லண்டனில் முதலீட்டாளர்களை சந்திக்கும் CM விஜய்!

பொது மக்களுக்கு குட் நியூஸ்… ரேசன் கடைகளில் ரூ. 15- க்கு கோதுமை மாவு விற்பனை… தமிழக அரசு எடுத்த சூப்பர் முடிவு!

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்.. கோவையில் கணக்கெடுப்பில் இறங்கிய அதிகாரிகள்.. விரைவில் தங்க மழை!

முதல்வர் விஜய் பெயரில் லட்சக்கணக்கில் நூதன மோசடி. காவல் நிலையத்தில் குவியும் புகார்கள்.. வெளிவந்த திடுக்கிடும் உண்மை!
- தமிழக தொழிலாளர்கள் கட்டுமான திறமையை ஊக்குவிக்கும் வகையில், மாநில மற்றும் மாவட்ட அளவில் பல்வேறு கட்டுமான தொழில் பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டு முதல் 3 இடங்களை பெறும் நபர்களுக்கு ஆண்டுதோறும் முதல்வர் கட்டுமான தொழிலாளர் வெற்றி விருது மற்றும் பரிசுத்தொகை வழங்கப்படும்.
- பெரு நகரங்களுக்கு வேலை தேடி வரும் கட்டட தொழிலாளர்கள் பாதுகாப்பாக தங்குவதற்கு அடிப்படை வசதியுடன் கூடிய இரவு நேர தங்கும் இடங்கள் ரூ.14 கோடி மதிப்பீட்டில் சென்னை மற்றும் கோயம்புத்தூர் உள்ளிட்ட பெரிய நகரங்களில் அமைக்கப்படும்.
- தமிழக கட்டுமான தொழிலாளர் நல பதிவு செய்த வாரியத்தில் கட்டட தொழிலாளர்களுக்கு நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய சிறப்பு கட்டுமான திறன் பயிற்சி வழங்க 5 அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் ரூ. 76.46 கோடி மதிப்பீட்டில் கட்டுமான தொழில் திறன்மிகு மையங்கள் நிறுவப்பட உள்ளது.
- தமிழக இளைஞர்கள் அதிக அளவில் தனியார் துறை வேலைவாய்ப்புகளை பெறுவதற்காக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையங்கள் மூலமாக வேலை வாய்ப்புகள் முகாம் நடத்துவதற்கு ரூ.3.72 கோடி நிதி உயர்த்தி வழங்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டார்.
மேலும் படிக்க: முதலமைச்சரான பின் முதல் வெளிநாட்டு பயணம்.. லண்டனில் முதலீட்டாளர்களை சந்திக்கும் CM விஜய்!
Follow Us