AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மதுரையில் மாணவி தற்கொலை விவகாரம்.. தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்.. கல்வித்துறையில் பரபரப்பு!

Usilampatti School Headmistress Suspended : மதுரை மாவட்டத்தில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தி ல் உசிலம்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை சஸ் பெண்ட் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி வெளியிட்டார் .

மதுரையில் மாணவி தற்கொலை விவகாரம்.. தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்.. கல்வித்துறையில் பரபரப்பு!
கோப்புப்படம்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 01 Sep 2026 13:00 PM IST

மதுரை மாவட்டம், தொட்டப்ப நாயக்கனூரை சேர்ந்தவர் நிஷாந்தி. இவர், உசிலம்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தார். இந்த நிலையில், மாணவி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், பள்ளியின் தலைமை ஆசிரியை விமலா தேவியின் செயலால் மாணவி விபரீத முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விசாரணை நடத்துமாறு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, முதன்மை கல்வி அதிகாரி நடத்திய விசாரணையில், மாணவியின் பெற்றோர் கைகட்டி நிற்க வேண்டும் என்றோ, மாணவியரும் சமூகம் குறித்த தலைமை ஆசிரியை விமலா தேவி எதுவும் பேசவில்லை என்பதை உறுதி செய்யப்பட்டிருந்தது.

மாணவியின் பெற்றோரிடம் கடுமையாக நடந்த தலைமை ஆசிரியை

இதில், மாணவியின் பெற்றோரிடம் கடினமாக நடந்து கொண்டதாக தெரிகிறது. மாணவியின் பெற்றோரிடம் பொறுப்பற்ற முறையில் நடந்துள்ளார். அந்த மாணவியின் முன்னதாக அவர் ஏற்கனவே படித்த பள்ளியில் அவரின் கல்வி குறித்த விவரங்களை தலைமை ஆசிரியை கேட்டிருக்கக் கூடாது. புகார் தெரிவிக்க யார் வந்தாலும், உதவி தலைமை ஆசிரியர் மூலமாக பிரச்சனைகளை விசாரித்து அதன் பின்னரே நடவடிக்கை எடுக்கலாம் என்பதை தலைமை ஆசிரியர் முடிவு செய்ய வேண்டும்.

மேலும் படிக்க: முதலமைச்சரான பின் முதல் வெளிநாட்டு பயணம்.. லண்டனில் முதலீட்டாளர்களை சந்திக்கும் CM விஜய்!

பள்ளி தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்

இந்த விவகாரத்தில் தலைமை ஆசிரியர் சற்று கவனக்குறைவாக நடந்தது கல்வித் துறையின் விசாரணையில் தெரியவந்தது. அதன்படி, அரசு மாதிரி பள்ளி தலைமை ஆசிரியை விமலா தேவியை சஸ்பெண்ட் செய்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி தயாளன் உத்தரவு பிறப்பித்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், தலைமை ஆசிரியை குறித்து தெரிவிக்கும் புகாரில் எந்த முகாந்திரமும் கிடையாது. அவர் இந்த பள்ளிக்கு பணியிட மாறுதல் ஆகி வந்து சில மாதங்களே ஆகிறது. மாணவி நிஷாந்தியும் அந்த பள்ளிக்கு முதன்முதலாக சேர்க்கை கேட்டு சென்றுள்ளார்.

பள்ளி தலைமை ஆசிரியர்களுடன் ஆலோசனை

வெறும் 3 நிமிடங்கள் மட்டுமே மாணவியின் பெற்றோரிடம் தலைமை ஆசிரியை பேசி உள்ளார். மாணவியின் தற்கொலைக்கு தலைமை ஆசிரியையின் செயல்பாடு மட்டும் காரணம் இல்லை என்பது தெரிகிறது இது தொடர்பான துறை ரீதியான விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அரசு மேல்நிலைப்பள்ளி, உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்களிடம் புகார் கூற மற்றும் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் பெற்றோரிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: வாகன ஓட்டிகளுக்கு பேரதிர்ச்சி.. தமிழக சுங்கச்சாவடிகளில் மீண்டும் சுங்க கட்டணம் உயர்வு.. எவ்வளவு தெரியுமா?

Follow Us